·   ·  231 news
  •  ·  0 friends

மத்திய கிழக்கு போரில் கனடா படை பங்கேற்காது - கனடிய பிரதமர்

 மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, நடைபெற்று வரும் போரில் கனடா இராணுவம் பங்கேற்காது என்று கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின்னர் உருவாகியுள்ள நிலைமை குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த மோதலில் கனடா இராணுவமாக ஈடுபடுவதற்கான திட்டம் எதுவும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

இந்த நடவடிக்கைகளுக்கான இராணுவ தயாரிப்பிலும் திட்டமிடலிலும் கனடா பங்கேற்கவில்லை எனவும், எதிர்காலத்திலும் இராணுவ ரீதியாக இணைவது எதிர்பார்க்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை கனடா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

  • 25
  • More
Comments (0)
Login or Join to comment.