·   ·  11 videos
  •  ·  1 friends
  • 2 followers
  • 354
  • More

மீசாலை சோலை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பொங்கல்

மீசாலை சோலை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பொங்கல்

Comments (0)
Login or Join to comment.
·
Added article

இந்திய திரையுலகின் ஈடு இணையற்ற இசை மேதைகளில் ஒருவரான ஆஷா போஸ்லே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நம்மை விட்டு மறைந்துள்ளார்.. 92 வயதாகும் இந்தப் புகழ்பெற்ற பாடகிக்கு ஏற்பட்ட திடீர் பாதிப்பு, இந்திய இசை ரசிகர்களைப் பெரும் கவலையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே அவருக்கு லேசான உடல்நல பாதிப்புகள் இருந்த நிலையில், நேற்று அவரது நிலைமை சற்று மோசமடைந்துள்ளது.. உடனடியாக மும்பையில் உள்ள ஒரு உயர்தர தனியார் மருத்துவமனையில் ஆஷா போஸ்லே அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து ஆஷா போஸ்லேவின் பேத்தி விளக்கம் தந்திருந்தார்.. அதில், ஆஷாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று (Chest Infection) காரணமாகவே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், தற்சமயம் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதுமை காரணமாக அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர் குழுவால் அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஒருபுறம் தகவல்கள் வெளியானாலும், அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து வரும் தகவல்கள் மார்புத் தொற்று தொடர்பான சிகிச்சையை உறுதிப்படுத்தின. இந்நிலையில் நம்மை விட்டு இசைக்குயில் பறந்துள்ளது.. ஆஷா போஸ்லேவின் இசைப் பயணம் என்பது ஒரு சகாப்தம். மறைந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் தங்கை என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது தனித்துவமான குரலால் ஏழு தசாப்தங்களாக் திரையுலகை ஆட்சி செய்தவர்.

  • 27
·
Added a post

ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருட்ரட்சத்தை அறிந்து வாங்க வேண்டும். ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை உள்ளன. ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும்.

பத்ராட்சம் என்ற மணி ருத்ராட்சம் போலவே இருக்கும், அவை நல்ல பலன்களைத் தராது. உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் மூழ்கி விடும் போலியானவை மிதக்கும். மேலும் கல்லில் உரைக்கும் போது தங்க நிற கோடுகள் கல்லில் பதியும். இரு செம்பு நாணயங்கள் நடுவில் ருத்ராட்சத்தை வைத்தால், மின் சுழற்சியின் காரணமாக அது சுழலும். இவ்வாறு உண்மையான ருத்ராட்சத்தை சில ஆய்வுகள் மூலம் கண்டறியலாம். தாவர வகைகளில் மின் காந்த சக்தி ஒரு குறிப்பிடும் அளவு உள்ளது ருட்ராட்சதில் மட்டும்தான்.

ருத்ராட்சத்தை அணிவதாயின் சிவப்பு நிற நூலில் அணியவேண்டும். அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பியிலோ, வெள்ளிக் கம்பியிலோ அணியலாம். ஒரு சிவனடியாரிடம் இருந்து ருத்ராட்சத்தை அணியும் வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

ஒரு நன்னாளில் நமக்குகந்த ருத்ராட்சத்தை வாங்கி சுத்தமான நீரில் கழுவிய பின்பு காய்ச்சாத பசும்பால், தேன், கற்கண்டு பொடி, நெய், தயிர் ஆகிய ஐந்து பொருட்களையும் ஒன்றாக கலந்து அபிசேகம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமாக துடைத்துவிட்டு ஒரு வளர்பிறை திங்கட்கிழமை அதிகாலையில் திருகோவிலில் பூஜை செய்து அணியவேண்டும்.

ருத்ராட்சத்தை தினமும் அணிவதற்கு முன்பாக நமது இஷ்ட தேவதா மந்திரத்தை நிச்சயமாக சொல்ல வேண்டும். சர்வ மந்திரங்களும் வசியம் ஆகக்கூடிய சிறந்த காந்த ஈர்ப்பு மண்டலத்தைக் கொண்டது ருத்ராட்சம்.

