·   ·  247 news
  •  ·  0 friends

ஈரானின் புதிய தலைவருக்கு டஃப் பாதுகாப்பு

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். தற்போது உச்ச தலைவராக அவருடைய மகன் மொஜ்தாபா காமேனி பொறுப்பேற்றிருக்கிறார். அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது.

பழைய தலைவரை கொன்றது போல, புதிய தலைவரை எளிதில் கொல்ல முடியாது என்றும், அவருக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் சர்வதேச அளவில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தாபா காமேனி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரைப் பாதுகாக்க, ஈரானின் மிகவும் ரகசியமானதும் சக்தி வாய்ந்ததுமான 'NOPO' (பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் படை) களமிறக்கப்பட்டுள்ளது. பயிற்சி: ஈரான் காவல்துறையிலேயே மிக உயர்தரப் பயிற்சி பெற்ற 'பிளாக்-கிளாட்' (கருப்பு உடை) சிறப்புப் படை இது.

  • 48
  • More
Comments (0)
Login or Join to comment.