கான்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் லெஜெண்ட் சரவணனின் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக்
தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன் தற்போது சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். விசில் படத்தை இயக்கிய இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கி வருகின்றனர். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரட்டேலா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மயில்சாமி, பிரபு, கோவை சரளா, நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் விவேக்-ம் இந்தப் படத்தில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
முழுக்க ஆக்ஷன் எண்டெர்டெயினராக படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 'தி லெஜண்ட்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கான்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
கான்ஸ் திரைப்பட விழாவிற்கு செல்வதற்கு முன்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஊர்வசி ரட் டேலா, தமிழில் அறிமுகமாக இருப்பதில் மகிழ்ச்சி என்றும், கான்ஸில் ‘தி லெஜண்ட்’ படத்தின் போஸ்டரின் வெளியீட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டதற்கு பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva