·   ·  248 news
  •  ·  0 friends

அமெரிக்கா செல்லும் கனடிய எதிர்க்கட்சித் தலைவர்

கனடாவின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre), வர்த்தகம் மற்றும் எரிசக்தி தொடர்பான முக்கியப் பேச்சுவார்த்தைகளுக்காக இந்த வாரம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் விதிக்கப்படும் வரிகளை நீக்கி, தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்ய அவர் வலியுறுத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வட அமெரிக்காவின் ஒருங்கிணைந்த வாகனத் தொழில்துறையைப் பாதுகாப்பது குறித்து டெட்ராய்ட் (Detroit) பகுதியில் உள்ள வாகனத் துறைத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கனடாவின் எரிசக்தி வளங்களுக்கு அமெரிக்காவில் ஆதரவு திரட்டும் வகையில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் மற்றும் ஆஸ்டின் நகரங்களுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

  • 25
  • More
Comments (0)
Login or Join to comment.