ஒரு முக ருத்ராட்சம்

ஏக முக ருத்ராட்சம் சூரியனுக்கு உரியது, சகலவிதமான பித்ரு தோஷங்களை விலக்கி எல்லா நலன்களையும், நல்ல வாழ்வையும் தரக்கூடியது. ஏக முகம் எனப்படும் ருத்ராட்சம் மிகவும் அரிதான ஒன்று, பல வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றக்கூடியது. சிவபெருமானின் பூரண அருளை தரக்கூடியது. இதனை ஒரு படி அளவுள்ள எதாவது ஒரு தானியத்தின் அடியில் வைத்தால் தானாகவே மேல வரக்கூடிய தன்மை உள்ளது என்று ஒரு பழமையான நூல் தெரிவிக்கிறது.

மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

இரு முக ருத்ராட்சம்

த்விமுக ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரருக்கும், நவக்கிரகங்களில் சந்திரனுக்கும் உரியதாகும். இதை அணிவதால் குடும்ப உறவுகளில் நல்ல சுமுகமான போக்கு நிலைக்கும். நம் உடலில் இருக்கும் நீர்த்தன்மையில் நன்மை தரத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஜாதகத்தில் சந்திர பலம் குறைதவர்களும், மனோ ரீதியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களும் இருமுக ருத்ராட்சம் அணிவதால் நல்ல பலன்களை பெறலாம்.

மந்திரம்: ‘ஓம் நம’

மூன்று முக ருத்ராட்சம்

திரிமுக ருத்ராட்சம், அக்னி அம்சம் பெற்றது, செவ்வாய்க்கு உரியது. மனதில் தைரியத்தையும், துணிவையும் தருவதோடு உடலியக்கத்தில் துடிப்பான செயல்திறனையும் உண்டாக்கும். விளையாட்டுத் துறை, ராணுவத்துறை, தொழிற்சாலை போன்றவற்றில் உள்ளவர்கள் அணிந்தால் நல்ல பலன்களை தரும்.

மந்திரம்: ‘ஓம் க்லிம் நம’

நான்கு முக ருத்ராட்சம்

சதுர்முக ருத்ராட்சம் பிரம்மாவின் அம்சம் கொண்டது, புதனுக்கு உரியது. இதையணிவதால் சுவாச கோளாறுகள் கட்டுப்படும், திக்குவாய் உள்ளவர்களுக்கு பேச்சுத்திறன் மேம்படும். கணிபொறி, மின்னியல் ஆய்வுகள், நிர்வாக பொறுப்பு போன்றவற்றில் உள்ளவர்கள் இதை அணிவதால் நல்ல பலன்களை பெறலாம்.

மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

ஐந்து முக ருத்ராட்சம்

பரவலாகக் காணக்கிடைக்கும் பஞ்சமுக ருத்ராட்சம் சிவ அம்சம் பொருந்தியது, குரு பகவானுக்கு உரியது. கல்வி அறிவையும், மனத்தின் சமநிலையையும் ஏற்படுத்தும். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும், மேலும் இரத்த அழுத்தம் சமந்தமான நோய்களை நீக்கும். இது ஒரு காந்த ஆற்றலை உள்ளடக்கியது, நம்மை சுற்றி ஒரு கவசம் போன்று காப்பாற்றும்.

மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

ஆறு முக ருத்ராட்சம்

சண்முக ருத்ராட்சம் முருகப்பெருமானின் அம்சம் கொண்டது, சுக்ரனுக்கு உரியது. மனத்தின் வசீகர சக்தியை மேம்படுத்தும். தொழில் ரீதியாக மற்றும் வெகுஜனத் தொடர்பு உள்ளவர்கள் அணிந்தால் ஜனவசிய சக்தியை பெற்று நல்ல பலன்களை பெறலாம்.

மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

ஏழு முக ருத்ராட்சம்

சப்தமுக ருத்ராட்சம் மகாலட்சுமியின் அம்சம் கொண்டது, சனீஸ்வர பகவானுக்கு உரியது. சனிபகவானின் அலைவீச்சை சாதகமாக நன்மை தரும் விதமாக மாற்றக்கூடியது. வறுமை நீங்கவும், ஏழரை சனி மற்றும் சனி கிரக தோஷம் போன்றவற்றில் இருந்து விடுபட உதவும். இந்த ருத்ராட்சத்தை உடலில் அணிவதை விட பூஜை அறையில் வைத்து முறைப்படி வணங்குவதே நல்லது.

மந்திரம்: ‘ஓம் ஹம் நம’

எண் முக ருத்ராட்சம்

அஷ்டமுக ருத்ராட்சம் விநாயகப் பெருமானின் அம்சம் கொண்டது, இராகுவின் அலைவீச்சை கட்டுப்படுத்தக் கூடிய காந்த மண்டல சுழற்சியை உடையது. ருத்ராட்சங்களிலேயே மிகவும் கவனமாக சோதனை செய்தபின்பு பூஜை அறையில் வைத்து முறைப்படி வணங்குவதே நல்லது. பெரும்பாலும் உடலில் அணிவதை தவிர்க்கப்படுகிறது. இந்த ருத்ராட்சம் நூதனமான அனுபவங்களை தரக்கூடியது, ஒருவரை அறிவியலின் அடிப்படைக்கு உட்படாத புதிரான விளைவுகளுக்கு உண்டாக்க கூடிய அதீத சக்தியின் சுழற்களம் அமையப்பெற்றது.

மந்திரம்: ‘ஓம் ஹம் நம’

ஒன்பது முக ருத்ராட்சம்

நவமுக ருத்ராட்சம் அன்னை பராசக்தி, அத்யா சக்தியின் அம்சம் கொண்டது, கேதுவுக்கு உரியது. கேதுவின் கெடு பலன்கலான அடிபடுதல், கெட்ட கனவுகள், எதிர்மறை எண்ணங்கள் போன்ற சங்கடங்களை தீர்க்கும். இதனை அணிவதால் பொறுமையும், நிதானமும் நிலை நிற்பதோடு, மனதில் பயம் சார்ந்த உணர்வுகள் யாவும் விலகி விடும். பிற மொழிகளில் நிபுணத்துவம், இலக்கண, இலக்கியம் சார்ந்த அறிவின் மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்லும்.

மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

பத்து முக ருத்ராட்சம்

தசமுக ருத்ராட்சம் மகாவிஷ்ணுவின் அம்சம் கொண்டது, தசாவதாரங்களையும் குறிப்பது போல பத்து முகங்களை கொண்டது. ஹரிஹரர்களின் திருவருளை ஒருங்கே பெற்று தருவதாக நம்பப்படுகிறது.

மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’

பதினோரு முக ருத்ராட்சம்

ஏகதச ருத்ராட்சம் ருத்ர அவதாரமான ஆஞ்சநேயரின் அம்சம் கொண்டது. மனத்தின் ஆற்றலை பன்மடங்காக ஆக்கக் கூடியது. பிரம்மச்சரியத்தில் நிலை பெற விரும்புவோர் இதனை அணிந்து நற்பயன் பெறலாம்.

மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் ஹம் நம’

பன்னிரு முக ருத்ராட்சம்

துவாதச ருத்ராட்சம் சூரிய பகவானின் திருவருளை பெற்றுத்தரக் கூடியது. அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்பார்பவர்கள், பணியில் உயர்வு பெற விரும்புபவர்கள், ஆன்மிக பலம் வேண்டுவோர் இந்த பன்னிரு முக ருத்ராட்சம் அணியலாம்.

மந்திரம்: ‘ஓம் க்ரௌம் ஷௌம் ரௌம் நம’

  • 27
·
Added a post

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதிமதுரம் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தைச் சிறிதளவு முயலலாம்.

அதிமதுரத்தின் சாறுகள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.

