பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு, தனது எதார்த்தமான பேச்சாலும் குணத்தாலும் பலருடைய மனங்களை வென்றவர் நடிகை திவ்யா கணேஷ். எப்போதும் குடும்பப் பாங்கான வேடங்களில் வலம் வந்த இவர், தற்போது முன்னணி ஓடிடி தளமான 'ஆஹா' டிஜிட்டல் தளத்தில் வெளியாகியுள்ள 'Sshhh 3' என்ற அடல்ட் த்ரில்லர் வெப் தொடரில் நடித்துள்ளார்.

நெட்டிசன்கள் ஒருபக்கம் ட்ரோல் செய்தாலும், இந்தத் தொடரின் ப்ரோமோஷனுக்காக திவ்யா கணேஷ் பங்கேற்ற ''Wrong Answer Only'' என்ற விநோதமான நேர்காணல் வீடியோ தற்பொழுது பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அதில் கேட்கப்பட்ட சில விவகாரமான கேள்விகளுக்கு அவர் திவ்யா அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
கேள்வி: நீங்க சிங்கிளா?
திவ்யா பதில்: யார் சொன்னா நான் சிங்கிள்னு? எனக்குன்னு ஆள் இருக்காரு!
கேள்வி: படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
திவ்யா பதில்: அந்த மாதிரி சீன் எடுக்கும் போதே எனக்கு செம ஜாலியா இருக்கும்.. அப்படியே வைப் ஆகிடுவேன் என நச்சுனு பதில் அளித்தார். அதோடு மட்டுமில்லாமல் யாராவது உங்களிடம் கடலை போட்டால் என்ன செய்வீர்கள் என்பது போன்ற இன்னும் சில கிளுகிளுப்பான கேள்விகளுக்கும் அவர் நேர்காணலில் கலகலப்பாகப் பதிலளித்துள்ளார். பிக் பாஸ் இமேஜை உடைத்து, முற்றிலும் புதிய அவதாரத்தில் படு கவர்ச்சியாக களம் இறங்கியுள்ள திவ்யா கணேஷின் இந்த புதிய ட்ரான்ஸ்ஃபார்மேஷன் தான் இப்போது சோசியல் மீடியாவின் பேசு பொருளாகி உள்ளது.