ராஜபக்ஸ நிழல் அரசாங்கத்தின் புதிய முகம் இதோ - சஜித் பிரேமதாஸ
ராஜபக்ஸ நிழல் அரசாங்கம் தற்போது அரச வன்முறையையும் அரச மிலேச்சத்தனத்தையும் பயன்படுத்தி மக்களை அச்சமூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஜனநாயகத்தை சிதைக்கும் புதிய வடிவத்தை சமூகத்தில் உருவாக்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்கு எதிராக நாம் வலுவாக முன் நிற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஜனநாயகத்திற்காக முன்நிற்கும் சிவில் சமூகம் வழியில் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதாகவும், அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் சட்டத்தரணிகளுக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் குடிமக்களின் வாழ்வுரிமைக்காக அவர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கான தேசிய மக்கள் பேரவையுடன் இணைந்ததான சட்டத்தரணிகளுடன் இன்று (02) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.