- · 1 friends
-
KANIMAA Lyrical Video - RETRO
KANIMAA Lyrical Video - RETRO | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhosh Narayanan
காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள். நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன். சற்று நேரத்தில் முருகவேல் என்று அழைப்பு வந்தது. உள்ளே சென்றவுடன் சில கேள்விகள் கேட்டு விட்டு " உங்கள் பயோடேட்டாவில் வயது 40 என்று இருக்கே நிஜமா ?"
"ஆமாம் சார் உண்மை தான்."
"அப்படியா ..? எங்கள் நிறுவனத்தில் இளைஞர்களை தான் வேலைக்கு எடுக்கின்றோம். உங்கள் வயது 40 என்று சொல்கிறீர்கள் . கொஞ்சம் யோசனை செய்ய வேண்டி இருக்கும் முருகவேல்" என்றார்கள்.
"பரவாயில்லை சார் நான் வேலை செய்ய தயாராக இருக்கிறேன்" என்று கூறினேன். மேலும் "இதற்கு முன் வேலை செய்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் திடீர் என்று மூடிவிட்டார்கள். அதனால் வேறு வேலை தேடும் சூழ்நிலை உருவாகிவிட்டது சார்.."
அந்த அதிகாரி சற்று யோசிப்பது போல் பாவனை செய்து விட்டு
"முருகவேல் உங்கள் பயோடேட்டாவை கொடுத்து விட்டு செல்லுங்கள் தேவைப்படும்போது அழைக்கின்றோம்" என்றார்.
" மிக்க நன்றி சார்" என்று கூறி விட்டு வெளியே வந்தேன்.
இங்கும் வேலை இல்லை. மனம் கனத்தது கூடவே தலையும் வலித்தது. பெரும்பாலான இடங்களில் வயதை காரணம் காட்டி தவிர்த்து விடுகிறார்கள். இறைவா என்ன சோதனை... அனைத்தும் நல்லபடியாக தான் போய்க்கொண்டு இருந்தது முன்பு வேலை செய்த நிறுவனம் மூடும் வரை.. அந்த வேலையை நம்பி வாங்கிய கடன்கள் கழுத்தை நெறிக்க தொடங்கியது..
ஒரே மகனின் படிப்பு செலவு , வீட்டுக்கு தேவையான செலவு மேலும்.. மேலும்.. ஐயனே ஈசனே எப்படி சமாளிக்க போகிறேன். தலை மேலும் வலித்தது. பேருந்துக்கு வைத்து இருக்கும் காசில் காபி சாப்பிட்டு நடந்து வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து காபி சாப்பிட்டு நடக்க துவங்கினேன். வாங்கிய வண்டியும் ஒரமாக இருக்கிறது.
ஆழ்ந்த சிந்தனையில் நடந்து செல்லும்போது ரோட்டின் ஓரத்தில் ஒரு தோல் பை அனாதையாக கிடந்தது. சின்னதாக ஒரு சபலம் எடுத்து திறந்து பார்த்தேன். குப்பென்று வியர்த்து கொட்டியது. பையில் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள்.. கை கால்கள் உதறல் எடுத்தது. இருப்பினும் எடுத்து வைத்து கொண்டேன்.
மனம் பலவிதமாக என்னுள் பேசியது. ஒரு பக்கம் எச்சரிக்கை செய்தது. அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஆனாலும் கட்ட வேண்டிய கடன்களும் , குடும்ப செலவுகளும் கண் முன்னே நின்று பயமுறுத்தியது.
வீடு வந்து சேரும் வரை மனச்சத்தங்கள் ஏராளம் , உடல் முழுவதும் வியர்வை ஊற்றியது. வீட்டில் உள்ள அலமாரியில் பணத்தை பத்திரமாக வைத்தேன். வெளியே சென்று திரும்பிய மனைவி "என்னங்க ஒரு நடுக்கமா இருக்கறீங்க" என கேட்டாள்.
"வள்ளி அந்த கதவை சாத்திட்டு உள்ளே வா" என்றேன்.
நடந்த விவரங்களை சொல்லி . யாராவது கேட்பார்கள் என்று திரும்பி, திரும்பி பார்த்தேன் யாரும் வரவில்லை , எனப் பொய் கூறினேன். பணத்தை எண்ணி பார்த்தேன் மொத்தமாக 12 லட்சம்.
