- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 13.7.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்
மேஷம்: தடைகளைப் பொருட்படுத்தாமல், உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பல வகையிலும் சேமிப்பு அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வீடு, வாகனப் பழுதை சரிசெய்வீர்கள்.
ரிஷபம்: வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். தொண்டைப் புகைச்சல், வயிற்று வலி விலகும். பண வரவு உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.
மிதுனம்: வீண் அலைச்சல், டென்ஷன் வரக்கூடும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் தைரியமாக சமாளிப்பீர்கள். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
கடகம்: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உடல்நலம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். கலைப் பொருட்கள் சேரும்.
சிம்மம்: புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தேவையற்ற மனக் குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
கன்னி: விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து உறவாடுவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலக ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
துலாம்: தொழில், வியாபாரத்தில் போட்டிகள் மறையும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். புதியவர்களுடன் நட்பு மலரும். தலைவலி, காய்ச்சல் நீங்கும்.
விருச்சிகம்: முன்கோபம் அதிகரிக்கும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாயுக் கோளாறு, சளித் தொந்தரவு வந்து நீங்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் தேவை. நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.
தனுசு: குடும்பத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும். எல்லாவற்றுக்கும் அடுத்தவர்களைக் குறைகூறாதீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். பயணத்தின்போது அதிக கவனம் தேவை.
மகரம்: வீண் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உடல்நலம் நிம்மதி தரும். வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.
கும்பம்: மனக் குழப்பங்கள் விலகும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எக்காரியத்திலும் நிதானம் அவசியம்.
மீனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பீர்கள். குழப்பங்கள் விலகும். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.