- · 1 friends
-
1 followers
காளையிடம் பிடிபட்ட மனிதன்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம் : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
ரிஷபம் : குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நட்பை புதுப்பிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.
மிதுனம் : நெடுநாளாக அடைக்கமுடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். மனைவியின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம் : பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தில் நிம்மதி கிட்டும். நீண்ட நாள் கனவு நனவாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
சிம்மம் : குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போகவும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சி மேற்கொள்வீர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க போராடுவீர். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும்.
கன்னி : குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர். முன்கோபம் விலகும். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
துலாம் : தடைகள் உடைபடும். கணவன் - மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம் : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாளாக பேசாமல் இருந்த உறவினர்கள் உங்கள் வீடு தேடி வந்து பேசுவர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும்.
தனுசு : நீண்டநாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர், பணியாட்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மகரம் : புதிய சிந்தனையால் சில பிரச்சினைகளை முடிப்பீர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கும்பம் : பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
மீனம் : குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகளை ஏற்க மறுப்பு தெரிவிப்பர். பிள்ளைகளால் டென்ஷன் கூடும். எதிலும் அவசரப்படாதீர்கள். பேச்சில் கவனம் தேவை. தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோகம் சிறக்கும்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 30.8.2026.
இன்று காலை 10.09 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று அதிகாலை 05.03 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.
இன்று காலை 07.18 வரை திருதி. பின்னர் சூலம்.
இன்று காலை 10.09 வரை கரசை. பின்னர் இரவு 09.42 வரை வணிசை. பிறகு பத்திரை.
இன்று அதிகாலை 05.03 வரை மரண யோகம். பின்னர் காலை 06.03 வரை சித்த யோகம். பின்பு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.00 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள் குறிப்பீர்.பணவரவு திருப்தி தரும். முன்கோபத்தை தவிர்ப்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்.
ரிஷபம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் மறையும். பழைய ஃபேன், பிரிட்ஜை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு கூடும். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
மிதுனம்: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வயிற்றுவலி, மூக்கடைப்பு நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கடகம்: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர்கள். பூர்வீக மனை, விவசாய நிலங்களை விற்க முயல்வீர். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும் விதமாக நடப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.
சிம்மம்: கணவன் - மனைவிக்குள் சின்ன சின்ன கருத்து மோதல் வரக்கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். பாக்கிகளை வசூலிப்பீர்கள். உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபமுண்டு. பங்குதாரரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.
துலாம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். பணவரவு திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
விருச்சிகம்: திட்டமிட்ட வேலையை திறம்பட செய்து முடிப்பீர்கள். உங்களால் பயனடைந்தவர் இப்போது உங்களுக்கு உதவி செய்வார். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய கிளைகளைத் திறப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
தனுசு: பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். பணவரவால் மனநிம்மதியுண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் தொல்லை தந்த அதிகாரி பணிவார்.
மகரம்: நிறைவடையாமல் இருந்த வேலைகள் இன்று முடியும். தந்தையுடன் இருந்த பனிப்போர் விலகும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் விற்பனையாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
கும்பம்: விவாதங்கள் விலகும். ஆடை, ஆபரணம் சேரும். சோர்வு நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.
மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 12 ஆம் தேதி சனிக்கிழமை 29.8.2026.
திதி
ிருஷ்ண பக்ஷ பிரதமை - Aug 28 09:48 AM – Aug 29 09:57 AM
கிருஷ்ண பக்ஷ துவிதியை - Aug 29 09:57 AM – Aug 30 09:37 AM
நட்சத்திரம்
பூரட்டாதி - Aug 29 03:13 AM – Aug 30 03:42 AM
உத்திரட்டாதி - Aug 30 03:42 AM – Aug 31 03:44 AM
கரணம்
கௌலவம் - Aug 28 09:56 PM – Aug 29 09:57 AM
சைதுளை - Aug 29 09:57 AM – Aug 29 09:50 PM
கரசை - Aug 29 09:50 PM – Aug 30 09:37 AM
யோகம்
சுகர்மம் - Aug 28 07:27 AM – Aug 29 06:35 AM
த்ருதி - Aug 29 06:35 AM – Aug 30 05:21 AM
சூலம் - Aug 30 05:21 AM – Aug 31 03:45 AM.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை.
