ஒரு பண்ணையார் வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. வலையை விட்டுத் தலையை உயர்த்திப் பார்த்தது.
வீட்டின் பண்ணையாளரும். அவரது மனைவியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டு இருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக் கூடிய பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.
அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப் பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
உடனே ஒரே ஓட்டமாக ஓடி வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது.,
"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது என்றது...
அதற்கு அந்தக் கோழி,' உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய செய்தி தான்..' நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது.,
உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே செய்தியை போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு ."நான் எலிப்பொறியை எல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.
மனம் நொந்த எலி அடுத்துப் பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே செய்தியைச் சொல்லியது. ஆடும் அதே பதிலைச் சொல்லியது.. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை..,
"எலிப்பொறியைப் பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.
அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு வீட்டுக்காரரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.
ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக் கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடி வந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.
எலிக்குப் பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானி அம்மாளைக் கடித்து விட்டது. எஜமானி அம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.
விஷத்தை முறிக்க ஊசி போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்குக் காய்ச்சல் இறங்கவேயில்லை.
அருகில் இருந்த ஒரு மூதாட்டி.," பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு கோழி ரசம் வைத்துக் கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது ஆப்பு... கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.
அப்போதும் பண்ணையார் மனைவியின் காய்ச்சல் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள். அவர்களுக்குச் சமைத்துப் போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.
சில நாட்களில் அந்த அம்மாவின் உடல் நலம் தேறியது. பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.
இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது...
பண்ணையார் மனைவியின் பாம்புக் கடிக்கு காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது...
நம்மில் பலர் இப்படித்தான் அடுத்தவருக்கு ஆபத்து வந்தால் கண்டுக்காமல் கடக்க பழகிவிட்டோம்.
அந்த ஆபத்து அருகில் இருக்கும் நமக்கும் பேராபத்தாக வந்து விடும் வாய்ப்பு இருப்பதை ஏனோ மறந்து விடுகிறோம்...
மற்றவர்களின் குறைகளை, அக்கறையுடன் கேளுங்கள்; ஆறுதல் சொல்லுங்கள்;
நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. நாலு வார்த்தை ஆதரவாகப் பேசுங்கள்.. இன்பத்தை விட, துன்பத்தில் கரம் பற்றி உடன் இருப்பதே நல்ல நட்பு...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவிய செய்திகள் குறித்து அவர் நேற்று ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
சிலர் தான் இறந்துவிட்டதாக நம்புகிறார்கள் என்பது தனக்குத் தெரியாது என்றும், ஆனால் தனது உடல்நிலை குறித்து கவலைகள் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.
இந்த ஊகத்தை “போலி செய்தி” என்றும், “வார இறுதியில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். வார இறுதியில் டிரம்பின் கையில் அல்லது அவரது வீங்கிய முழங்கால்களில் ஏற்பட்ட காயத்தைக் காட்டும் பல புகைப்படங்கள் பரப்பப்பட்டன. டிரம்பிற்கு நாள்பட்ட நரம்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அடிக்கடி கைகுலுக்கல் மற்றும் அஸ்பிரின் தொடர்ந்து பயன்படுத்துவதால் இந்த காயங்கள் ஏற்பட்டன என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார். அதேவேளை டிரம்ப் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தடுக்க டிரம்ப் இந்த மருந்தை எடுத்துக்கொள்கிறார்.
கனடாவின் Newfoundland and Labrador மாகாண தலைநகரான St. John's நகருக்கருகிலுள்ள Conception Bay South நகரில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
27,000 பேர் வாழும் Conception Bay South நகரில் விரைவில் தண்ணீர் முழுமையாக காலியாக உள்ளது. நகரின் நீர்நிலைகளில் வேகமாக தண்ணீர் வற்றிவருவதாலும், நகருக்கு தண்ணீர் கொண்டுவரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாலும், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நகரில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மக்கள் அவசர தேவைகள் தவிர வேறு எதற்காகவும் தண்ணீரை பயன்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். Conception Bay South நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அலுவலகங்கள் மூடப்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
நகர மேயரான Darrin Bent, தண்ணீர்க்குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு எப்போது சரி செய்யப்படும் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளதுடன், ஏற்கனவே காட்டுத்தீ காரணமாக நகர மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த சூழ்நிலை மக்களுக்கு கூடுதல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், மாநாட்டிற்கு இடையே ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினர். இருதலைவர்களின் சந்திப்பு தொடங்கும் முன்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது காதில் இயர்போனை மாட்ட தெரியாமல் தடுமாறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின்றன. முன்னதாக ரஷ்ய அதிபர் புதினும் ஷெபாஸ் ஷெரீப் தடுமாறுவதை கண்டு சிரித்தார்.
சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் ஷாங்காய் கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கு சீனா தலைமை வகித்தது.
இந்த கூட்டத்திற்கு இடையே உலக தலைவர்கள் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினர். ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின் பிங் உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசியிருந்தார். அப்போது இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களும் சந்தித்து பேசினர்.
அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் தொடக்கத்தில் காதில் வைக்க கூடிய இயர்போனை எப்படி மாட்டுவது என தெரியாமல் தடுமாறினார் ஷெபாஸ் ஷெரீப். காதில் மாட்டுவதற்கு அவர் முயற்சித்த போதும் கூட நிற்காததால், "என்னடா இது..." என இயர்போனை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு மீண்டும் மாட்ட முயற்சித்தார்.
இதனை எதிர்முனையில் இருந்து பார்த்த புதினால் சிரிப்பை அடக்கவில்லை. ஒரு கட்டத்தில் அனைவருக்கும் தெரியும்படி சிரித்துவிட்டார். பின்னர் தனது இயர்போனை கழற்றி மாட்டிய புதின், அதை எப்படி மாட்டுவது என்பதை செய்து காண்பித்தார். சில நிமிடங்கள் நடந்த இந்த சுவாரசிய நிகழ்வுக்கு பிறகு தலைவர்களும் பரஸ்பரம் கைகுலுக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தனர்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். நினைத்த பணிகளை முடிப்பீர்கள். உடன் இருப்பவர்களின் சுய ரூபங்கள் வெளிப்படும். புதுமையான சில முயற்சிகளில் கவனத்துடன் செயல்படவும். வரவு செலவு குறித்த முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்களை பற்றிய விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். சில பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். கல்வி பணிகளில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அனுபவம் கிடைக்கும் நாள்
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். பக்தி அதிகரிக்கும் நாள்
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். கவலை மறையும் நாள்
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கன்னி
பயணங்களால் அனுபவம் மேம்படும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகள் நிறைவேறும். சமூகப் பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். மருத்துவத்துறையில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் அமையும். விருத்தி பிறக்கும் நாள்
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
துலாம்
குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். அரசு விஷயங்களால் ஆதாயம் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பயணம் மூலம் சில அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதளவில் தைரியம் பிறக்கும். சக ஊழியர்கள் இடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மதிப்புகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விருச்சிகம்
உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையால் சில நெருக்கடிகள் தோன்றி மறையும். வியாபார பணிகளில் மிதமான லாபம் கிடைக்கும். தந்தை வழியில் இருந்த வேறுபாடுகள் விலகும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். போட்டி சார்ந்த சிந்தனைகளால் குழப்பங்கள் தோன்றி மறையும். குடும்பத்தாரிடம் அனுசரித்து செல்லவும். மாறுபட்ட அணுகுமுறைகளால் முயற்சிகளில் மாற்றம் பிறக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில அனுபவங்கள் கிடைக்கும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மகரம்
கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கனிவான பேச்சுக்கள் வியாபாரத்தில் நன்மையை தரும். உலக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். நினைத்த பணிகளில் கவனத்தோடு செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
எதிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். உறவுகள் வழியில் சாதகமான சூழல்கள் அமையும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அனுகூலம் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மீனம்
எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். சமூக பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.வெற்றி நிறைந்த நாள்
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மிகச் சிறந்த சூஃபி ஞானிகளில் ஒருவரான ஹாசன் என்பவரிடம் இறக்கும் சமயத்தில் உங்களது குரு யார் என்று யாரோ ஒருவர் கேட்டார்.
அதற்கு அவர், மிக தாமதமாக இந்த கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். நேரம் இல்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். என்று கூறினார். அதற்கு கேள்வி கேட்டவர்,
நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது. நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள், இன்னும் சுவாசித்து கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறீர்கள். நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது என்று கேட்டார்.
அதற்கு ஹாசன் எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் இருக்கிறார்கள். நான் அவர்களது பெயரை சொல்வதற்கே எனக்கு பல மாதங்கள் பிடிக்கும் அவர்களைப் பற்றி பேச வருடங்கள் ஆகும். இருப்பினும் மூன்று பேர்களை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
அதில் ஒன்று ஒரு திருடர். ஒருமுறை நான் பாலைவனத்தில் தொலைந்து போய் வழி கண்டுபிடித்து கிராமத்தை போய் சேரும்போது நடு இரவாகி விட்டது. பாதி இரவு சென்று விட்டது. கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன.
