·   ·  1110 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 1.3.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலம் பிறக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் விலகும். குழந்தைகள் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கடன் தொடர்பான நெருக்கடிகள் சற்று குறையும். சிக்கல்கள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

ரிஷபம்

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சொத்து சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். கைப்பேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மிதுனம்

முயற்சிகளில் இருந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த புதிய பாதைகள் புலப்படும். வியாபார பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கடகம்

தொழில் நிமித்தமான திட்டங்கள் கைகூடும். குழந்தைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகப் பணிகளில் இருந்த பொறுப்புக்கள் குறையும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

சிம்மம்

பெரிய முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். பணிகளில் இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

சிகை அலங்கார பணிகளில் லாபம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். தேவையற்ற வாதங்களினால் விரயங்கள் நேரிடலாம். மனதில் அந்நிய தேச பயணம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கம் இன்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றம் உண்டாகும். துணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

துலாம்

செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனை ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்காலம் குறித்த கண்ணோட்டம் பிறக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணம் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

விருச்சிகம்

அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். தாய்வழி உறவுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படும். கல்வியில் இருந்த மந்தத்தன்மை விலகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். விவசாய செயல்களில் பொறுமை வேண்டும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

தனுசு

வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். வரவுகளில் தாமதம் உண்டாகும். அதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை அளிக்கும். வெளியூர் பயணத்தால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பயனற்ற பேச்சுகளை தவிர்க்கவும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மகரம்

கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் பிறக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். புதிய வேலை நிமித்தமான எண்ணங்கள் கைகூடும். வியாபார பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். கால்நடை பணிகளில் லாபங்கள் ஏற்படும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

கும்பம்

போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வாழ்க்கை துணை வழியில் ஆதாயம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மறைமுகமாக இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

மீனம்

சகோதரர்கள் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மனதில் இருக்கும் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். வியாபார தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

  • 109
  • More
Comments (0)
Login or Join to comment.