பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்
பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து இயக்கும் படத்துக்கு ‘மஞ்சணத்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வ ராஜ் வழங்கும் இந்தப் படத்தை ஃபார்சூன் என்டர் டெயின்மென்ட் நிறுவனத்தின் சுஷாந்த் பிரசாத் இணைந்து தயாரிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். சென்னையில் இளையராஜா நடத்திய இசை நிகழ்ச்சியில் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷுடன் மாரி செல்வராஜ் இணையும் வரலாற்றுத் திரைப்படத்தின் பணிகள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன. அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்துக்காக விரிவான முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அதற்கிடையே ‘மஞ்சணத்தி’ படம் உருவாக இருக்கிறது. இதில் கயாடு லோஹர், பிரியங்கா மோகன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
கனடா, இயற்கை எரிவாயு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சாதனை படைத்துள்ளது.
இந்த மார்ச் மாதத்தில் 775.12 மில்லியன் ஜிகா ஜூல்கள் அளவுக்கு கனடா எரிசக்தி உற்பத்தி செய்துள்ளது.
இது, 2025 மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது 5.6 சதவிகிதம் அதிகமாகும். பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13.8 சதவிகிதமும், ஆல்பர்ட்டாவில் 1.2 சதவிகிதமும் எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இப்போது கனடா, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே அதிக அளவில் எரிவாயு ஏற்றுமதி செய்துவருகிறது.
கனடா ஏற்றுமதி செய்யும் இயற்கை எரிவாயுவின் அளவு 7.4 சதவிகிதம் உயர்ந்து 339. 7 மில்லியன் ஜிகா ஜூல்களாக ஆகியுள்ளது.
கனடாவிலிருந்து அதிகம் எரிவாயு வாங்கும் நாடாக திகழும் அமெரிக்கா, மார்ச் மாதத்தில் மட்டும் 282.1 மில்லியன் ஜிகா ஜூல்கள் எரிவாயு வாங்கியுள்ளது. என்றாலும், 2025 மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது, இது 10.8 சதவிகிதம் குறைவு ஆகும். அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளுக்கு கனடா ஏற்றுமதி செய்யும் எரிவாயுவின் அளவு, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, சாதனை அளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே மாதத்தில் இரண்டு முறை பவுர்ணமி (முழு நிலவு) தோன்றினால், இரண்டாவது பவுர்ணமி நிலவு 'நீல நிலா' (Blue Moon) என்று அழைக்கப்படுகிறது.
சில நேரங்களில், பூமிக்கு மிகத் தொலைவில் நிலா இருக்கும்போது தோன்றும் 'நீல நிலா', அளவில் வழக்கமான நிலாவை விடச் சிறியதாகத் தோன்றலாம். இது 'மைக்ரோமூன்' (Micromoon) என்றும் அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான மாதங்களில் ஒரே ஒரு பவுர்ணமி மட்டுமே இருப்பதால், நீல நிலவுகள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்கின்றன. இதுவே அரிதாக நிகழும் நிகழ்வு. இந்த அதிசய நிகழ்வை தங்களது கண்களால் கண்டு ரசிக்க உலகெங்கிலும் உள்ள வானியலாளர்களும், பொதுமக்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மைக்ரோமூன்கள் ஒரு வருடத்தில் பலமுறை நிகழ்ந்தாலும், அவை நீல நிலவுடன் ஒரே நேரத்தில் நிகழ்வது அசாதாரணமானது என்று வானியலாளர்கள் கருதுகின்றனர்.
நிலவானது பூமியை வலம் வரும் தனது நீள்வட்டப் பாதையில், பூமிக்கு மிகத் தொலைவில் உள்ள புள்ளியை எட்டும்போது இந்த பவுர்ணமி நிகழ்கிறது. பூமியிலிருந்து 4 லட்சத்து 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு நிலவு தள்ளிச்செல்வதால், இது வழக்கத்தை விட சற்றே சிறியதாகவும் மங்கலாகவும் தோன்றக்கூடும்.
''சூரியன் மறைந்த பிறகு நிலவு கிழக்கு வானில் தோன்றும். அது சிறியதாகவும் மங்கலாகவும் தெரிந்தாலும், பெரும்பாலான மக்கள் அந்த வித்தியாசத்தைக் கவனிக்க மாட்டார்கள். இதே போன்ற ஒரு நீல நிற சிறுநிலவு மீண்டும் தோன்றுவதற்கு பத்தாண்டுகள் ஆகலாம்.
சூரியன் மறைந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, மொட்டை மாடிகள், கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் ஏரிக்கரைகளில் இருந்து நிலவைக் காணலாம். தொலைநோக்கி தேவையில்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்'' என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். முன்னதைாக கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி புளு மூன் நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.
மே 31 சாயங்காலம் முதல் ஜூன் 01 2026 இன்று அதிகாலை இப்போது காட்சியில் இருப்பது நீங்கள் பார்க்கும் நிலவு.
--ஆரோ.செல்வா.
நம் கைகளை வெறும் வேலை செய்வதற்கான ஒரு உறுப்பாகத்தான் நாம் பார்க்கிறோம். ஆனால், நம் முன்னோர்கள் நம் கைகளை பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் ஆன்டெனா ஆகப் பார்த்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஐந்து விரல்களும் பஞ்சபூதங்களையும், பிரபஞ்சத்தை இயக்கும் முக்கிய கிரகங்களையும் தங்களுக்குள் அடக்கியுள்ளன. நாம் செய்யும் ஒவ்வொரு "யோக முத்திரைக்கும்" பின்னால் ஒரு பெரிய வானியல் அறிவியலே இருக்கிறது!
வாருங்கள், எந்த விரல் எந்த கிரகத்தைக் குறிக்கிறது என்று பார்ப்போம்:
கட்டை விரல் – சூரியன் / செவ்வாய்:
• பஞ்சபூதம்: நெருப்பு (அக்னி)
• விளக்கம்: கட்டை விரல் உடலின் ஒட்டுமொத்த வெப்பத்தையும், உயிர்ச் சக்தியையும் குறிக்கிறது. ஆளுமைத் திறனைக் குறிக்கும் சூரியனும், வீரியத்தைக் குறிக்கும் செவ்வாயும் இந்த விரலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதனால்தான், எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெறும்போது நாம் கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறோம்.
ஆள்காட்டி விரல் – குரு:
• பஞ்சபூதம்: காற்று (வாயு)
• விளக்கம்: ஞானம், அறிவு, மற்றும் ஆன்மீகத்தின் காரகனான குரு பகவான் இந்த விரலை ஆளுகிறார். நாம் ஒருவருக்கு வழிகாட்டவோ, அல்லது ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டவோ இந்த விரலைப் பயன்படுத்துகிறோம். நம்முடைய தற்பெருமை மற்றும் அகங்காரமும் இந்த விரலோடு தொடர்புடையதுதான்.
நடு விரல் – சனி பகவான்:
• பஞ்சபூதம்: ஆகாயம் (ஆகாஷ்)
• விளக்கம்: நம் கைகளிலேயே மிக நீளமான விரல் இது. பொறுமை, கட்டுப்பாடு, மற்றும் நீதியின் தேவனான சனி பகவான் இந்த விரலை ஆளுகிறார். நம் வாழ்வின் கர்மவினைகளையும், ஒழுக்கத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த ஆகாய விரலுக்கு உண்டு.
மோதிர விரல் – சூரியன்:
• பஞ்சபூதம்: மண் (பிருத்வி)
• விளக்கம்: ஆற்றல், புகழ், மற்றும் ஆளுமையின் அதிபதியான சூரிய பகவான் மோதிர விரலை ஆளுகிறார். இந்த விரலின் நரம்பு நேரடியாக இதயத்தோடு இணைந்திருப்பதால் தான், நம் முன்னோர்கள் திருமணத்தின் போது இந்த விரலில் மோதிரம் அணியும் வழக்கத்தைக் கொண்டு வந்தார்கள். இது உடலுக்குப் பொலிவையும், மனதிற்குத் தைரியத்தையும் தரும்.
சுண்டு விரல் – புதன்:
• பஞ்சபூதம்: நீர் (ஜலம்)
• விளக்கம்: புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், மற்றும் வியாபாரத்திற்கு காரகனான புதன் பகவான் சுண்டு விரலை ஆளுகிறார். உடலில் உள்ள நீர்ச்சமநிலையைக் கட்டுப்படுத்துவது இந்த விரல்தான்.
முத்திரைகளின் ரகசியம்:
நாம் தியானம் செய்யும் போது ஏன் கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் இணைத்து "ஞான முத்திரை" வைக்கிறோம் என்று எப்போதாவது யோசித்ததுண்டா?
நெருப்பைக் குறிக்கும் கட்டை விரலும் (செவ்வாய்/சூரியன்), காற்றைக் குறிக்கும் ஆள்காட்டி விரலும் (குரு) இணையும் போது, அங்கே நம்முடைய அகங்காரம் அடங்கி, பிரபஞ்ச அறிவு (குருவின் ஆற்றல்) நம் உடலுக்குள் பாய்கிறது. இதுவே நம் மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது.
நம் கைகளே ஒரு மகா சக்தி வாய்ந்த கருவிதான்! இதை உணர்ந்து, சரியான முத்திரைகளைப் பயன்படுத்தி ஆரோக்கியமாகவும், ஆன்மீக விழிப்புணர்வோடும் வாழ்வோம்!
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர், பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வாகனத்தை மாற்ற வழி பிறக்கும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்.
ரிஷபம்: உறவினர், நண்பர்கள் வகையில் செலவு வரும். பிள்ளை களிடம் முன்கோபத்தை காட்டாதீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் தொந்தரவு தருவார்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்து காட்டுவீர். அவசரத்துக்கு வாங்கிய தொகையை தந்து முடிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்புயரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார்.
சிம்மம்: இங்கிதமாக பேசி எல்லோரையும் கவருவீர். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்.
கன்னி: தாழ்வு மனப்பான்மை நீங்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பூர்வீக வீடு, நிலம் தொடர்பான பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
துலாம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.
விருச்சிகம்: புதுப் புது யோசனைகளை தந்து உங்களைச் சுற்றியிருப்பவர்களை அசத்துவீர். பாதியில் நின்ற பணி முடியும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும்.
தனுசு: திட்டமிட்ட பணிகளை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சிறு சிறு கருத்துமோதல்கள் வரக் கூடும். பூர்வீக வீட்டை விற்பதற்கு முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் சக ஊழியர்களை குறை கூற வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரரின் கருத்தை கேட்பது நல்லது.
மகரம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவர். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர். மனைவி, தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டு. வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்.
கும்பம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். புது ஆடை ஆபரணங்களில் மனம் லயிக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மீனம்: மனதில் இருந்த பயம் நீங்கும். புதியவர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர். வாகனத்தால் வீண் செலவு இருக்காது. ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபாரத்தில் போட்டி குறையும். ஓரளவு லாபம் கிட்டும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 2.6.2026.
இன்று மாலை 06.39 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று இரவு 09.53 வரை மூலம். பின்னர் பூராடம்.
இன்று காலை 07.27 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று அதிகாலை 05.41 வரை தைத்தூலம். பின்னர் மாலை 06.39 வரை கரசை. பிறகு வணிசை.