கதவுகள் அனைத்தும் அடைபட்டுக் கிடந்தன. ரோட்டில் மனித நடமாட்டமே இல்லை. நான் விசாரிப்பதற்காக யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இறுதியில் சுவற்றில் உள்ளே நுழைவதற்காக கன்னம் வைத்துக் கொண்டிருந்த ஒரு திருடனை பார்த்தேன். நான் அவரிடம், நான் தங்க இங்கே ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன். அவர், நான் ஒரு திருடன், நீங்களோ ஒரு சுஃபி ஞானி போல தோன்றுகிறீர்கள். இப்போது தங்க இடம் கண்டு பிடிப்பது மிகவும் கடினம்.
ஆனால் நீங்கள் விருப்ப்பட்டால் என் வீட்டிற்கு வரலாம், திருடனுடன் தங்க உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையென்றால் என்னுடன் வாருங்கள். என்று அழைத்தார்.
நான் கொஞ்சம் ஒரு வினாடி தயங்கினேன். பின் எனக்கு உரைத்தது. ஒரு திருடன் சூஃபியை பார்த்து பயப்படாத போது ஏன் சூஃபி திருடனைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையில் அவன்தான் என்னைக் கண்டு அஞ்ச வேண்டும். அதனால் நான் அவனிடம் சரி நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினேன்.
நான் அவனுடன் சென்று அவன் வீட்டில் தங்கினேன். அந்த மனிதன் மிகவும் அன்பானவன், மிகவும் அருமையான மனிதர். நான் அவருடைய வீட்டில் ஒரு மாதம் தங்கினேன். ஒவ்வொரு இரவும் அவர் திருடுவதற்கு கிளம்பும்போதும், சரி, நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள், தியானம் செய்யுங்கள், ஓய்வெடுங்கள், நான் என் வேலையை பார்க்கப் போகிறேன் என்பார்.
அவர் திரும்பி வரும்போது, ஏதாவது கிடைத்ததா என்று நான் கேட்பேன். இன்று எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை திரும்பவும் முயற்சிப்பேன். என்று கூறுவார். ஒருநாளும் அவர் நம்பிக்கையிழந்து நான் பார்க்கவேயில்லை.
ஒரு மாதம் முழுவதும் அவர் வெறும் கையுடன்தான் திரும்பி வந்தார். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர் நாளை முயற்சி செய்வேன். கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும். நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள் என்று நீங்கள் கடவுளிடம் சொல்லுங்கள். என்று கூறுவார்.
மேலும் தொடர்ந்து ஹாசன் சொல்லுகையில் நான் பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில் எதுவும் நிகழவில்லை. நான் மிகவும் மனமுடைந்து நம்பிக்கையிழந்து இது எல்லாவற்றையும் நிறுத்திவிடலாமா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு. கடவுள் என்று ஒருவரும் இல்லை, எல்லா பிரார்த்தனைகளும் மடத்தனம், எல்லா தியானங்களும் பொய் என்று நினைப்பேன் – அப்போது திடீரென அந்த திருடனின் நினைவு வரும். அவர் ஒவ்வொரு நாள் இரவும் கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும் என்று கூறியதை நினைத்துக் கொள்வேன்.
அதனால் மேலும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். திருடன்கூட அந்த அளவு நம்பிக்கையுடனும் அந்த அளவு நம்பிக்கையுணர்வுடனும் இருக்கும்போது நான் ஏன் இன்னும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றும். பலமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது. அந்த திருடனும் அவனைப் பற்றிய நினைவும் நான் இன்னும் ஒருநாள் என்று முயல உதவி செய்திருக்கிறது. ஒருநாள் அது நிகழ்ந்து விட்டது. அது நிகழ்ந்தே விட்டது. நான் அந்த திருடனின் வீட்டை விட்டும் அவனை விட்டும் பலஆயிரம் மைல் தூரம் அப்பால் இருந்தேன். ஆயினும் நான் அந்த திசையில் வணங்கினேன். அவர்தான் எனது முதல் குரு.
எனது இரண்டாவது குரு ஒரு நாய். நான் மிகவும் தாகமாக இருந்தேன். தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி வந்தது.
