Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: குடும்பப் பிரச்சினைகள் ஓயும். பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். ஓரளவு பணவரவு உண்டு. வியாபாரத்தில் பாக்கி களை போராடி வசூலிப்பீர்கள். தவிர்க்க முடியாத பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்: யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். செலவு கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். விட்டுக் கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். வராதிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். அலுவலகத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெல்வீர்.

கன்னி: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். பணப் பற்றாக்குறை நீங்கும். மனக்குழப்பம் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவு தருவார்கள். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

துலாம்: முன்கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளை நினைத்து வருந்த வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனம் சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தனுசு: மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். வீட்டில் நிம்மதி பிறக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். சகோதர வகையில் சுபச் செலவு உண்டு. உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

மகரம்: நெடுநாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் சுமுகமாக முடியும். கணவன் மனைவி பிரச்சினைக்குள் அடுத்தவரை அனுமதிக்க வேண்டாம். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர் ஆதரவு தருவார்.

கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முகப் பொலிவு கூடும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு வேலை கிட்டும். அலுவலகரீதியான பயணங்கள் சாதகமாகும்.

  • 18