இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தொழிலில் கூட்டாளிகளின் இடத்தில் அனுசரித்து செல்லவும். சுபகாரியங்களில் பொறுமை வேண்டும். பயனற்ற செலவுகளால் சேமிப்புகள் குறையும். திட்டமிட்ட பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகம் சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். சுபகாரியங்கள் பலிதமாகும். வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாகம் சார்ந்த திறமைகள் வெளிப்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் மனம் விட்டு பேசுவது மாற்றத்தை உண்டாக்கும். தவறிய சில முக்கியமான பொருட்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த துறையில் திறமைகள் வெளிப்படும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
இடமாற்றம் சார்ந்த விஷயங்களில் தாமதம் உண்டாகும். இனம்புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான தயக்கம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல்கள் உண்டாகும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். உத்தியோகத்தில் மறைமுகமான வாய்ப்புகள் ஏற்படும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மௌனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீலம்
சிம்மம்
சந்தேகம் சார்ந்த உணர்வுகளால் குழப்பங்கள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானம் வேண்டும். எதையும் இருமுறை சிந்தித்து செயல்படுத்தவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். திறமைக்கான மதிப்பு உண்டாகும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
துலாம்
திடீர் வரவுகளால் சேமிப்புகள் உயரும். குழந்தைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். பெரியோர்களின் சந்திப்புகள் மாற்றத்தை உண்டாக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் ஆதாயம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மேல்நிலை கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு சாதகமாகும். தடங்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு
எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கமிஷன் வகையில் ஆதாயம் ஏற்படும். பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் திருப்தி ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகரம்
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிடிவாத போக்கை தளர்த்திக்கொள்ளவும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறைகளில் அலைச்சல் உண்டாகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். கடன் சார்ந்த விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். வீடு மாற்றம் குறித்ததான சிந்தனை கைகூடும். விழிப்புடன் செயல்படுவதால் இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் வேண்டும். தடையாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். தாமதம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
மனதளவில் ஒருவிதமான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதாரம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். சக ஊழியர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- 110