சோற்றுக் கற்றாழையில் கருங்கற்றாழை , செங்கற்றாழை , பெருங்கற்றாழை , சிறுகற்றாழை , பேய் கற்றாழை மற்றும் ரயில் கற்றாழை என , பல வகைகள் உள்ளன. யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் ... பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் , சோறாக சாப்பிட கிடைத்ததால் , இதற்கு சோற்றுக் கற்றாழை என , பெயர் வரக் காரணமாம்.
சோற்றுக் கற்றாழையின் மேல் தோலை சீவி , அதன் உள்ளே இருக்கும்சதைப்பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி , பலமுறை தண்ணீரில் கழுவ வேண்டும் . நறுக்கும் போது சொட்டும் மஞ்சள் நீர் முழுவதுமாக வடியும் வரை கழுவ வேண்டும் . இதில் , அலோனின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் , கழுவாமல் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் .
கற்றாழை சாற்றை வெறும் வயிற்றில் அதிகாலையில் உண்டு வர , வயிற்று புண்கள் ஆறும் . வயிற்றெரிச்சல் குணமாகும் . பத்து நாட்கள் , காரம் , புளி , உப்பு நீக்கி , அரை உப்புடன் உணவு உண்ண வேண்டும் .வயிற்றுப்போக்கை குறைக்கவும் உதவுகிறது ,
சோற்றுக் கற்றாழை சாறு . உடலுக்குத் தேவையான சக்தியை தருவதோடு , உடல் எடையையும் ஒழுங்குபடுத்தும் . மூட்டுகளை வலுப்படுத்துகிறது . இதனால் , மூட்டு தசைகளில் ஏற்படும் வலி , கட்டி , வீக்கம் , சுளுக்கு போன்றவற்றையும் கட்டுப்படுத்தப்படுகிறது .
பல காரணங்களால் மனித உடலில் புற்றுநோய் செல்கள் மீண்டும் , மீண்டும் வளரக் கூடிய அபாயம் உள்ளது . இந்த கொடிய செல்களை அழித்து , உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் ஆற்றல் , கற்றாழைக்கு உண்டு .
காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி , அதிக அளவு ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும் . மாலை நேரத்தில் இந்த செடிகளுக்கு மத்தியில் ஒரு நடை நடந்துவிட்டு வாருங்கள் . கண்களுக்கும் குளிர்ச்சி , மனதுக்கும் இதம் , உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும் .
- 409