1.சாப்பிட்டால் மிடுக்காய் வாழலாம். கடுக்காயில் உள்ள துவர்ப்பு சுவையானது நமது வயோதிக தன்மையை குறைக்கும்.
2.இது உடலை சமநிலையில் வைத்து கொள்ள உதவும்.
3.நமது இரத்தத்தில் உள்ள அனைத்து அழுக்குகளை நீக்கும்.
நாக்கில் உள்ள சுவையின்மை குறைபாட்டை நீக்கும்.
4.சிறியவர் முதல் பெரியவர் அனைவரும் உண்ணலாம்.
5.இதனை 48 நாட்கள் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை தீரும். ஆயுளுக்கும் மலச்சிக்கல் வராது.
6.உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும்.
7.நாவறட்சி நீங்கும். கண்பார்வை குறைபாடுகள் நீங்கும்.
8 தேமல் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட வியாதி கட்டுக்குள் வரும்.
9.உடல் உஷ்ணம் குறையும்.
10.உடலில் உள்ள புண்கள் ஆறும்.
11.சிறுநீர் எரிச்சல் தீரும்.
12.உடல் பலவீனத்தை போக்கும்.
13.வாய் துர்நாற்றம் நீங்கும்.,
14.ஆசன வாய் எரிச்சல் தீரும்.
15.பற்கள் உறுதியடையும்.பலப்படுத்தும
16.இதனை 108 நாட்கள் சாப்பிட்டு வர கிழவனும் குமரன் ஆவான்.
17.விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
18.குடலை தூய்மை செய்யும். உடலில் உள்ள கெட்ட கழிவுகள் மற்றும் நச்சுக்களை (toxins) வெளியேற்றும்.
19.இராஜ உறுப்புகளை பலப்படுத்தும்.,
இரவு உணவுக்குப் பின்பு இரண்டு கடுக்காய் எடுத்து தோலை மென்று சாப்பிட்டு விட்டு விதையை கீழே துப்பி விடவும்.
உளவியலாளர் ஹிடேகி வாடா "80 வயதுச் சுவர்" என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். புத்தகம் வெளியான உடனேயே, அதன் விற்பனை 500,000 பிரதிகளுக்கு மேல் சென்றது, இது அந்த நேரத்தில் அதிகம் விற்பனையான புத்தகமாக மாறியது.
இந்த விற்பனைப் போக்கு தொடர்ந்தால், இந்தப் புத்தகம் 1 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி, அந்த ஆண்டின் ஜப்பானின் அதிகம் விற்பனையாகும் புத்தகமாக மாறும்.
65 வயதான டாக்டர் வாடா, முதியோரின் மன நோய்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவர். 80 வயதுடையவர்களுக்கான ஒரு "அதிர்ஷ்டமான" வாழ்க்கையின் ரகசியங்களை அவர் 44 வாக்கியங்களில் சுருக்கமாகக் கூறியுள்ளார், அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
1. தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருங்கள்.
2. கோபம் வரும்போது ஆழமாக மூச்சு விடுங்கள்.
3. உங்கள் உடல் இறுகிப் போகாதபடி போதுமான உடற்பயிற்சி செய்யுங்கள்.
4. கோடை காலத்தில் ஏர் கண்டிஷனர் பயன்படுத்தும்போது அதிக தண்ணீர் குடியுங்கள்.
5. டயப்பர்கள் நடமாட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.
6. நீங்கள் எவ்வளவு அதிகமாக மென்று சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் மூளையும் உடலும் சுறுசுறுப்பாக இருக்கும்.
7. ஞாபக மறதிக்குக் காரணம் வயதல்ல, மூளையைப் பயன்படுத்தாததே ஆகும்.
8. அதிகப்படியான மருந்துகளை உட்கொள்ளத் தேவையில்லை.
9. இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை தேவையில்லாமல் குறைக்கத் தேவையில்லை.
10. தனியாக இருப்பது தனிமையல்ல; அது அமைதியாக நேரத்தைச் செலவிடுவது.
11. சோம்பல் ஒரு அவமானமல்ல.
12. ஓட்டுநர் உரிமத்திற்காக பணம் செலவழிக்கத் தேவையில்லை (முதியோர்கள் தங்கள் உரிமங்களைத் திரும்ப ஒப்படைக்க ஜப்பானில் ஒரு பிரச்சாரம் நடந்து வருகிறது).
13. உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்; பிடிக்காததைச் செய்யாதீர்கள்.
14. இயற்கையான ஆசைகள் முதுமையிலும் நீடிக்கின்றன.
15. எந்தச் சூழ்நிலையிலும், எல்லா நேரமும் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டாம்.
16. உங்களுக்குப் பிடித்ததைச் சாப்பிடுங்கள்; லேசான உடல் பருமன் நல்லது.
17. எல்லாவற்றையும் கவனமாகச் செய்யுங்கள்.
18. உங்களுக்குப் பிடிக்காதவர்களுடன் பழக வேண்டாம்.
19. எல்லா நேரமும் தொலைக்காட்சி பார்க்க வேண்டாம்.
20. நோயுடன் போராடுவதற்குப் பதிலாக, அதனுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
21. "வண்டி மலைக்குச் சென்றதும், பாதை தெரியும்" - இது முதியோருக்கான மகிழ்ச்சியின் மந்திரச் சொல்.
22. புதிய பழங்கள் மற்றும் சாலட்களைச் சாப்பிடுங்கள்.
23. குளியல் நேரம் 10 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 24. உங்களுக்குத் தூக்கம் வரவில்லை என்றால், உங்களை நீங்களே கட்டாயப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
25. மகிழ்ச்சியைத் தரும் செயல்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன.
26. நீங்கள் உணர்ந்ததைச் சொல்லுங்கள்; அதிகமாக யோசிக்காதீர்கள்.
27. கூடிய விரைவில் ஒரு "குடும்ப மருத்துவரைக்" கண்டறியுங்கள்.
28. அதிக பொறுமையுடனும் இருக்க வேண்டாம், அதிக பிடிவாதமாகவும் இருக்க வேண்டாம்; ஒரு "துணிச்சலான மூத்தவராக" இருப்பதும் தவறில்லை.
29. சில சமயங்களில் உங்கள் மனதை மாற்றிக்கொள்வது பரவாயில்லை.
30. வாழ்க்கையின் இறுதி கட்டங்களில், மறதி நோய் என்பது கடவுளின் ஒரு வரம்.
31. நீங்கள் கற்றுக்கொள்வதை நிறுத்தினால், நீங்கள் வயதாகிவிடுவீர்கள்.
32. புகழுக்காக ஏங்காதீர்கள்; உங்களிடம் இருப்பது போதுமானது.
33. அப்பாவித்தனம் முதியோருக்கானது.
34. ஒரு விஷயம் எவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அது அவ்வளவு சுவாரஸ்யமாக மாறும்.
35. சூரியக் குளியல் மகிழ்ச்சியைத் தருகிறது.
36. மற்றவர்களுக்குப் பயனளிக்கும் காரியங்களைச் செய்யுங்கள்.
37. இன்றைய நாளை வசதியாகச் செலவிடுங்கள்.
38. ஆசைதான் நீண்ட ஆயுளுக்கான திறவுகோல்.
39. மகிழ்ச்சியாக வாழுங்கள்.
40. எளிதாக சுவாசியுங்கள்.
41. வாழ்க்கையின் கோட்பாடுகள் உங்கள் கைகளிலேயே உள்ளன.
42. எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
43. மகிழ்ச்சியானவர்களை அனைவரும் நேசிக்கிறார்கள்.
44. ஒரு புன்னகை நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது.
வயதாவதென்பது ஒரு வரம்பு அல்ல - அது ஒரு வரம். சரியான கண்ணோட்டத்துடனும் தினசரி பழக்கவழக்கங்களுடனும், 60 வயதுக்கு பிந்தைய ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையின் மிகவும் பயனுள்ள ஆண்டுகளில் சிலவாக இருக்கலாம். வயதாவதை பயத்துடன் அல்லாமல், கருணையுடனும், நன்றியுடனும், டாக்டர் வாடா தாராளமாகப் பகிர்ந்துகொண்ட ஞானத்துடனும் ஏற்றுக்கொள்வோம்.
தயவுசெய்து இதை அனைத்து மூத்த இளைஞர்களுடனும் பகிர மறக்காதீர்கள். நன்றி.
பிரபு, பிரபுதேவா, ஜோதிகா மூவருக்கு போட்டியே இவர் தான்
முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் வெளியான இந்த படத்தை சித்திக் லால் இயக்கியிருந்தனர். மலையாளத்தில் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
நடிகை ரேவதி 90 களில் மிகவும் பிரபலமானவர். அவரது படத்திற்கு இன்னும் ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்குத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி நடிகையாக வலம் வருவதுடன், இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களையும் இயக்கியுள்ளார்.
1983 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய 'மண்வாசனை' திரைப்படத்தின் மூலம் ரேவதி தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே பெரும் வெற்றியைக் கண்ட அவர், தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து 'மௌன ராகம்', 'புன்னகை மன்னன்', 'வைதேகி காத்திருந்தாள்', 'கிழக்கு வாசல்', 'தேவர் மகன்', 'அஞ்சலி', 'மகளிர் மட்டும்' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து தனது முத்திரையைப் பதித்தார். ரேவதி தனது நடிப்பு மற்றும் இயக்கத்திற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், டப்பிங் என பன்முக திறமையுடன் வலம் வரும் நடிரக ராதிகா, ஒரே கேரக்டரில் 3 படத்தில் நடித்துள்ளார். இதில் இரு படங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் 1989-ம் ஆண்டு வெளியான படம் ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங். அப்போதைய மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் வெளியான இந்த படத்தை சித்திக் லால் இயக்கியிருந்தனர். மலையாளத்தில் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
பிரபு, ரேவதி, வி.கே.ராமசாமி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்தை மலையாளத்தில் ஒரிஜினல் படத்தை தயாரித்த ஃபாசில் இயக்கியிருந்தார். அரங்கேற்ற வேளை என்ற பெயரில் வெளியான இந்த படத்தில், நண்பரிடம் வாங்கிய கடனை அடைக்க வெளியூருக்கு வரும் பிரபு, வி.ஜே.ராமசாமியின் நாடக சபாவில் இணைந்து அந்த வீட்டில் தங்குகிறார். அதே வீட்டில் வசிக்கும் ஏமாற்றும் பெண்ணான ரேவதிக்கும் பிரபுவுக்கும் எப்போதும் மோதலாகவே இருக்கும். இவர்களுக்கு இடையில் வி.கே.ராமசாமி மாட்டிக்கொண்டு படாதபாடுபடுவார்.
அதே சமயம் இவர்கள் மூவருக்கும் இருக்கும் பணத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு போன் கால் வருகிறது. அதை வைத்து, இவர்கள் தங்கள் பிரச்னைகளை தீர்த்துக்கொண்டார்களா? அல்லது என்ன நடந்தது என்பதை காமெடியாக சொன்ன படம் தான் அறங்கேற்ற வேளை. இந்த மாஷா என்ற கேரக்டரில் ஒரு ஏமாற்றும் பெண்ணாக ரேவதி நடித்திருப்பார். இவரது கேரக்டரை மையமாக வைத்தே ஒரு படத்தை இயக்கலாம் என்று இயக்குனர் ஃபாசில் முடிவு செய்துள்ளார். ஆனால் பிரபுதேவா நடித்த குலேபகாவலி, ஜோதிகா நடித்த ஜாக்பாட் ஆகிய படங்களில் ரேவதி அதே கேரக்டரில் நடித்ததால், இந்த முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது.
