25 வருடங்களுக்கு பிறகு நடிக்க வரும் அமலா
கணம் படத்தின் டீஸரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் அனைவரையும் ஈர்த்துள்ளது. பல்வேறு திரையுலகினரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இப்படம் குறித்து கூறியதாவது, அம்மா பாசத்தை மையமாக கொண்ட ஒரு அழகான படம் தான் கணம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கியுள்ளேன். சின்ன பட்ஜெட் படமாக தொடங்கப்பட்டு, சயின்ஸ் பிக்ஷன் மற்றும் இரு மொழிகளின் படப்பிடிப்பு செலவுகளால் பெரும் பொருட்செலவு கொண்ட படமாக மாறியுள்ளது.
அம்மா வேடத்தில் சினிமாவில் கனவுக்கன்னியாக விளங்கிய அமலா மேடம் நடித்துள்ளார். இந்தக் கதையை அவரை மனதில் வைத்தே எழுதினேன். 25 வருடங்களாக நடிக்காமல் இருந்தவர், இந்தக் கதையைக் கேட்டவுடன் ஒப்புக் கொண்டார். படம் பார்ப்பவர்கள் அனைவரது மனதிலும், அவரவர்களின் நிஜ அம்மாவை நினைவு கூர்வார்கள்.
கணம் படத்தின் சிறப்பே அம்மா பாசத்துக்குள் சயின்ஸ் பிக்ஷன் கலந்திருப்பது தான். இந்தப் படம் அம்மாவை இழந்தவர்களுக்கு மீண்டும் அம்மாவை ஞாபகப்படுத்தும். படம் முடிந்ததும் அம்மாவிடம் பேசத் தோன்றும். அம்மாவை நேரில் பார்த்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கத் தோன்றும்.
சர்வானாந்த், ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதைக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஹித்தேஷ், ஜெய், நித்யா என மூன்று சிறுவர்கள் நடித்துள்ளார்கள். தமிழில் சதீஷ், திலக் ரமேஷ் நடித்த கேரக்டரில், தெலுங்கில் வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சயின்ஸ் பிக்ஷன் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மிகவும் மெனக்கிட்டு வருகிறோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள், அது போல் இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்பதற்கு ஒரு சின்ன முன்னோட்டமே இந்த டீஸர்.
விரைவில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடலொன்றை வெளியிடவுள்ளோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் கலக்கி வரும் சித் ஸ்ரீராமின் மயக்கும் குரல் இப்படத்தில் அம்மா பற்றிய பாடல் உங்கள் மனதில் நீங்காத இடம்பிடிக்கும். அம்மாவைப் பற்றிய பாடல்கள் வரிசையில் முக்கியமான இடத்தை இந்தப் பாடல் இருக்கும் என்று தெரிவித்தார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva