சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமை, காலத்துக்கேற்ற முடிவு - நஸீர் அஹமட்
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமை, காலத்துக்கேற்ற முடிவு, இது மூத்த தமிழ் தலைவர் சம்பந்தன் ஐயாவின் அரசியல் தீர்க்கதரிசனத்தின் அடையாளமாக உள்ளது என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
சம்பந்தன் ஐயாவின் இந்த முடிவு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்ளும் வாசலைத் திறக்க வைத்துள்ளது. இதனை நானும் வரவேறகிறேன். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சர்வகட்சி அரசாங்கம் அவசியம் அமைக்கப்பட வேண்டும். இந்தத் தேவையிலிருந்து பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் விலகியிருக்க முடியாது.
இன்றைய நிலையில் அரசாங்கத்துக்கு எழுந்துள்ள தேவையை அறிந்து, முஸ்லிம் தலைமைகளும் இவ்வாறான அரசியல் வியூகங்களை வகுக்க வேண்டும். இழந்து போயுள்ள பேரம்பேசும் பலத்தை இலகுவாக பயன்படுத்த தற்போது கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை முஸ்லிம் தலைமைகள் தவறவிடக் கூடாது” என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் கேட்டுக்கொண்டுள்ளார்..