பொதுவாக அதிமதுரம் ஒரு 'நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும். ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக். அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

வயிற்றுப்புண்களுக்கு - அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் - காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை ‘அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்’ எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.

  • 33
·
Added a post

ஒரு அனுபவம் மிகுந்த மனிதர் தனது மகனுக்கு சில முக்கிய அறிவுரை வழங்கினகினார் 'மகனே, இந்த மூன்று காரியங்களை மறக்காமல் உன் வாழ்வில் செய்ய உறுதிப்படுத்திக் கொள்

1. சிறந்த உணவை உண்ண வேண்டும்.

2. மிகவும் வசதியான படுக்கையில் உறங்க வேண்டும்

3. சிறந்த வீட்டில் வசிக்க வேண்டும்.

அதை கேட்ட மகன் பதிலளித்தார்;

அப்பா நாம் ஏழை என்று உங்களுக்குத் தெரியும், இவற்றையெல்லாம் நான் எப்படி செய்ய முடியும். என்றான்

அதற்கு தந்தை பதிலளித்தார்;

1. நீ உண்மையிலேயே பசியுடன் இருக்கும்போது மட்டுமே சாப்பிட்டால், நீ மிகவும் சுவையான உணவை சாப்பிடு வதை உணர்வாய்

2. நீ கடினமாகவும், நேர்மையாகவும், உழைத்து சோர்வாக தூங்கச் சென்றால், நீ மிகவும் வசதியான நிம்மதியான படுக்கை அமயப்பெருவாய்.

3. நீ மக்களிடம் மரியாதையாக இருந்தால், அவர்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தும் போது, நீ அவர்களின் இதயங்களில் வசிப்பாய், அது சிறந்த வீட்டில் நீ குடியிருப்பதை உறுதி படுத்தும்.

ஞானத்தின் அழகான வார்த்தைகள், கட்டாயம் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும்.

  • 38
·
Added a post

தானே விமானத்தை செலுத்தி சென்ற ஈரான் நாட்டின் சபாநாயகர்! அவர்களால் எல்லாமே முடியும்!

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf), சமீபத்தில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது தானே விமானத்தை இயக்கியது தொடர்பான செய்தி உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

முகமது பாகர் காலிபாப் ஒரு பயிற்சி பெற்ற மற்றும் சான்றிதழ் பெற்ற விமானி ஆவார். ஏர்பஸ் (Airbus) ரக விமானங்களை இயக்கும் தகுதி இவருக்கு உண்டு.

ஏப்ரல் 2026-ல், அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் தூதுக்குழுவுடன் இவர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்கு சென்றார்.

பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவிய போதிலும், அவர் தானே விமானத்தை இயக்கிச் சென்றது ஒரு துணிச்சலான செயலாகப் பார்க்கப்படுகின்றது.

அந்தப் பயணத்தின் போது, போரில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் பள்ளிப் பைகளை இருக்கைகளில் வைத்து, அவர்களைத் தனது "பயணத் தோழர்கள்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

இவர் இதற்கு முன்னதாக 2024 அக்டோபரிலும், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் தானே விமானத்தை ஓட்டிச் சென்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தரையிறக்கி உலகையே வியக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 43
·
Added a post

என் அலுவலத்தின் பக்கத்திலேயே ஒரு சிப்ஸ் தயாரிக்கற கடை இருக்கு.

அங்க 11 மணிக்கு பாமாயிலை பெரிய கடாய்ல ஊற்றி முதல்ல ஆனியன் பக்கோடா, பின்னர் அதே எண்ணையில் 3 மணிக்கு சமோசா, அதற்கு அடுத்ததாக உருளை சிப்ஸ்ன்னு போட்டு முடிக்கிறாங்க..

எண்ணைய் குறைய குறைய இருக்கிற எண்ணைய்லேயே இன்னும் கொஞ்சம் புது எண்ணையை சேத்துக்கறாங்க.

ஒரு முறை பொரிச்ச எண்ணையை மறுபடியும் சமையலுக்கு பயன்படுத்தினா உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும்னு சொல்றாங்க.