"வள்ளி சில மாதங்கள் வேலை கிடைக்கும் வரை நமக்கு கவலை இல்லை. நம் செலவுக்கு இது போதும்" என்றேன்.
மனைவி அமைதியாக இருந்தாள்.
"ஏதாவது பேசு" என்றேன்.
"இந்த பணம் நமக்கு வேண்டாங்க" என்றாள் மனைவி.
"வள்ளி என்ன பேசுற நீ... இறைவனா பார்த்து தான் நமக்கு துன்பங்கள் தீர வழி காட்டி இருக்காரு.."
"உங்க அல்ப புத்திக்கு இறைவன் மேல் பழிபோடாதீங்க" என்றாள்.
"வள்ளி எனக்கு இன்னும் வேலை கிடைக்கல கட்ட வேண்டிய கடன்களும் செலவுகளும் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியாக இருக்குமே நினைத்து பார் வள்ளி."
"இன்னொருவர் பணத்தில் வாழ்வது தப்புங்க. அதுக்கு பதிலா இருவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கலாம்" என்றாள் மனைவி.
"அப்போ வீட்டு செலவுக்கு என்னதான் நான் செய்வேன் என்று கோபமாய் குரலை உயர்த்த.."
"இறைவன் சோதிப்பாருங்க ஆன கைவிடமாட்டார்" என்று கூறி டக்கென்று கழுத்திலிருந்த தாலியை கழற்றி "இதை விற்று விடுங்கள் எனக்கு மஞ்சள் கயிறு போதும்" என்றாள்.
"வள்ளி " என அதிர்ந்து விட்டேன்.
"அடுத்தவங்க பணத்துல வயிற்றை நிரப்பிக் கொள்வதைவிட இது எவ்வளவோ மேலுங்க. இந்த பணம் யாருக்கு சொந்தமோ அவர்களிடம் கொடுத்து விட்டு தான் நீங்கள் வீட்டில் நுழைய வேண்டும்" என்று ஓடி கதவை சாத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
மனைவியின் தாலி கையில் கனத்தது. பணப்பையில் ஆராய்ந்து பார்த்தேன் முகவரி இருந்தது. அந்த பங்களாவுக்கு நான் நுழைந்த போது கோயிலில் நுழைந்த உணர்வு. மெல்லிய ஓசையில் சிவனைப் பற்றி பாடல்கள். அழைப்பு மணியை அடித்தேன். நெற்றி நிறைய விபூதியுடன் ஒரு பெரியவர் வந்து பார்த்தார். நடந்த விவரங்களை அவரிடம் கூறி பணப்பையை கொடுத்தேன். மகிழ்ந்த அவர் உள்ளே அழைத்து சென்று குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்.
"தம்பி நிறுவனத்தில் இருந்து காரில் வரும் போது பணப்பை தவறி விழுந்தது விட்டது. திரும்பி தேடி செல்லும் போது கிடைக்கவில்லை. உங்களை போல் நல்லவர்களும் இருக்கிறார்கள் . அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்து விட்டது" என்றபடி என்னை பற்றிய விவரங்களை கேட்டார். என்னுடைய சூழ்நிலை பற்றிய விவரங்களை கூறினேன்.
அப்படியே யோசித்து ........"தம்பி கொஞ்சம் இருங்கள். இதே ஒரு போன் செய்து விட்டு வருகிறேன்"
என்று உள்ளே சென்றார். திரும்பி வந்தவர் "தம்பி என்னோட நிறுவனத்தில் வேலை செய்ய உங்களுக்கு விருப்பமா? அடுத்த வாரம் எங்கள் மேலாளர் ஓய்வு பெறுகிறார். அவரோட இடத்தில் யாரை நியமிப்பது என நினைத்து கொண்டு இருந்தேன். நீங்கள் ஏன் அந்த வேலையில் சேரக்கூடாது? நீங்கள் நாளைக்கு சேர்ந்து நிறுவனத்தில் டிரைனிங் எடுங்கள். வேலைக்கான உத்தரவு கடிதம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும். வேறு யாராவது உங்களுடைய சூழ்நிலையில் இருந்து இருந்தால் இந்த 12 லட்சம் பணம் திரும்ப வந்து இருக்காது. இந்த வேலை உங்கள் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும். நான் கொடுக்கும் பரிசு" என்றார்.
நமச்சிவாயா...
என் கண்ணில் கண்ணீர். கண்ணீரில் ஆயிரம் நன்றிகள் என் மனைவி வள்ளிக்கு...
அந்த வீட்டின் ஒலிநாடாவில் குரு உபதேசம் மெல்லியதாக கேட்டது. "மூவுலகையும் ஆளும் சிவபெருமான் சோதிப்பான் ஆனால் நம்பியோரை கைவிட மாட்டார்." என்று கேட்டது.
எடுக்காத போன்கால்கள் சில வாழ்வுகளை முடித்துவிடும்..
சொல்லாத பாராட்டுக்கள் சிலர் துயருக்குள் கொண்டு விடும்.
நடக்காத சந்திப்புகள் நட்புகளையே பிரித்துவிடும்..
நடிகர் சுஷாந்த் இறக்குமுன் ப்ரியப்பட்ட யாருக்கோ போன் செய்திருக்கிறார். நண்பனோ அல்லது காதலியோ...அந்த போனை எடுத்து பேசி இருந்தால் ஒரு வேளை சுஷாந்த் இன்று உயிருடன் இருந்திருக்கலாம்...
சில்க் ஸ்மிதா நடிகையாக வளர்ந்த காலத்தில் அவருக்கு போட்டியாக இறங்கியவர் அனுராதா. அனுராதாவுக்கும், சில்க்குக்கும் ஆகவே கூடாதென கங்கணம் கட்டி பரப்பப்பட்ட வதந்திகளால் சில்க் அனுராதாவோடு பேசுவதேயில்லை.
ஒரு காலகட்டத்தில் சில்க்கின் சொந்தப்படத்தில் அனுராதா நடிக்க சென்றபோது இருவரும் நட்பாகி தோழிகளாகினர். வாடி போடி என அழைக்கும் நட்பாகி மனம் விட்டு பேசிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்தனர்.
ஒரு நாள் இரவு சில்க் அனுராதாவை போனில் அழைத்து உடனே சந்திக்க வேண்டும் என சொல்ல அனுராதாவோ இப்போது தான் ஊரிலிருந்து வந்திருக்கிறேன். நாளை காலை சந்திப்போம் என சொல்ல..மறு நாள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு பிறகு சில்க்கை சந்திக்க முடிவெடுத்து பிள்ளைகளை தயார் படுத்தும் போது டிவியில் சில்க் தற்கொலை செய்தி...
ஒரு வேளை அனுராதா பேசி இருந்தால் அது நிகழாமல் இருந்திருக்கலாமோ?
எந்த அழைப்பையும் எடுங்கள். எவரையும் புறக்கணிக்காதீர்கள்...புறக்கணிப்பு ஒரு பெரிய கொடுமை. அதை பல விதத்தில் பெற்ற அனுபவம் பலருக்கும் இருக்கும்...
நான் வெளிநாட்டிலிருந்து யாருக்கும் போன் செய்வதில்லை. பேசினால் எல்லோரும் ஏதோ அவசரவேலை இருப்பது போல்..அப்படியா..சௌக்கியமா...வச்சிடவா என உடனே வைப்பதிலேயே குறியாக இருப்பார்கள். அதோடு போன் அழைப்பையே விட்டு விட்டேன்....
நடைபெறாத சந்திப்புகள் துயரங்களை தந்து விடலாம்...புறக்கணிப்புகள் ஏக்கங்களை தந்துவிடலாம்.....
வியந்து பார்க்கும் மனிதர்களில் இவர் ஒருவர். பிரதாப் சி ரெட்டி. பெயர் சொன்னாலே போதும். அப்பல்லோ குழுமத்தின் சேர்மன்.
92 வயது நம்ப முடிகிறதா? இன்றும் பத்து மணிக்கு அலுவலகம் வருகிறார் 5 மணி வரை பணி செய்கிறார் வாரத்தில் ஆறு நாட்களும் இப்படி வேலை பார்க்கிறார்!