அதற்கும் மிகவும் தாகமாக இருந்தது. அது நதிக்குள் பார்த்தது. அங்கே வேறொரு நாய் இருப்பதை பார்த்தது. – அதனுடைய பிம்பம்தான் – அதைப் பார்த்து பயந்தது. அது குரைத்தது உடனே அந்த நாயும் குரைத்தது. இது மிகவும் பயந்து போய் தயங்கிக் கொண்டே திரும்பி போனது. ஆனால் தாகம் மிகவும் அதிகமாக இருந்ததால் திரும்பி வந்தது,
தண்ணீரில் பார்த்தது, அந்த நாய் அங்கேயே இருப்பதை பார்த்தது. ஆனாலும் தாகத்தினால் தண்ணீரில் எட்டிக் குதித்தது, அந்த பிம்பம் கலைந்து போய் விட்டது. தண்ணீரை குடித்து அது ஒரு கோடை காலமாக இருந்ததால் தண்ணீரில் நீச்சலடித்து ஆனந்தப்பட்டது.
நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதன்மூலம் கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்ததை புரிந்து கொண்டேன். ஒருவர் எல்லா பயங்களோடும் எட்டிக் குதித்து விடவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன் நான் அறியாததற்குள் குதித்து விடும் ஒரு சமயம் வந்த போது ஒரு பயம் வந்தது. அந்த எல்லை வரை போய்விட்டு தயக்கப்பட்டுக் கொண்டு திரும்பி வந்து விடுவேன். அப்போது அந்த நாயின் நினைவுதான் வந்தது எனக்கு. நாய் எட்டிக் குதிக்கும்போது நான் ஏன் எட்டிக் குதிக்கக் கூடாது என்று தோன்றியது.
ஒருநாள் நான் அறியாததற்குள் எட்டிக் குதித்துவிட்டேன். நான் கரைந்து அறியாதது மட்டுமே இருந்தது. அந்த நாய்தான் எனது இரண்டாவது குரு.
எனது மூன்றாவது குரு ஒரு சிறு குழந்தை. நான் ஒரு நகரத்தினுள் சென்றபோது அந்த குழந்தை ஒரு மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு சென்றது அதன் திரி ஏற்றப்பட்டிருந்தது, மசூதியில் வைப்பதற்காக ஏற்றப்பட்ட அந்த மெழுகுவர்த்தியை கைகளில் எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது.
அந்த குழந்தை. ஒரு கிண்டலுக்காக நான் அந்த குழந்தையை நீயா இந்த மெழுகுவர்த்தியை ஏற்றினாய் என்று கேட்டேன். அவன் ஆமாம் என்று கூறினான். நான் தொடர்ந்து, அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா மெழுகுவர்த்தி எரியாமல் இருந்தது,
நீ ஏற்றினாய் ஒளி வந்தது. நீ ஏற்றியபோது பார்த்தாய் அல்லவா அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா என்று கேட்டேன். அந்த பையன் சிரித்துவிட்டு, மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, இப்போது நீங்கள் இந்த ஒளி எங்கு போனது என்று பார்த்தீர்கள் அல்லவா அது எங்கு போனது என்று எனக்கு கூறுங்கள் என்று கேட்டான்.
என்னுடைய ஆணவம் சுக்குநூறானது, எனது அறிவு அனைத்தும் பொடிபொடியானது. அந்த வினாடியில் நான் எனது முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் அறிந்தவன் என்பதை விட்டு விட்டேன். என்றார்.
ஹாசன் மூன்று குருக்களைப் பற்றி கூறினார். மேலும் அவர் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் பற்றியும் பேச எனக்கு நேரம் இல்லை என்றார்.
ஆம், அது உண்மை. எனக்கு ஒருவர்தான் குரு என்று கிடையாது. ஏனெனில் எனக்கு ஆயிரக்கணக்கான குருக்கள் இருக்கின்றனர். நான் சாத்தியப்பட்ட எல்லா வழிகளிலும் கற்றுக் கொண்டேன் என்றார்.
நீங்கள் அப்படிப்பட்ட விதமான ஒரு சீடன் என்றால் உங்களுக்கு குரு என்று ஒருவர் தேவை இல்லை. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், குரு என்ற ஒருவர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் சரி,
தேர்ந்தெடுக்காமல் எல்லோரையும் வைத்துக் கொண்டாலும் சரி, நீங்கள் ஒரு சீடனாக இருக்க வேண்டியது அவசியம்.
சீடனாக இருப்பது இந்த பாதையில் மிக அவசியமான ஒரு விஷயம்.