ஆனா இதெல்லாம் கடைக்காரங்க கடைபிடிக்கறது இல்லே.

இதோட இந்த எண்ணெய்ய விட்டுட்டா பரவாயில்லே.

அடுத்த நாள் இதை வாங்கிட்டுப்போறதுக்கு ரோடோரங்கள்ல ஃபாஸ்ட் ஃபுட் கடை வச்சிருக்கறவன் கேனோட வந்து நிக்கிறான்.

இந்த சிப்ஸ் கடைக்காரன் தான் வாங்கிய விலையில் இந்த யூஸ் பண்ண எண்ணையை பாதிவிலைக்கு அவன்கிட்ட தள்ளிவிடறான்..

அவன் அதை கொண்டுபோய் மறுபடியும் அதனோட கொஞ்சம் புது எண்ணையை சேர்த்து சிக்கன்லேந்து, மீன்லேந்து எல்லாத்தையும் பொரிக்க ஆரம்பிக்கறான்.

அவன் போடற பிரைடு ரைஸ், நூடுல்ஸ்ல இருந்து, பாஸ்ட் ஃபுட் மொத்தத்துக்கும் அந்த எண்ணைய்தான் பயன்படுத்தறான்..

மசாலா தூக்கலாப்போட்டு எண்ணைய் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஊத்தி ஒரு எக் நூடுல்ஸ் போடுப்பான்னு ஆர்டர் பண்றவங்களுக்கு இதெல்லாமா தெரியப்போகுது?

அப்படியே கெட்ட கொழுப்புதான் உடம்புல உட்காரும்.

இவனோட போகலே, வீட்ல இருக்கிற குழந்தைகளுக்கும் இதை பார்சல் வாங்கிட்டு போய் கொடுத்து அவங்க உடல்ஆரோக்கியத்தையும் கெடுக்கிறவங்களை நினைச்சு வருத்தப்படறதா இல்லே பரிதாபப்படறதான்னு தெரியல..

நம்ம நாட்ல உணவு விஷயத்தில் விழிப்புணர்வு என்பது மக்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது..

அரசாங்கமும் இவற்றை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை

அடுத்த தலைமுறைக்கு இந்த விழிப்புணர்வைஅழுத்தாமாக வலுகட்டாய படுத்தி (நம்ம பிள்ளைங்களுக்குதான்) சொல்லி கொடுங்கள் இல்லை என்றால் இதை புரிதல் இல்லாமல் இளம்நோயாளிகள் ஆகி விடுவார்கள்

---- இணையப் பதிவு

  • 42
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சகோதர வகையில் பயனடைவீர்கள். இழுபறியாக இருந்த கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். பண வரவு உண்டு.

ரிஷபம்: எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வெளி வட்டாரத்தில் பாராட்டு கிடைக்கும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.

மிதுனம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் மன நிம்மதி கிடைக்கும். பெற்றோர் உடல்நிலை சீராகும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

கடகம்: எதிர்பார்த்த உதவிகள், வாய்ப்புகள் தடைபடும். பேச்சில் நிதானம் அவசியம். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். பயணத்தின்போது கவனம் தேவை. நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உத்யோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வாகனப் பழுது நீங்கும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி: வருங்கால வளர்ச்சிக்காக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பழுதான வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. வியாபாரத்தில் வராக்கடன் வந்துசேரும்.

துலாம்: உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். எக்காரியத்திலும் பொறுமை தேவை.

விருச்சிகம்: சொந்த பந்தங்கள் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் வீணாக தலையிடாதீர்கள்.

தனுசு: தடைபட்ட வேலையை உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சில சிக்கல்களுக்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வெளி உணவுகள் வேண்டாம். பயணத்தில் கவனம் தேவை.

மகரம்: எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டு பார்க்க நேரிடும். கணவன் - மனைவி இடையே மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.

கும்பம்: திடீர் வெளியூர் பயணம் மற்றும் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நிதானமாக செயல்படுங்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கலைப் பொருட்கள் சேரும்.

