·   ·  232 news
  •  ·  0 friends

கனடிய பிரதமர் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்

கனடிய பிரதமர் மார்க் கார்னி ,அவுஸ்திரேலியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.

கனடிய நேரப்படி திங்கள்கிழமை மாலை மற்றும் அவுஸ்திரேலிய நேரப்படி செவ்வாய்க்கிழமை நண்பகலில், அவர் சிட்னி நகரை அடைந்தார்.

சிட்னியில் தொழில்துறை தலைவர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ள அவர், பின்னர் கார்னி புதன்கிழமை Lowy Institute சிந்தனைக் குழுமத்தில் உரையாற்றவுள்ளார். வியாழக்கிழமை தலைநகர் கன்பெராவுக்கு சென்று அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

வார இறுதிக்குள் அவர் அவுஸ்திரேலிய பிரதமர் அன்தனி அல்பானீஸை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்காத கார்னியின் அலுவலகம், இந்தியாவில் நடைபெற்ற அவரது சந்திப்பிற்குப் பின்னர் திட்டமிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பையும் ரத்து செய்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஒட்டாவா மற்றும் கன்பெரா இடையே ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அதன்படி, கனடா தனது ஆர்க்டிக் பிராந்திய பாதுகாப்பிற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து அமைப்பை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

  • 60
  • More
Comments (0)
Login or Join to comment.