ஆடையைப் பார்க்காதே ...
மனசைப் பாரு!
இது ஜெயிக்கும் - - -ராஜ்கிரண்!
‘’ பாரதிராஜா சார் என் மேலே அளவு கடந்த பிரியம் வைச்சிருக்கிறதுக்குக் காரணம், என்னோட இயல்பான தன்மை.
16 வயதினிலே- படம் தயாரிப்பில் இருக்கும்போது கிட்டத்தட்ட முடியற சூழ்நிலை.
இன்னும் உச்சக்கட்டம் மட்டும் தான் படம் பிடிக்க வேண்டியது பாக்கி.
மத்ததை எல்லாம் முடிச்சாச்சி. வியாபாரம் ஆகலை.
வந்து பார்த்த விநியோகஸ்தர்கள் எல்லாம் வாங்கலை.அப்ப..
அந்தச் சூழலில் தான் நான் போய்க் கதை கேட்கிறேன்.
எனக்குக் கதை பிடிச்சது.
புடிச்ச உடனே வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு,என்.எஸ்.சி. பகுதி. அப்ப அது தான் பெரிசு.அதோட விநியோக உரிமையை வாங்கினேன்.
கதை கேட்டு முடிஞ்சவுடனே பேசி முடிவு பண்ணுனதுனாலே பாரதிராஜாவாலே அதை நம்ப முடியலை.
ஏன்னா.. அதுக்கு முந்திப் பலருக்கும் கதை சொல்லப்பட்டு அதைக் கேட்டுட்டு ‘’ அய்ய.. இது ஓடாதுய்யா.. என்னய்யா.. கமலஹாசன் ஒரு விளையாட்டுப் பையன் மாதிரி நடிச்சிக்கிட்டிருந்தவரு. அவரைப் போயி இப்படி வெத்திலை,பாக்கு போட வைச்சு, முடிய அசிங்கப்படுத்திக் கேவலப்படுத்தியிருக்கேய்யா.. என்னத்த ஓடும்?’’ –இப்படின்னு சொன்னாங்களாம்.
நான் போய்க் கதையைக் கேட்டு முடிச்சிட்டு பிரமாதமா இருந்துச்சின்னு கை கொடுத்து வியாபாரம் பேசலாம்னதும் அவருக்கு ஆச்சர்யம் தாள முடியலை.
என்னைக் கேட்டாரு.
‘’ என்ன காதர்.. நெசமாத் தான் சொல்றீங்களா?
நெசமாத் தான் படம் பிடிச்சிருக்கா?
நெசமாத் தான் வாங்குகிறீங்களா? எனக்கு ஒண்ணுமே புரியல. அப்படின்னாரு..
நான் சொன்னேன்.
‘’படத்தில் ஒரு அடிப்படையான கருத்தைச் சொல்லியிருக்கீங்க.. ஆளைப் பார்க்காதே..
ஆடையைப் பார்க்காதே. மனசைப் பாரு.. இது கிராமத்திலயிருந்து பட்டணம் வரைக்கும் எல்லோருக்கும் தேவையான கருத்து.
இது எல்லா ஜனங்களோட மனசுக்கும் தெரிஞ்ச விஷயம். அதனாலே இந்தக் கருத்து ஜெயிக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால நான் வாங்கிறேன்னேன்.
கட்டிப்பிடிச்சிக்கிட்டாரு.
ஆக – அன்னைக்கு ஆரம்பிச்சது என்னோட பழக்கம்.
பாரதிராஜா மாதிரி இன்னைக்கி நகரத்திலே இருக்கி 90 % பேர் கிராமத்திலே இருந்து வந்தவங்க தான். அவங்களாலே பட்டணத்துக்காக வாழ்க்கை முறைகளை மாத்திக்க முடியாது.