மீனம்: வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிகப் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

  • 82
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை 13.4.2026

இன்று இரவு 10.26 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று பிற்பகல் 01.22 வரை அவிட்டம். பின்னர் சதயம்.

இன்று பிற்பகல் 02.42 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று காலை 10.27 வரை பவம். பின்னர் இரவு 10.26 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று பிற்பகல் 01.22 வரை அவிட்டம். பின்னர் சதயம்.

இன்று பிற்பகல் 02.42 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று காலை 06.03 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=480&dpx=2&t=1776049054

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 83

Good Morning...

  • 88
·
Added a news

ஸ்கார்பாரோ பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

கென்னடி சாலை மற்றும் எல்ஸ்மியர் சாலை சந்திப்புப் பகுதியில் பல வாகனங்கள் தீப்பற்றி எரிவதாகக் காலை 5:05 மணியளவில் டொராண்டோ காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த டொராண்டோ தீயணைப்புப் படையினர், அங்குள்ள கார் விற்பனை நிலையம் (Car Dealership) ஒன்றில் நான்கு வாகனங்கள் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டறிந்து, விரைவாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு எவரும் இருக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு தீயணைப்பு வாகனம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, விசாரணையின் நிமித்தமாக கென்னடி சாலையின் வடக்கு நோக்கிய பாதைகள் ஷ்ரோப்ஷையர் டிரைவ் பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

  • 162
·
Added a post

1300 ஆண்டுகள் நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை அறிவியலை அதிரவைத்துள்ளது.

பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் மனிதர்களை போல் படுத்த நிலையில் 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை காணப்பட்டு வருகின்றது.

நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை, எப்படி இவ்வளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும், இதற்கான அர்ச்சனைகளும், அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன. மேலும் நீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற பக்தர்கள் எப்போதும் இங்கு வந்த வண்ணமே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • 162
  • 167
·
Added a post

விமானத்தினுள், விமானியின் அறையை சுத்தம் செய்யும் ஒரு பணியாள், விமானியின் காபினெட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது,

"விமானத்தை பறக்க வைப்பது எப்படி?(தொகுதி 1)" என்று தலைப்பிட்ட ஒரு புத்தகத்தை பார்த்தார்.

அவர் முதல் பக்கத்தைத் திறந்தார்: "என்ஜினை ஆன் செய்ய, சிவப்பு பொத்தானை அழுத்தவும்" என்று இருந்தது. அவர் அவ்வாறே செய்தார், விமான இயந்திரம் இயங்க தொடங்கியது.

அவர் மகிழ்ச்சியுடன் அடுத்த பக்கத்தைத் திறந்தார்..

"விமானத்தை நகர்த்த, நீல பொத்தானை அழுத்தவும்... "அவர் அவ்வாறே செய்தார், விமானம் அற்புதமான வேகத்தில் நகரத் தொடங்கியது.

அவர் பறக்க விரும்பினார், எனவே அவர் மூன்றாவது பக்கத்தைத் திறந்தார்: விமானத்தை பறக்க வைக்க, பச்சை பொத்தானை அழுத்தவும்.."

அவர் அவ்வாறே செய்தார், விமானம் பறக்கத் தொடங்கியது.

உற்சாகமாக இருந்தார்...!!

இருபது நிமிடங்களுக்குப் பிறகு, பறந்து திருப்தி ஆன பின், விமானத்தை தரையிறங்க விரும்பினார், எனவே அவர் நான்காவது பக்கத்திற்குச் செல்ல முடிவு செய்தார்.. நான்காம் பக்கத்தில், "விமானத்தை எவ்வாறு தரையிறக்குவது என்பதை அறிய, அருகிலுள்ள புத்தகக் கடையில் தொகுதி 2 ஐ வாங்கவும்!"

!!!!!!!

