ஒரு அழகான பெண் தனது திருமண வாழ்க்கையால் மனமுடைந்து தனது கணவரைக் கொல்ல விரும்பினாள்.
ஒரு நாள் காலை அவள் தன் தாயிடம் ஓடிச் சென்று, "அம்மா, என் கணவரைப் பார்த்து நான் சோர்வடைந்துவிட்டேன். அவருடைய முட்டாள்தனத்தை என்னால் இனி ஆதரிக்க முடியாது. நான் அவரைக் கொல்ல விரும்புகிறேன், ஆனால் நாட்டின் சட்டம் என்னைப் கொலைகாரியாக்கும் என்று நான் பயப்படுகிறேன். தயவு செய்து இதில் எனக்கு உதவ முடியுமா?" என்று கேட்டாள்.
ஆம்! மகளே, நான் உனக்கு உதவ முடியும். ஆனால், அதற்கு நீ ஒரு வேலை செய்யவேண்டும்.
மகள் "என்ன வேலை? அவரை வெளியேற்றுவதற்காக எந்த வேலையையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்" என்று சொன்னாள்.
சரி என்று, அம்மா சொன்னாள்:
1. அவர் இறந்தபோது யாரும் உன்னை சந்தேகிக்காத மாதிரி, அவருடன் சமாதானமாக இருக்க வேண்டும்.
2. அவருக்கு இளமையாகவும் கவர்ச்சியாகவும் தோன்ற நீ உன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும்
3. நீ அவரை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவருக்கு மிகவும் அன்பாகவும் நன்றியுணர்வுடனும் இருக்க வேண்டும்
4. பொறுமையாகவும், அன்பாகவும், குறைந்த பொறாமையுடன் இருக்க வேண்டும்; அதிகம் கேட்கும் பழக்கமும், மரியாதையும், கீழ்ப்படிதலுடனும் இருக்க வேண்டும்.
5. அவருக்காக உன் பணத்தை செலவிட வேண்டியிருக்கும், அவரால் பணம் தரப்படவில்லையெனினும் கோபப்படக்கூடாது.
6. அவருக்கு எதிராக குரல் எழுப்பக்கூடாது. அவரிடம் எப்போதும் அமைதியையும், அன்பையும் வளர்த்துக்கொள். அதனால் அவர் இறந்தபின் யாரும் உன்னை சந்தேகிக்க மாட்டார்கள்.
இவற்றையெல்லாம் செய்ய முடியுமா? என்று அம்மா கேட்டாள்.
ஆம்! என்னால் முடியும் என்று மகள் பதிலளித்தாள்.
சரி என்று ஒரு பொடியை கொடுத்து அவன் தினமும் சாப்பிடும் உணவில் சிறிது கலந்து கொடு, அது மெதுவாக அவனைக் கொல்லும் என்றாள் அம்மா.
30 நாட்கள் கழித்து அந்த பெண் தன் தாயிடம் திரும்பி வந்து கூறினாள்:
அம்மா, "என் கணவரை கொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. இப்போது நான் அவரை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன், ஏனென்றால் அவர் முற்றிலும் மாறிவிட்டார், இப்போது நான் கற்பனை செய்ததை விட மிகவும் இனிமையான கணவராகிவிட்டார். விஷம் அவரைக் கொல்வதைத் தடுக்க நான் என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து எனக்கு உதவுங்கள் அம்மா" என்று சோகமான தொனியில் கெஞ்சினாள் மகள்.
என் மகளே கவலைப்படாதே. நான் நேற்று உனக்குக் கொடுத்தது வெறும் மஞ்சள் பொடிதான். அது அவரை ஒருபோதும் கொல்லாது.
உண்மையில் பதற்றத்தாலும், அக்கறையின்மையாலும் உன் கணவரை மெதுவாகக் கொன்று கொண்டிருந்த விஷம் நீதான்.
ஆனால், நீ அவரை நேசிக்கத் தொடங்கி, மதித்து, மனமார வாழத் தொடங்கிய போது, அவரை காப்பாற்றியதும் நீதான் என அம்மா பதிலளித்தாள்.
- 386