ஈரான் போரால் கனடாவில் மளிகைப்பொருட்கள் விலை உயரும்
மத்திய கிழக்கில் நடந்துவரும் போரால், கனடாவில் உணவுப்பொருட்கள் விலை உயரலாம் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
உலகின் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும், அது ஏதாவது ஒரு வகையில் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என பொதுவாகவே கூறப்படுவதுண்டு.
அவ்வகையில், ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியைத் தொடர்ந்து, எண்ணெய் தயாரிப்பு மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்து விடயத்தில் பிரச்சினை உருவாகியுள்ளது.