கிராமத்தானாகவே வாழ்ந்துக்கிட்டிருக்கோம் எல்லோரும்.
அதனால இது இயல்பா அமையுற விஷயம்!’’
-ராஜ்கிரணின் பேட்டியின் ஒரு பகுதி.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம் : சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் இறங்குவீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
ரிஷபம் : பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். உடல் அசதி, தூக்கமின்மை நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்டநாட்களாக எதிர் பார்த்த தொகை கைக்கு வரும். தாயார் ஆதரவாக இருப்பார்.
மிதுனம் : விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் இருந்துவந்த வீண் விவாதங்கள் நீங்கும். வெளியூர் பயணம் அலைச்சலை தந்தாலும் நன்மை உண்டு. பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.
கடகம் : குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்களால் வீண் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
சிம்மம் : கடனைத் தீர்க்க புதிய வழிகளை யோசிப்பீர்கள். வேலைதேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். வெளியூர் பயணம் உண்டு.
கன்னி : பிரபலங்கள் சிலரைச் சந்திப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் வரக்கூடும். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
துலாம் : குடும்பத்தில் குழப்பம் நீங்கி குதூகலம் காணப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி, மதத்தி னரால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். விருந்தினர் வருகை உண்டு.
விருச்சிகம் : பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை யால் தீர்வு காண்பீர்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். வியா பாரத்தால் பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். மனைவிவழி உறவினர்கள் உங்கள் ஆதரவை நாடுவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.
தனுசு : புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். விலகி இருந்த சொந்த பந்தங்கள் மீண்டும் வருவார்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் முடியும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள்.
மகரம் : குடும்பத்தாரின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்திசெய்வீர்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். அக்கம்பக்கத் தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு அதிகரிக்கும்.
கும்பம் : எந்த வேலையைத் தொட்டாலும் இழுபறிக்குப் பின்னரே முடிவடையும். குடும்பத்தினரிடையே கருத்துவேறுபாடுகள் தலை தூக்கும். வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை வெளி நபரிடம் பகிர வேண்டாம். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.
மீனம் : மனதில் நிலவிய குழப்பங்கள் விலகும். வராது என்றிருந்த தொகை கைக்கு வரும். சகோதரர் வகையில் சுபச்செலவு உண்டு. மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 28.8.2026.
இன்று காலை 10.29 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.
இன்று அதிகாலை 03.44 வரை அவிட்டம். பின்னர் சதயம்.
இன்று காலை 09.32 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.
இன்று காலை 10.29 வரை பவம். பின்னர் இரவு 10.31 வரை பாலவம். பிறகு கௌலவம்.
இன்று அதிகாலை 03.44 வரை சித்த யோகம். பின்னர் காலை 06.03 வரை மரணயோகம். பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
கனடாவின் மொன்றியல்–பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையம் ஊடாக கொக்கெய்ன் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஏர் கனடா நிறுவனத்தின் இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, புதன்கிழமை காலை மொன்றியல் பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்புகள் மற்றும் ஒரு வாகனத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், ஏர் கனடாவின் ஒத்துழைப்புடன், டொர்வால் பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊழியர்கள் பணியாற்றும் இடத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஏர் கனடாவின் விமான நிலைய தரைத்தள செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் தொடர்பான விசாரணைப் பிரிவினரின் விசாரணையில், பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ள விமான நிலையப் பகுதிகளுக்கு பயணப் பொதிகளை கொண்டு செல்வதற்கும், அங்கிருந்து அவற்றை நகர்த்துவதற்கும் குறித்த இருவரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
பொதிகளின் பயணச் சீட்டுகள் மாற்றப்பட்டு, போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகளை குறிப்பிட்ட நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு அவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
























