சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இளையராஜா காம்போ என்றால் அப்படம் நிச்சயம் வெற்றி என்றே சொல்லலாம். ஆனால், இவர்கள் கூட்டணியில் வந்த ஒரு எவர்கிரீன் பாடலை ரஜினி வேண்டாம் என்று நிராகரித்திருக்கிறார். பலமுறை அப்பாடலைக் கேட்டும் ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆனால் இளையராஜா சொன்ன ஒற்றை வார்த்தையில் ரஜினி அப்பாடலை படத்தில் வைக்க சம்மதித்தார். ரஜினியின் கணக்கு தப்புக்கணக்காகி போனதால், அப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. அது என்ன பாடல் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோமா?
1992ல் 'மன்னன்' பட வேலைகள் நடந்தன. அப்போது இளையராஜா 'அம்மா என்றழைக்காத' பாடலின் ட்யூனை போட்டுக் காட்டினார். அந்த நேரத்தில் ரஜினி ஒரு மாஸ் ஹீரோவாக, ஆக்ஷன் படங்களில் பிஸியாக இருந்தார். பாடலைக் கேட்ட ரஜினி, 'ராஜா, இந்தப் பாடல் மெதுவாக உள்ளது, என் இமேஜுக்கு செட் ஆகுமா? ரசிகர்கள் ஏற்பார்களா? வேறு பாடல் செய்யலாமா?' எனக் கேட்டார். ரஜினி தயங்குவதைக் கண்ட இளையராஜா, 'இதுவரை நீங்கள் ஒரு கமர்ஷியல் ஹீரோ. இந்தப் பாடல் உங்களை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கொண்டு செல்லும். இது உங்களை வேறு உயரத்திற்குக் கொண்டு செல்லும்' என்றார்.
இளையராஜாவின் அசைக்க முடியாத நம்பிக்கையை ரஜினி ஏற்றுக்கொண்டார். 'மன்னன்' வெளியானதும், இளையராஜா சொன்னது உண்மையானது. வாலியின் வரிகள், ஜேசுதாஸின் குரல், ரஜினியின் நடிப்பு அப்பாடலை காவியமாக்கியது. குடும்ப ரசிகர்கள் ரஜினியை தங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்க, அவரது 'பேமிலி ஆடியன்ஸ்' பல மடங்கு அதிகரித்தது. அன்று இளையராஜா சொன்னது வெறும் ஆறுதல் வார்த்தை அல்ல, அது ஒரு மகத்தான கலைஞனின் பார்வை.