அப்பல்லோ மருத்துவமனையை துவக்கியவர் இவரே. நாடெங்கிலும் 71 மருத்துவமனைகள் இவருக்கு சொந்தம். 5000க்கும் அதிகமான ஃபார்மசிகள் இவருக்கு இருக்கின்றன. இவரது பேத்தி உபாசனா காமினேனியை தான் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ராம்சரண் தேஜா மணம்முடித்திருக்கிறார்.
சர்வதேச தரத்தை அகில உலக அளவில் மதிப்பிடுகையில் குறைந்த விலையில் நல்ல விதமான சேவையை அப்பல்லோ நிறுவனம் தந்திருக்கிறது. இன்றும் தந்து கொண்டிருக்கிறது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து அமெரிக்கா சென்று மேலும் படித்து ஒரு சிறந்த கார்டியாலஜிஸ்ட் ஆக தன்னை நிறுவினார். அன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் காம்ப்ளக்ஸ் ஆக இருந்த கேஸ்களை எல்லாம் அமெரிக்காவிற்கு ரெஃபர் பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனென்றால் பாரதத்தில் நல்ல மருத்துவ கட்டமைப்பு அன்று இல்லை.
அப்படி ஒரு இதய நோயாளியை அவர் US போவதற்கு சொல்லும் பொழுது அந்த நோயாளியால் ஏழ்மை காரணமாக அங்கு சென்று சிகிச்சை பெற முடியாமல் போயிற்று. அந்த முடிவு இவருக்கு மனதில் கேள்விகளை எழுப்பிற்று. விளைவு அமெரிக்க தரத்தில் இங்கே மருத்துவமனை உருவாக அடிகோலியது.
நமக்கும் இப்படித்தான் சவால்கள் வருகின்றன நாம் எரிச்சல் அடையாமல், மனம் வருத்தப்படாமல், தடையாக அவைகளை நினைக்காமல், வெல்வது எப்படி என்று பிரதாப் சி ரெட்டியின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்....
இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும்.
ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவற்றால் கூட இருக்கலாம்.
அதிலும் மங்கலான பார்வை, கண்களில் இருந்து நீர் வடிதல் அல்லது நாள்பட்ட தலைவலி போன்றவை பலவீனமான கண்பார்வையின் அறிகுறிகள். இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் பல்வேறு தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
ஆயுர்வேதத்தின் படி, ஒருவரின் உடலில் பித்தமானது சமநிலையற்று இருந்தால், கண்பார்வை பலவீனமாகக்கூடும். எனவே இந்த பித்தத்தை சமநிலையாக்க ஒருசில ஆயுர்வேத வைத்தியங்கள் உள்ளன. அவற்றால் நிச்சயம் கண்பார்வையை மேம்படுத்த முடியும்.
திரிபலா:
1 டேபிள் ஸ்பூன் திரிபலா பொடியை நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வடிகட்டி, அந்நீரால் கண்களைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் அந்த நீரால் கண்களைக் கழுவி வந்தால், கண் பார்வை மேம்படும்.
நெல்லிக்காய்:
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை நீரில் கலந்து பருகி வர, கண்பார்வை பலமாகி, கண் பிரச்சனைகள் தடுக்கப்படும்.
கேரட்:
உங்களுக்கு கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை பிரச்சனை இருப்பின், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வாருங்கள். இல்லாவிட்டால் தினமும் ஒரு கேரட்டை உட்கொண்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
பாதாம்:
இரவில் படுக்கும் முன் ஒரு கையளவு பாதாமை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை தோலை நீக்கிவிட்டு, அரைத்து பேஸ்ட் செய்து ஒரு டம்ளர் பாலுடன் கலந்து தினமும் பருக, கண் பார்வை மேம்படும்.
பிரிங்ராஜ்:
கண் பார்வை மேம்பட வேண்டுமானல், பிரிங்ராஜ் மூலிகையை அரைத்து பேஸ்ட் செய்து, கண்களின் மேல் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண்களின் ஆரோக்கியம் மேம்படுவதைக் காணலாம்.
அதிமதுரம்:
ஒரு டீஸ்பூன் அதிமதுரப் பொடியை பாலில் கலந்து, தேன் சேர்த்து பருகி வர, கண்களில் இருக்கும் அழற்சி மற்றும் வலி நீங்கி, கண்பார்வை மேம்படும்.
பூண்டு:
தினம் ஒரு பூண்டு அல்லது சமைக்கும் உணவில் பூண்டை சேர்த்து வர, அதில் உள்ள உட்பொருட்கள், பலவீனமான கண் பார்வையை மேம்படுத்தி, கண் பிரச்சனைகள் அண்டாமல் தடுக்கும்.
உடல் நலம் காப்போம்..
வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்
வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.
பயன்கள்.:
ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.
அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.
தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.
பழமையான கோயில்களில் கோயில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதையும், நம் கண் முன்னே பலரும் காசு போடுவதையும், நாம் கண்டிருப்போம்.
இது போன்று கோயில் கிணற்றில் காசு போடப் பட்டதின் காரணத்தைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
பழமையான காலங்களில் புழக்கத்தில் இருந்த காசுகள் பெரும்பாலும் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டது.
மண், நீர், காற்று ஆகியவற்றில் இயற்கையாகவே செம்பு உலோகம் உருவாகிறது. இவ்வளவு ஏன், நம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு சில உலோகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. செம்புபாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் அந்த காலத்தில் இருந்தது. பழங்காலத்தில் குளம், குட்டைகளில் இருந்தும், கிணறுகளிலிருந்தும் தான் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர்.
அப்படி எடுத்து வரும் தண்ணீரை அருந்துவதற்கு செம்பு கலந்த பின் நீரை அருந்துவது உடலுக்கு வலிமையும், குளிர்ச்சியும் தந்துநலம் உண்டாக்கும். இதனால், செப்பு காசுகளை குளத்தில் போடுவது வழக்கமாக இருந்தது. ஆனால், இன்றைய காலகட்ட த்தில், ஆறு, கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் பழக்கம் காணாமலேயே போய்விட்டது. அதோடு, செப்பு காசு முறை அழிந்துவிட்டது.
ஆனால், பழமையான கோயில்களில் இருக்கும் கிணற்றில் காசு போடும் பழக்கம் மட்டும் இன்னும் நம்மில் பலரிடம் இருந்து கொண்டே இருக்கிறது.
உண்மையில், செம்பு காசுகளைத் தான் கிணறு, குளத்தில் போட வேண்டும். அவைகள் தான் நமக்கு நன்மையளிக்கும். சிந்திப்போம்.... செயல்படுவோம்.
மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன.
ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும், வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டது இருப்பது போல.
நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான்.
ஒரே நீரைத் தான் அருந்துகிறோம், ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம். ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோஅதைப் பொறுத்துத்தான் நம்முடைய தன்மை வெளிப்படும்.
நாம் எதை சேர்க்கிறோம் அற்பமானதையா? இல்லை அற்புதத்தையா ?
அற்பமானது என்னும் ஆறு குணங்கள்
1. பேராசை
2. சினம்
3. கடும்பற்று
4. முறையற்ற பால்கவர்ச்சி
5. உயர்வு தாழ்வு மனப்பான்மை
6.வஞ்சம்
அற்புதம் என்னும் ஆறு குணங்கள்
1. நிறை மனம்
2. பொறுமை
3. ஈகை
4. கற்பு நெறி
5. சம நோக்கு
6. மன்னிப்பு
இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பையும் கருணையையும், அறிவாய் விளங்கும் பேராற்றலையும்
உள்ளுணர்வாய் உணர்ந்தால்
அற்பமான தேவையற்ற குணங்கள்
நம்முள் எட்டிப் பார்காது.
அற்புதமான நற்குணங்கள்
நம்மோடு இணைந்து வழிநடத்துமே.
இறையே குருவே சரணம்.
கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றுவது எப்படி ?
கெட்ட நேரம் தீய எண்ணத்தால் வரும்.
நல்ல நேரமாக மாற்ற எண்ணத்தை நல்ல எண்ணமாக மாற்றுங்கள்.
கெட்ட நேரம் தானாக ஓடி விடும்.
எமகண்டம், ராகு, குளிகை என்று பயமுறுத்துகிறார்களே ?எப்படி தப்பிப்பது ?
நாலு பேருக்கு உன்னால் முடிந்த உதவியை மனப்பூர்வமாக செய்தால் போதும். அவைகள் உன்னிடமிருந்து தப்பி ஓடிவிடும்.
