யாராக இருந்தாலும் அழிப்போம் - ஈரான் புதிய தலைவருக்கு எச்சரிக்கை
ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமேனியின் மகன் மோஜ்தபா கமேனியும் கொல்லப்படுவார் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் இணைந்து கடந்த சனிக்கிழமை ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதல்களில் ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி மட்டுமின்றி, அவரது மனைவி, மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், கமேனியின் இரண்டாவது மகன் மோஜ்தபா கமேனியை புதிய தலைவராக நிபுணர்கள் சபை தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இன்னும் நிபுணர்கள் சபையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, ஈரானின் புதிய உச்ச தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரையும் குறிவைப்போம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இஸ்ரேலை அழிக்கவும், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளை அச்சுறுத்தவும், ஈரானிய மக்களை ஒடுக்கவும் நினைக்கும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட எந்தவொரு தலைவரும், கொல்வதற்கான ஒரு தெளிவானஇலக்காக இருப்பார் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.