அரிப்பு ஏற்படுவதற்கு வறண்ட சருமம் ஒரு காரணமாகிறது. உடல் உஷ்ணம், ,சரியாக நீர் அருந்தாமை, உடல் தூய்மையை சரிவர கடைபிடிக்காமல் இருப்பது, அதிக வியர்வை மேலும் வெளிச் சூழ்நிலையில் இருக்கும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் அரிப்பு போன்ற காரணங்கள் இருக்கின்றன.
மிக மிக எளிதானது சுத்தமான தேங்காய் எண்ணெயை அரிப்பு உள்ள இடங்களில் தேய்த்து விடுவது.
உடல் அரிப்பு சூரணம்.
சரக்கொன்றை பூ-100 கி.
சீமை அகத்தி இலை—50 கி
குப்பைமேனி இலை—50 கி
நவச்சாரம்-10 கி
எலுமிச்சை பழச்சாற்றில் மேற்கூறியவற்றை சேர்த்து நன்கு மைய அரைத்து உடலில் பூசி, ஒரு மணி நேரம் கழித்து கடலை மாவு ,சீயக்காய் போட்டு குளித்து வந்தால் இந்த அரிப்பு சரியாகும்.. தொடர்ந்து 10 நாட்கள் செய்வது நல்லது.
படை, சொறி, சிரங்கு, அரிப்பு, நமைச்சல்,ஊரல் போன்ற தோல் வியாதிகள் நீங்கும்.
குப்பைமேனி இலை
குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள், கல் உப்பு சேர்த்து, அரைத்து, அரிப்புள்ள இடங்களில் பூசி, காய்ந்த பின் குளிக்க, நிவாரணம் கிடைக்கும்.
வேப்பிலை
வேப்பிலையோடு வெங்காயம் சேர்த்து அரைத்து, அரிப்புள்ள இடங்களில் தேய்த்து, அரைமணி நேரம் கழித்து கழுவினால் அரிப்பு நீங்கும்.
நன்னாரி வேர்
நன்னாரி வேரை அரை லிட்டர் நீரில், நன்றாக கொதிக்க வைத்து, அது 200 மில்லியாக சுண்டியதும், காலையில் 100 மி, மாலையில் 100 மி என குடித்து வர அனைத்து வித தோல் வியாதிகளும் தீரும்.
அருகம்புல் சாறு
அருகம்புல் சாறு எடுத்து குடிக்கலாம்.மேலும், சாற்றை அரிப்பு இடத்தில் பூசலாம்.
கற்றாழை
கற்றாழை யின் சதைப் பகுதியை எடுத்து அரிப்பு பகுதிகளில் பூசி வந்தால் நிவாரணம் பெறலாம்.
ஒவ்வாமை
சில உணவுப் பொருட்கள் முக்கியமாக கத்தரிக்காய்,, கருவாடு போன்றவையினாலும் அரிப்பு ஏற்படும். இத்தகைய உணவுப் பொருட்களை கண்டறிந்து அவற்றை தவிர்க்கலாம்.
குளியல் பொடி
இப்போது எல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் உடலில் தேய்த்து குளிப்பதற்கென்றே மூலிகைப் பொடிகள் விற்கின்றன.இவற்றை வாங்கி பயன்பெறலாம்.
கடலைமாவு, பச்சைப்பயறு மாவு, கஸ்தூரி மஞ்சள் பொடி போட்டு குளித்து வந்தால் தோல் வியாதிகள் நீங்கும்.
பொடி தயாரிக்க
வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சைப்பயறு, கடலைப்பருப்பு, துளசி, வெந்தயம்,அருகம்புல், எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள், சீயக்காய், கொஞ்சம் பச்சரிசி போட்டு சீயக்காய் அரைக்கும் அரவையில் அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் தேய்த்து குளித்து வந்தால் சருமம் பொலிவு பெறும்.
தகவல் : இணையம்