தீதும் நன்றும் பிறர் தர வரா.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் பிடிவாத குணம் குறையும். இழுபறியான சில வரவுகள் மீண்டும் கிடைக்கும். பேச்சுகளில் சற்று கவனம் வேண்டும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான சூழல் உண்டாகும். சில அனுபவங்களால் புதிய பாதைகள் மனதளவில் புலப்படும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். சில அனுபவங்கள் மூலம் மனதளவில் புதிய பக்குவம் பிறக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மிதுனம்
நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான பலன்கள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான தடைகள் விலகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கடகம்
மனதில் நினைத்த காரியம் கைகூடும். உடன்பிறந்தவர்களால் ஆதரவான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுகமான சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கலைப்பொருட்கள் மீதான ஆர்வம் மேம்படும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மருத்துவ துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த நுணுக்கமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். சில செயல்களில் அனுபவத்தை பயன்படுத்துவது நல்லது. வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
விருச்சிகம்
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தோற்றமும் வாக்குவன்மையும் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தகத்தில் ஈர்ப்பு உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். ஆபரணப் பொருட்களில் கவனம் வேண்டும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் மனதில் மாற்றத்தை உண்டாக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகளை மேம்படுத்துவீர்கள். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். பெருமை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி
மகரம்
வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் புரிதல் உண்டாகும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கவனத்தோடு இருக்கவும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
கும்பம்
பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சந்தேக உணர்வுகளால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தடைப்பட்ட பணிகள் நிறைவு பெறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். திருப்தியற்ற மனநிலை குறையும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
மீனம்
மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான வரவுகள் உருவாகும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். சக ஊழியர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 9 ஆம் தேதி திங்கட்கிழமை 23.6.2025
கிருஷ்ண பக்ஷ திரயோதசி - Jun 23 01:22 AM – Jun 23 10:10 PM
கிருஷ்ண பக்ஷ சதுர்தசி - Jun 23 10:10 PM – Jun 24 06:59 PM
கார்த்திகை - Jun 22 05:38 PM – Jun 23 03:16 PM
ரோஹிணி - Jun 23 03:16 PM – Jun 24 12:54 PM
நல்ல நேரம்:
காலை : 06:00 - 07:00
காலை : 08:00 - 09:00
மாலை : 01:00 - 02:00
பகல் : 03:00 - 04:00
முதலில் மாடு கட்டும் பிடிகயிற்றைவிட சற்றுப் பெரிய கயிறை, எருதுகளின் தாடைக்கு கீழ் கொடுத்து, கயிற்றின் அடுத்த நுனியை மாட்டின் வலப் பக்கமாகக் கொண்டு வந்து, இரு நுனியையும் ஒரு இழுஇழுத்தால் எருது பக்கவாட்டில் சரிந்து படுத்துவிடும்.
எருதின் உரிமையாளர் அதன் கொம்பு மற்றும் மூக்கணாங் கயிற்றை வலுவாகப் பிடித்துக் கொள்வார்.சிறு கயிறு கொண்டு முன்னங்கால்களை முதலிலும், அடுத்து பின்னங் கால்களையும் கட்டிய பின்னர், நான்கு கால்களையும் மொத்தமாக வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும்.
லாடம் கட்டுபவர் எருதுகளின் குளம்பில் ஏற்கெனவே அடிக்கப்பட்டுள்ள, தேய்ந்துபோன பழைய லாடத்தை நீக்கிய பின்னர், தன்னிடம் உள்ள சிறு கத்தியால் குளம்பை சீவி சீராக்குவார்
நாம் சதைப் பகுதியில் படாமல் நகம் வெட்டிக் கொள்வது போல, வெட்டினால் வளரும் திறன்மிக்க எருதுகளின் கால் குளம்புகள் சதைப் பகுதியில் படாதவாறு கத்தியால் செதுக்கப்பட்டு சமமாக்கப்படும்.
தொடர்ந்து, எருதுகளின் காலுக்குப் பொருத்தமான லாடத்தை தேர்வு செய்து, அதை எருதுகளின் கால் குளம்பில் வைத்து, ஆணி அடித்துப் பொருத்துவார்.