முழுமையான தகவல் இல்லாமல் எதையும் முயற்சிக்காதீர்கள். பாதி கற்பது ஆபத்தானது மட்டுமல்ல அழிவுகரமானதும் கூட. முழுமையாக கற்றுக்கொண்டு செயலில் இறங்குங்கள்.

  • 173
·
Added a post
  1. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையும் உடையது. அதுமட்டுமில்லாமல் உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது.
  2. உணவைச் இலகுவாக செரிக்க வைக்கின்றது.
  3. உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.
  4. மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
  5. மிளகு, சுக்கு, சிற்றரத்தை, அதி மதுரம் ஆகிய இவற்றை சமமாக எடுத்துக் கஷாயம் செய்து மூன்று வேளை குடித்து வர ஜலதோஷத்தோடு உள்ள ஜூரமும் இருமலும் குணமாகும்.
  6. சின்ன வெங்காயம், மிளகு, கிராம்பு இவைகளை மையாக அரைத்து சிறிது தேனில் கலந்து சாப்பிட்டு வர, நெஞ்சுவலி நீங்கும்.
  7. அடுக்குத் தும்மல் பிரச்சனை அடிக்கடி வருகிறதா? எனில், மிளகை தூள் செய்து அந்தப் பொடியை நெருப்புத் தணலில் இட்டு அதிலிருந்து வரும் புகையை இழுக்க அடுக்குத் தும்மல் நின்று விடும்.
  8. மிளகுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும். சளித் தொல்லை இருக்காது.
  9. இருமல் தொந்தரவு இருந்தால் டீ அல்லது பாலில் மிளகு, ஏலக்காய், இஞ்சி, ஓமம் ஆகியவற்றை அரைத்துப் போட்டு குடியுங்கள் இருமல் பிரச்சனை நீங்கும்.
  • 171
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வியாபார பணிகளில் முதலீடுகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். சிற்ப பணிகளில் கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

ரிஷபம்

பொது பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை சீரமைப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் புதிய பதவிகள் கிடைக்கும். நன்மை பயக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மிதுனம்

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சாந்தம் நிலவும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கடகம்

குடும்பத்தில் சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் உடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். நேர்மறையான சிந்தனைகள் மேம்படும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த சில செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். குழப்பம் தீரும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

சிம்மம்

நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவுகள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். பயணங்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

 

கன்னி

உணவு முறையில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடமிருந்து வந்த வேறுபாடுகள் குறையும். மறதி பிரச்சனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். திருப்பங்கள் நிறைந்த சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும் மந்த தன்மையும் ஏற்படும். நலம் சூழும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

துலாம்

மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். சுபம் தரும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணம் முலம் மாற்றமான அனுபவம் கிடைக்கும். மனை சார்ந்த செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை தவிர்க்கவும். மேலதிகாரிகளிடம் உதவி கிடைக்கும். லாபம் பெருகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

தனுசு

சகோதர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். போட்டி மனப்பான்மையை குறைத்து கொள்வது நல்லது. காது தொடர்பான இன்னல்கள் குறையும். இசை சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கனிவான செயல்பாடுகளால் மதிப்புகள் அதிகரிக்கும். அமைதி பொங்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மகரம்

கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படும். பேச்சுவார்த்தைகளால் சாதகமான சூழல் அமையும். தன வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். பணி நிமித்தமான சில பொறுப்புகள் குறையும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்து செயல்படவும். உழைப்பிற்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பெருமை சேரும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

கும்பம்

பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் பலரின் ஆதரவுகளையும் பெறுவீர்கள். உயரதிகாரிகளிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிலும் திருப்தியின்மையான சூழல் உண்டாகும். புதிய செயல்களை மேற்கொள்ளும் பொழுது சிந்தித்து செயல்படுதல் அவசியம். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. சினம் அகலும் நாள்.

அதிர்ஷ்டஎண் : 1

அதிர்ஷ்டநிறம் : வெளிர் பச்சை

 

மீனம்

பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். தேர்ச்சி அடையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

  • 242
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12.4.2026

இன்று இரவு 10.28 வரை தசமி. பின்னர் ஏகாதசி.

இன்று பிற்பகல் 12.33 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.

இன்று மாலை 03.41 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

இன்று காலை 10.13 வரை பத்திரை. பின்னர் இரவு 10.28 வரை கரசை. பிறகு பவம்.

இன்று காலை 06.04 வரை சித்தயோகம். பின்னர் பிற்பகல் 12.33 வரை அமிர்த யோகம். பிறகு மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=479&dpx=2&t=1775962224

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 249

Good Morning...

  • 240
·
Added article

நடிகை ஸ்ரீலீலா மாத​வி​டாய் குறித்து தெரி​வித்த கருத்து சமூக வலை​தளங்​களில் பெரும் சர்ச்​சையை ஏற்படுத்தியுள்​ளது. பவன் கல்​யாணுடன் ஸ்ரீலீலா நடித்​துள்ள ‘உஸ்​தாத் பகத் சிங்’ படத்​தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்​தது.

அதில் கலந்​து​கொண்ட ஸ்ரீலீலா​விடம், ஒரு பெண்​ணாக அவர் எதிர்​கொண்ட பெரிய சவால் குறித்​துக் கேட்கப்பட்டது. அதற்​குப் பதிலளித்த ஸ்ரீலீலா, “பெண்களுக்கு மாத​வி​டாய் என்​பது சாக்​குப்​போக்கு கிடையாது. நான் பெரும்​பாலான பாடல்​களில் நடனமாடும்​போது மாத​வி​டாய் காலத்​தில்​தான் இருந்தேன்.

உடல்​ரீ​தி​யான தடைகளைத் தாண்டி முன்​னேற வேண்டும். உளவியல் ரீதி​யாகவோ அல்​லது உடல் ரீதி​யாகவோ மாத​விடாயைக் காரண​மாகச் சொல்​லக்​கூ​டாது” என்று கூறியிருந்​தார். மருத்​து​வப் படிப்பை முடித்​துள்ள ஸ்ரீலீலாவின் இந்​த கருத்​துக்கு சமூக வலை​தளங்​களில் கடுமை​யான விமர்​சனங்​கள் எழுந்​தன.

மருத்​து​வம் படித்த ஒரு​வருக்கு மாத​வி​டாய் வலி, ஒரு பெண்​ணின் அன்​றாடச் செயல்பாடு​களை எவ்​வளவு பாதிக்​கும் என்​பது தெரிந்​திருக்க வேண்​டும். அவ்​வாறு இருந்​தும், ‘இது ஒரு சாக்​குப்​போக்கு அல்ல’ என்று அவர் கூறியது, அந்த வலியை அனுபவிக்​கும் மில்​லியன் கணக்கான பெண்​களுக்கு இழைக்​கப்​படும் அநீதி என பலர் விமர்சித்து வருகின்​றனர்.

  • 321
·
Added a news

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் சர்னியா பகுதியில் அமைந்துள்ள லம்ப்டன் கல்லூரியின் வளாகத்தில் உள்ள மதுபான விடுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாணவர் நிர்வாகக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது, அதிகாலை 1 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காயமடைந்த நிலையில் மூன்று பேரை மீட்டுளள்னர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதான டேன் நிஸ்பெட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உள்ளூர் ஹாக்கி விளையாட்டுக் குழுக்களில் நன்கு அறியப்பட்டவரான இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனைய இருவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, லம்ப்டன் கல்லூரியின் பிரதான வளாகம் மற்றும் அதனுடன் இணைந்த அனைத்துப் பயிற்சி மையங்களும் இன்றயை தினம் மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சர்னியா பொலிஸார் இச்சம்பவத்தை ஒரு திட்டமிட்ட கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர் அல்லது காயமடைந்தவர்கள் அக்கல்லூரியின் மாணவர்களா? என்பதை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. 

  • 325
  • 315

அற்புதமான நடிகை இவர்.

  • 316
  • 319
  • 318
  • 1

இது உண்மைதானே?

மறைக்காமல் சொல்லுங்க....

  • 318