- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 6.3.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதில் இருந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவும் புத்துணர்ச்சி பிறக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
மனதில் இருந்த கவலைகள் குறையும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கிய இன்னல்கள் விலகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். இடமாற்ற முயற்சி கைகூடும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிதுனம்
உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
சிம்மம்
உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகளால் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் விலகும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். திடீர் பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கன்னி
தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சாதனை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
சம வயதினர் மூலம் மாற்றமான தருணங்கள் உருவாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபார நிமித்தமான முதலீடுகள் மேம்படும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். எதிர்பாராத திடீர் பயணங்கள் மூலம் நெருக்கடிகள் தோன்றி மறையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விருச்சிகம்
பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபார முயற்சிகளில் சிறுசிறு மாற்றங்கள் உண்டாகும். சமூக பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். தோற்றப்பொழிவுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். காப்பீடு பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் காணப்படும். தந்தைவழி தொழில் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். நற்செயல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
தனுசு
உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர் விரும்பி வருவார்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் மறைமுக விமர்சனங்கள் உண்டாகும். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மகரம்
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சிந்தனை மனதில் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த இழுபறி குறையும். விவசாய பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். திருப்பணி செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசி கிடைக்கும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம்
புத்திரர்களால் அலைச்சல்கள் ஏற்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். பணியாட்கள் மூலம் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். தூர தேச பயண செயல்களில் விவேகம் வேண்டும். உயர்நிலை கல்வியில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். இணைய முதலீடுகளில் பொறுமை வேண்டும். செயல்படும் விதத்தில் மாற்றம் காணப்படும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மீனம்
சமூகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சகோதரர்கள் வழியில் ஒற்றுமை பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். பணி நிமித்தமான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்