திரைபடக் கலை, ஒளிப்படக் கலை, இசை, எழுத்து எனப் பன்முகத் திறமை வாய்ந்தவர் இயக்குநர் செழியன். தனது ‘த பிலிம் ஸ்கூல்’ மூலம் சுயாதீனத் திரைப்படங்களை எடுப்பது தொடர்பாக, திட்டவட்டமான பயிற்சியை உருவாக்கி, அதற்கான மாணவர்களைத் திரட்டி தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தார். நிறுவனங்கள் செய்யவேண்டிய பணியை தனிநபராகச் செய்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த செழியன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார்.
நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரான, ஒளிப்பதிவாளர் செழியனின் உடல் நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திரைத்துறையினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் போரூர் மின் மயானத்தில் நேற்று மாலை அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மறைந்த செழியனுக்கு பிரேமா என்ற மனைவி, அஜிதா என்ற மகள் உள்ளனர்.