சீடனாக இருப்பது என்றால் – கற்க முடிவது, கற்க தயாராக இருப்பது, இந்த இயற்கைக்கு திறந்தவனாக இருப்பது. நீங்கள் ஒரு குருவை தேர்ந்தெடுக்கும் போது என்ன நிகழ்கிறது எப்படி கற்றுக் கொள்வது என கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறீர்கள். ஒரு குருவுடன் இருக்கும்போது நீங்கள் மெதுமெதுவாக லயப்பட ஆரம்பிக்கிறீர்கள். மெதுமெதுவாக நீங்கள் இயற்கையுடன் லயப்படுவது எப்படி என கற்றுக் கொள்கிறீர்கள்.
குரு என்பவர் இந்த இயற்கையின் சிறிய வடிவம்தான். குருவுடன் நெருங்கி வர வர நீங்கள் அழகு, நேசம், நெருக்கம், அணுக்கம், அன்யோன்யம், ஒப்புக்கொடுத்தல் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்கிறீர்கள். ஒருவரிடம் ஒன்றாக இருக்கும்போது இவ்வளவு ஆனந்தம் கிடைக்கும்போது முழுமையுடன் ஒன்றாக இருக்கும்போது எவ்வளவு ஆனந்தம் கிடைக்கும் என்பதை நீங்கள் பார்க்கும் ஒரு நேரம் வரும்.
குரு என்பவர் ஒரு ஆரம்பம்தான், அவர் முடிவு அல்ல. உண்மையான குரு என்பவர் ஒரு வாசல்தான், நீங்கள் அவர் மூலம் சென்று கடந்து போக முடியும். உண்மையான குரு நீங்கள் அவரை கடந்து செல்ல உதவுபவர்.
விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 18 ஆம் தேதி புதன்கிழமை 3.9.2025.
இன்று அதிகாலை 02.08 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று இரவு 10.28 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.
இன்று மாலை 03.43 வரை ஆயுஷ்மான். பின்பு சௌபாக்கியம்.
இன்று அதிகாலை 02.08 வரை கரசை. பின்னர் பிற்பகல் 02.59 வரை வனிசை. பின்பு பத்தரை.
இன்று காலை 06.03 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம் :
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கனடாவில் இன்றைய தினம் இரவு வானில் அரிய காட்சி தென்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலை வரை நார்தர்ன் லைட்ஸ் எனப்படும் துருவ ஒளிக் காட்சியை காண முடியும் என அமெரிக்க தேசிய சமுத்திரவியல் மற்றும் வானிலை நிர்வாக மையம் (NOAA) அறிவித்துள்ளது.
குறிப்பாக மேற்கு மற்றும் வட கனடா முழுவதும் இந்த அபூர்வமான ஒளி நிகழ்வு தெளிவாக தெரியும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
வானம் மேகமின்றி இருள் சூழ்ந்திருக்கும் சூழலில், பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பெர்டா, சஸ்காச்சுவான், மனிடோபா, கனடாவின் வடக்கு மண்டலங்கள், வட ஒண்டாரியோ மற்றும் கியூபெக் பகுதிகளில் நேரடியாக மேல் வானில் துருவ ஒளி படர்ந்து காணப்படும்.
தெற்கு ஒண்டாரியோ, தெற்கு கியூபெக் மற்றும் அட்லாண்டிக் மாகாணங்களின் மேற்கு பகுதிகளிலும், வடக்கு வானம் மேக மூட்டங்கள் இன்றி காணப்படும் இடங்களில், இந்த ஒளிக் காட்சியை ரசிக்க வாய்ப்பு உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு முழுவதும் இந்த ஒளி நிகழ்வு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கிழக்கு நேரப்படி இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை அதிக பிரகாசத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன் வெளியேற்றிய மிகப்பெரிய மின்மங்கள் மற்றும் காந்தப்புல வெடிப்பு காரணமாக இந்த துருவ ஒளி ஏற்படுகின்றது.
ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,100 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னிடியுட்டாக பதிவானது.
உலகை உலுக்கிய ஆப்கான் நிலநடுக்கம்; ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை | Afghan Earthquake Death Toll Crosses 1100
நிலநடுக்கத்தின் தாக்கம் வேறு பல நாடுகளிலும் உணரப்பட்டிருந்தது. இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமமே தரமட்டமானதுடன் 1000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
யோசிக்காமல் பேசி விடும்
மனிதர்களுக்கு மத்தியில்
காயப்படுத்தாமல் நேசிக்க தெரிந்த
அன்பு எல்லாம் நேசித்தலின்
சாட்சியே...