Ads

கிளிநொச்சி உயநகரில் வீதியோர வியாபாரத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 532
  • More
Info
Title:
கிளிநொச்சி உயநகரில் வீதியோர வியாபாரத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Duration:
01:45
Category:
Created:
Updated:
 ·   · 175 videos
  •  · 16 friends
  • S

    24 followers
Comments (0)
    கிளிநொச்சி உயநகரில் வீதியோர வியாபாரத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
    Empty
    typing a message...
    Connecting
    Connection failed
    Ads
    Latest Videos
    Advertisement
    Ads
    Featured Videos (Gallery View)
    Ads
    Added article 
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கம் விதமாக நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் 10-வது வாரத்தை எட்டி இருக்கிறது.முதலில் 18 போட்டியாளர்கள்.. பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் என பங்கேற்றனர்.தற்போது வரை 12 பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து அர்ச்சனாவுக்கும், நிக்சனுக்கும் மோதல் போக்கு நிலவுகிறது.முதலில் சமைக்கும்போது அர்ச்சனா அருகில் நின்றால் கவனக்குறைவு ஏற்படுவதாகவும் அவரை சமையலறை பக்கம் வர வேண்டாம் என்று நிக்சன் கூறுகிறார். இந்த வாக்குவாதம் மோதலில் முடிந்தது.அடுத்து கல்லூரி டாஸ்க் ஆசிரியர்களாக வந்த அர்ச்சனாவும் நிக்சன்-னும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்ததால் இருவரும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் சக பிக் பாஸ் போட்டியாளர் வினிதா பற்றி உருவ கேலி செய்த சம்பவத்தை நினைவூட்டி அர்ச்சனா பேசினார். இதனால் கடுமையாக கோபமடைந்த நிக்சன் அர்ச்சனாவை ஒருமையில் பேசி திட்டுகிறார். உச்சகட்டமாக கொலை மிரட்டல் மற்றும் பாலியல் மிரட்டல் விடுக்கும் விதமாக சொரிவிடுவேன் டி.. உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருக்கிறார்.என்ன செய்யப் போகிறார்? நிக்சன் தொடர்வாரா?
    • 48
    Added article 
    சீரியல் சினிமா என கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர் நடிகை தேவிப்பிரியா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கிறார்.சீரியல், சின்னத்திரை நிகழ்ச்சிகள், வெள்ளித்திரை என மாறி மாறி கலக்கிக் கொண்டிருக்கிறார் தேவிப்பிரியா. குறிப்பிட்டு சொன்னால் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர்.இவர் எழுதிய டாக்குமென்டரி மூலம் பிரபலம் அடைந்து நடிகர் விஜயின் மின்சார கனவு என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து உயிரோடு உயிராக என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.நடிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். நடிகைகள் சிம்ரன், நதியா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் நடிகை தேவிப்பிரியா.நடிகை ராதிகா இயக்கி நடிக்கும் சீரியல்களில் ஆஸ்தான நடிகையாக வலம் வரும் தேவிப்பிரியா போலீஸ் கதாபாத்திரம், வில்லி கதாபாத்திரம், குணசத்திர கதாபாத்திரம், ஹீரோயின் கதாபாத்திரம் என எது கிடைத்தாலும் அடித்து துவம்சம் செய்யக்கூடிய ஒரு ஆள். கனகச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி என்ற சீரியல் தான் இவர் முதலில் நடித்த சீரியல் இந்த சீரியலில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு பெருமளவு வரவேற்பு கிடைத்ததால் சின்னத்திரை இன்று வரை கைவிடாமல் வைத்திருக்கிறது.சின்னத்திரை உலகில் பல வெற்றி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். இப்படி தற்போது பிஸியாக இருக்கும் தேவிப்பிரியா-வின் வாழ்க்கைக்கு பின்னால் மிகவும் மோசமான ஒரு வரலாறு இருக்கிறது.தேவிப்பிரியாவின் வாழ்க்கையில் மாறாத மற்றும் மறக்க முடியாத வடுவாக இருக்கக்கூடிய ஒரு விஷயம் இது. இளம் வயதில் தன்னுடைய காதலின் காரணமாக.. காதலனின் தாயாரால் பழிவாங்கப்பட்டார் தேவிப்பிரியா என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.எப்படி என்றால்.. விபச்சார வழக்கில் சிக்க வைக்கப்பட்டார் தேவிப்பிரியா. சென்னை மாநகர பெண் உறுப்பினர் ஒருவரின் மகனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார் நடிகை தேவிப்பிரியா என கூறப்படுகிறது. அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளும் யோசனையிலும் இருந்திருக்கிறார். ஆனால் இதற்கு அவருடைய அம்மாவான சென்னை மாநகர பெண் உறுப்பினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.பலமுறை தேவிப்பிரியாவை மிரட்டியும் இருக்கிறார் என கூறப்படுகிறது. இதற்கு தேவிப்பிரியா மசியாததால் அவரை விபச்சார வழக்கில் சிக்க வைத்திருக்கிறார்.அதன் பிறகு நீதிமன்றத்தில் போராடி தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து தற்போது மீண்டும் சீரியலில் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் தேவிப்பிரியா. இந்த விவகாரத்தை பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.
    • 54
    Added a news 
    எனக்கு பலர் அரசியல் ரீதியாக சேறு பூசும் வேலைகளை செய்யலாம். என்னை கொலையும் செய்யலாம். உடலை இரண்டாக துண்டித்தாலும் என் உயிர் ராஜபக்ஷர்களுக்கே. மஹிந்த ராஜபக்ஷ போன்று இந்த நாட்டுக்கு இதுவரை எவரும் சேவை செய்யவில்லை. இனியும் செய்யப் போவதுமில்லை என்று பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.அரசியலமைப்புக்கு அமைய முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவேண்டும் என்பதுடன் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பிற்போடப்படப்பட்ட குறித்த தேர்தல் எப்போது இடம்பெறும் என்பது தெரியாது. இந்த தேர்தல் இடம் பெறவில்லை எனில் நிச்சயம் அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற வேண்டும்.எந்த தேர்தலுக்கும் கட்சி என்ற ரீதியில் நாம் தயாராக இருக்கிறோம். அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை. நிச்சயம் வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை எமது கட்சியிலிருந்து முன்னிறுத்துவோம். மொட்டுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் பொதுத் தேர்தல் மூன்றுக்கு முகங் கொடுத்துள்ளது. இந்த மூன்று தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமே உள்ளது. நாமே அவருக்கு ஆதரவு வழங்கினோம். அடுத்த தேர்தல் வரும் வரையில் அவருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். இடைநடுவில் குழப்பத்தை தோற்றுவிக்க மாட்டோம்.இருப்பினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ உருவாக்கிய கட்சியை உறுதியான கொள்ளைகளுடன் முன்னோக்கி கொண்டு செல்வோம். நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்ற கட்சியாக பொதுஜன பெரமுன காணப்படுகிறது. எதிர்காலத்தின் கட்சியின் எழுச்சிக்கு எமது பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர முன்னெடுத்து செல்வோம்.எனக்கு பலர் அரசியல் ரீதியாக சேறு பூசும் வேலைகளை செய்யலாம். என்னை கொலையும் செய்யலாம். எனது உடலை இரண்டாக துண்டித்தாலும் என் உயிர் ராஜபக்ஷர்களுக்கே. மஹிந்த ராஜபக்ஷ போன்று இந்த நாட்டுக்கு எவரும் இதுவரையில் சேவை செய்ததில்லை. இனியும் செய்யப் போவதும் இல்லை என்றார்.
    • 80
    Added a news 
    உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நேற்று நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் மற்றும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.இலங்கையை சேர்ந்த கூலிப்படை உறுப்பினரான கெப்டன் ரென்டீஸ் எனப்படும் அன்ரூ ரனிஸ் ஹேவகே தமது தாக்குதலின்போது கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவ உறுப்பினர்களின் Telegram கணக்கில் இன்று முற்பகல் தகவல் பகிரப்பட்டிருந்தது.உக்ரைனுக்காக போரிட்ட மேலும் இரண்டு இலங்கை கூலிப்படை உறுப்பினர்களும் தமது தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. உயிரிழந்த உக்ரைன் சிப்பாய்களின் சடலங்களை வௌியில் எடுத்துச்செல்ல இவர்கள் மூவரும் முயற்சித்தபோது, தாம் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்ததாக ரஷ்ய இராணுவத்தினர் கூறியுள்ளனர்.உக்ரைனில் உள்ள பக்முத் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கெப்டன் டென்டீஸ் என்ற பெயரில் உக்ரைனுக்குள் பிரபலமடைந்திருந்த அன்ரூ ரனிஸ் ஹேவகே இலங்கை காலாற்படையின் அதிகாரியாக செயற்பட்டுள்ளதை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது.இவர் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி லெப்டினன்டாக இராணுவ சேவையில் இருந்து விலகியுள்ளதுடன், அன்றைய நாளில் அவர் உத்தியோகபூர்வ பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழிலுக்கு சென்ற அவர் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உக்ரைனின் சர்வதேச இராணுவ லீக் எனும் பிரிவில் இணைந்து செயற்படத் தொடங்கியிருந்தார்.ரஷ்யாவுடன் நடைபெறுகின்ற யுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy வௌிநாட்டவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், அவர்கள் அதற்காக சர்வதேச இராணுவ லீக்கை ஸ்தாபித்தனர். உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தில் முன்னரங்க பாதுகாப்பு வலய கட்டளை அதிகாரியாக ரனீஸ் சேவையாற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.ரனீஸ் ஹேவகே உக்ரைனில் வௌிப்படுத்திய திறமைகள் காரணமாக உக்ரைன் ஜனாதிபதி அவருக்கு இராணுவ பதவி நிலை அதிகாரியாக பதவி உயர்வு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த, உக்ரைன் இராணுவத்தில் இணைந்து செயற்பட்டிருந்த ஏனைய இரண்டு இலங்கையர்கள் தொடர்பாகவும் இன்று (06) மாலை வரை தகவல்கள் வௌியாகவில்லை.
    • 86
    Added a news 
    “விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துபவர்கள், புலிகள் மாதிரிக் காட்சியளிப்பவர்கள், பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.”இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”போரில் உயிரிழந்த உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்தும் போது அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துபவர்கள், புலிகள் மாதிரிக் காட்சியளிப்பவர்கள், பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள்.அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது. சட்டம் தன் கடமைமையச் செய்யும். நீதிமன்றம் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாகச் செயற்படும்.விடுதலைப் புலிகள் அமைப்பு, இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.” – என்றார்.கடந்த மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
    • 85