இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வஞ்சனையான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். அயல்நாட்டு பொருட்கள் மீது ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். குழப்பம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
எதிர்பாராத பயணங்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு செயல்பாடுகளில் அலைச்சல்கள் காணப்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மதிப்புகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மிதுனம்
இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர் வழியில் ஆதரவுகள் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகள் எண்ணியவை நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தோற்றப்பொழிவில் மாற்றங்கள் ஏற்படும். மனம் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். பேச்சுத் திறமையால் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
சிம்மம்
பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் திருப்தி ஏற்படும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். செல்வாக்கு நிலை மேம்படும். மனதளவில் புதிய பக்குவம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தேக தோற்றத்தில் மாற்றம் உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி
வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பயணங்களால் அனுபவம் உண்டாகும். பணி நிமித்தமாக இடமாற்றம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்க்க முயல்வீர்கள். எண்ணியது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
சக ஊழியர்களால் ஆதரவான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்கள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடன் நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் குறையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விருச்சிகம்
புதிய நபர்களால் மாற்றமான சூழல்கள் அமையும். உறவினர்கள் வழியில் சுபிட்சம் ஏற்படும். சொந்த ஊர் பயண வாய்ப்புகள் கைகூடும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். அரசு துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
தனுசு
தாய் வழி உறவுகளிடம் ஒற்றுமை ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு மாற்று வழிகளை யோசிப்பீர்கள். வீட்டின் தேவைகள் அறிந்து நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு குறித்த ஆலோசனை கிடைக்கும். கடன் முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். அரசு காரியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான பயணம் கைகூடும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மகரம்
எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் மாற்றமான சூழல் அமையும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கும்பம்
குடும்ப உறுப்பினர்கள் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். இணைய துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகளில் இருந்த தாமதங்கள் குறையும். பொன் பொருள் மீதான ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் வழியில் எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். சேமிப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