இன்று இரவு 09.53 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
டொரண்டோவின் ரெக்ஸ்டேல் (Rexdale) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொரண்டோ காவல்துறை தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில், குவீன்ஸ் பிளேட் டிரைவ் மற்றும் ரெக்ஸ்டேல் பெலவூர்ட் சந்திப்புப் பகுதிக்கு அவசர உதவி கோரி காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அங்கு சோதனையிட்ட அதிகாரிகள், துப்பாக்கி குண்டுக் காயங்களுடன் இருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இச்சம்பவம் குறித்த கூடுதல் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு பின் முழு விபரங்கள் வெளியிடப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில், கனடாவின் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
ஏனைய நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் நிதி மற்றும் கடுமையான போட்டி இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
'Center for World University Rankings' (CWUR) வெளியிட்ட 2026-ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலில், தரப்படுத்தப்பட்ட கனடாவின் 38 பல்கலைக்கழகங்களில் 37 நிறுவனங்கள் கடந்த ஆண்டை விடக் கீழே இறங்கியுள்ளன.
ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டுமே தனது முந்தைய இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
டொரண்டோ பல்கலைக்கழகம் உலகளவில் 23-வது இடத்தைப் பிடித்து, கனடாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. இது மட்டுமே கடந்த ஆண்டு நிலையைத் தக்கவைத்துள்ளது. மெக்கில் பல்கலைக்கழகம் ஒரு இடம் சரிந்து 28-வது இடத்தைப் பிடித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் 48-வது இடத்திலிருந்து 49-வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
அல்பெர்ட்டா பல்கலைக்கழகம் உலகளவில் 82-வது இடத்தைப் பெற்றுள்ளது. மாண்ட்ரியல் பல்கலைக்கழகம் 126-வது இடத்தைப் பிடித்துள்ளது.
"கனடிய பல்கலைக்கழகங்களின் இந்த வீழ்ச்சி, பல வருடங்களாகப் போதிய நிதி வழங்கப்படாததையும், அறிவியல் மற்றும் கல்வியை பொது நலனுக்கானதாகக் கருதுவதில் ஏற்பட்டுள்ள குறைபாட்டையுமே காட்டுகிறது," என்று CWUR அமைப்பின் தலைவர் டாக்டர் நதிம் மஹாசென் (Dr. Nadim Mahassen) தெரிவித்துள்ளார்.
இது கல்வித்துறை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, ஒரு நாட்டின் தேசியப் பிரச்சனை. ஏனெனில் உயர்கல்வித் தரம் குறைவது நாட்டின் அறிவியல் வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் நீண்டகால எதிர்காலத்தைப் பாதிக்கும் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இப்பட்டியலில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து 15-வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் 4 மற்றும் 5-வது இடங்களைப் பெற்றுள்ளன.
ஒரு பெரியவர் எப்போது
பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி...,
"சிவபுராணம் படித்துக்
கொண்டே இருப்பார்".....!!
இளைஞன் ஒருவன்
பல நாட்களாக....,
" இதனை கவனித்துக்
கொண்டே இருந்தான்"....!!
ஒரு நாள் அவரிடம்
வந்து கேட்டான்....!!
" தாத்தா...!
"எப்பப் பாத்தாலும்
இந்த புத்தகத்தையே படிச்சிட்டு
இருக்கீங்களே".....,
"இதை எத்தனை
நாளா படிக்கிறீங்க"...? என்றான்.
பெரியவர் சொன்னார்,
" ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும் "....!!
அப்படின்னா....,
" இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே"....!!
"அப்புறம் ஏன்
இன்னும் படிக்கிறிங்க"..... ? என்றான்.
தாத்தா சிரித்தபடி கூறினார்,
" எனக்கு ஒரு உதவி செய்"....!!
"அதை நீ செஞ்சு முடிச்சப்புறம் நான்
பதில் சொல்றேன்".....!!
இளைஞன் கேட்டான்,
" என்ன உதவி தாத்தா.....? "
பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு
மூங்கில் கூடையை எடுத்தார்.
"அதில் அடுப்புக் கரி இருந்தது"......!!
அதை ஒரு மூலையில்
கொட்டினார்....!!
பல நாட்களாகக் கரியை
சுமந்து , சுமந்து.....,
" அந்தக் கூடையின்
உட்புறம் கருப்பாக மாறி இருந்தது"........!!
பெரியவர் சொன்னார்,
தம்பி....,
"அதோ அங்கே இருக்குற தண்ணீர் பைப்புல இருந்து".....,
" இந்தக்
கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன்" என்றார்...!!
"இளைஞனுக்கு சிரிப்பு வந்தது".....!!
இருந்தாலும் பெரியவர் சொல்லி
விட்டதால்.....,
எடுத்துச் சென்று
தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான்.
அவன் வந்து சேருவதற்கு முன்பே
எல்லா நீரும்........,
"மூங்கில் கூடையின் ஓட்டைகள் வழியே தரையில் ஒழுகிப்போனது".......!!
பெரியவர் சொன்னார்,
" இன்னும் ஒரே ஒரு முறை " .....,
இளைஞன்
மீண்டும் முயன்றான்.
ஆனால்,
" மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்".....?
"மீண்டும் கீழே கொட்டிப் போனது".....!!
பெரியவர் கேட்டார்,
" இந்த தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு
முறை மட்டும் தண்ணீர் நிரப்பி பாரேன் என்றார்.
இளைஞன் ஒரு
முடிவுக்கு வந்தான்.
"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி
செய்து விட்டு"......,
" திரும்பிப் பார்க்காமல்
ஓடிவிடுவோம்"....... !!
"அவர் எந்தப் புத்தகத்தைப்
படித்தால் எனக்கென்ன வந்தது"......?
தண்ணீர் பிடித்தான்.
வழக்கம் போலவே
எல்லாத் தண்ணீரும் தரையில்.
" தாத்தா,
"இந்தாங்க உங்க கூடை."....!!
" இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத்
தெரியுமா தெரியாதா"....?
"எதுக்கு என்னை இந்தப்
பாடு படுத்துறீங்க என்றான்".....!!
அவர் புன்னகையோடு சொன்னார்,
" இதுல தண்ணி நிற்காதுன்னு எனக்கும் தெரியும்"......!!
"நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப்
போகும் போது".......,
" இதோட உட்புறம் எப்படி இருந்தது? " என்றார்.
இளைஞன் சொன்னான் ,
" ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா
இருந்தது "
"இப்போ பார் "என்றார்.
தண்ணீர் பட்டு , பட்டுக் கரிக்கட்டைகளின் கறுப்பு நிறம் கலைந்து.......,
"கூடையின்
உட்புறம் சுத்தமாகி இருந்தது".......!!
பெரியவர் சொன்னார்,
" தம்பி,
நீ கேட்ட கேள்விக்கு பதில்
இதுதான்".......!!
எத்தனை முறை தண்ணீர்
பிடிச்சாலும்.......,
" மூங்கில் கூடை
நிரம்பவே இல்லை"......!!
ஆனாலும்...,
" ஒவ்வொரு
முறையும் நீரில் நனைய கூடை சுத்தமாயிடிச்சு".....!!
அது போலத்தான்....?
"எத்தனை முறை படிச்சாலும் முழு பகவத்கீதையும் மனப்பாடம் ஆயிடும்னு
சொல்ல முடியாது"......!!
"ஆனா படிக்கிற
ஒவ்வொரு முறையும்"......,
" உள்ளுக்குள்ள
இருக்கும் அழுக்கும்".......,
"கறையும்
சுத்தமாகிக்கிட்டே இருக்கும்" என்றார்......!!
அந்த வார்த்தைகளின் உண்மை........ ,
அந்த இளைஞனின் மனதில்
ஆழ்ந்து யோசிக்க செய்தது...!!
இறைநாமம் சொல்ல, சொல்ல...,
"நம் மன அழுக்குகள் அகலும்"...!!
பக்தி காவியங்கள் படிக்க, படிக்க.....,
"இறை சிந்தனை பெருகும்"....!!
"மனசஞ்சலம் விலகும்".....!!
நம் முன் வினைகள் அகலும்"....!!