குளம்பின் சதைப்பகுதியில் ஆணி இறங்காமல் லாடத்தை லாவகமாக அடிக்க வேண்டும்..
லாடம் அடிப்பதை பார்க்கும்போது, லாடம் கட்டுபவர் எருதுகளை சித்ரவதை செய்வதுபோலத் தோன்றும், ஆனால், உண்மையில் லாடம் அடிப்பது, ஒரு ஜீவகாருண்ய செயலாகும்.
ஏனெனில், லாடம் பொருத்தப்படாத எருதுகள் கரடுமுரடான பாதைககள் மற்றும் தார்ச் சாலைகளில் தொடர்ந்து நடக்கும் போது கால் குளம்பு தேய்ந்து, காயம் ஏற்படும். காயத்தால் எருதுகள் நடக்க முடியாமல் அவதிப்படும் என்பதால், அவற்றின் கால் குளம்புகளைப் பாதுகாக்கவே லாடம் அடிக்கப்படுகிறது.
எருதுகளுக்கு லாடம் கட்டுவது என்பது எளிதான செயல் கிடையாது. மிக நுட்பமாக செய்ய வேண்டிய பணி. சிறிது பிசகினாலும் எருதுகளின் கால்களை ஆணிகள் பதம் பார்த்துவிடும்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.....
மேஷம்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் சிந்தித்து செயல்படவும். அலுவலகப் பணிகளில் ரகசியம் காப்பது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
ரிஷபம்
திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் உண்டாகும். குழந்தைகளிடத்தில் அனுசரித்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். நெருக்கமானவர்களால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
பொருளாதாரம் குறித்த எண்ணங்கள் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். ஆன்மிகம் தொடர்பான காரியத்தில் ஈடுபாடு உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர் வகையில் அனுகூலம் ஏற்படும். சுபகாரியம் சார்ந்த பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். அலுவலகத்தில் நிர்வாகம் சார்ந்த திறமைகள் வெளிப்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும். சோர்வுகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
திட்டமிட்ட பணிகளில் சில திருப்பங்கள் உண்டாகும். எதிர்காலத் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வதந்திகள் தோன்றி மறையும். அரசுச் செயல்களில் காரிய அனுகூலம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
பேச்சுகளில் பொறுமை வேண்டும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
திடீர் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் தெளிவு பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
தனுசு
உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை மறையும். வேலையாட்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்புகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை மறையும். வேலையாட்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்புகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சமூகம் தொடர்பான செயல்களில் கவனத்தோடு செயல்படவும். தனித்தன்மைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
கனிவான பேச்சுக்களால் புதிய அறிமுகம் கிடைக்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் தோன்றி மறையும். உடல் தோற்றத்தில் மாற்றங்கள் உண்டாகும். செய்கின்ற செயல்களில் பதட்டமின்றி செயல்படவும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு அனுகூலமான பலன்கள் ஏற்படும். நம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
இதற்கு பிரம்மதண்டு, பேன்கொட்டைக்காய்செடி, பதாளமூலி , என பெயர்களுண்டு.இதன் இலைகளை அரைத்து பற்றுப்போட்டால் ஆறாதபுண்களெல்லாம் ஆறிவிடும்.
குறிப்பு : இது இணையத்தில் வந்த பதிவு. தகுந்த நாட்டு மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு முயற்சி செய்யுங்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்வற்றிப்போன உலகின் நான்காவது பெரிய உள்நாட்டு அரல் கடல்.முற்றிலும் வரண்டுவிட்ட நிலையில் பாலைவனமாகி கைவிடப்பட்ட துருப்பிடித்த கப்பல்கள்.
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 22.6.2025
இன்று அதிகாலை 01.52 வரை ஏகாதசி. பின்னர் இரவு 11.25 வரை துவாதசி. பிறகு திரியோதசி.
இன்று மாலை 03.52 வரை பரணி. பின்னர் கார்த்திகை.
இன்று மாலை 03.33 வரை சுகர்மம். பின்னர் திருதி.
இன்று காலை 01.52 வரை பாலவம் . பின்னர் பிற்பகல் 12.39 வரை கௌலவம். பிறகு இரவு 11.25 வரை தைத்தூலம். பின்பு கரசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை