Feed Item
Added a post 

பூனாவில் ஒரு தினக்கூலி மனைவியை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார். சிஸேரியன் ஆனது. எவ்வளவு ஃபீஸ் ஆகுமோ தெரியலையே. வீட்டை அடமானம் வைத்து விடலாம் என்று நினைத்தார்.

"டாக்டர் சார், என்ன குழந்தை?!

"உங்களுக்கு "தேவதை" பிறந்திருக்கு" என்றார்.

"ஃபீஸ் எவ்வளவு?"

"தேவதைகள் பிறந்தால் நான் ஃபீஸ் வாங்குவதில்லை" என்றார். "ஐயா நீங்க தெய்வம்" என்று காலில் விழுந்தார் குழந்தையின் தந்தை.

பூனாவில் டாக்டர் கணேஷ் ராக் என்பவர் 10 வருடங்களாகப் பெண் குழந்தை பிறந்தால் ஒரு பைசா கூட வாங்குவதில்லை. இதுவரை 1000 க்கும் மேற்பட்ட இலவச பிரசவம் பார்த்து விட்டார்.

"நான் மல்யுத்த வீரராக வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் என் அம்மா, நீ மருத்துவராகிப் பெண் தேவதைகளைக் காப்பாற்று என்றார்" என்று பெருமையோடு சொல்கிறார்.

BBC, லண்டன் நிறுவனம் "Unsung Indian" என்று இவரைப் பற்றி கட்டுரை வெளியிட்டுப் பாராட்டியுள்ளது.

  • 348