·   ·  995 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கண்ணதாசனின் திறமை (படித்ததில் பிடித்தது.....)

இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...

என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!

“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..” 

எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது ..!

ஆனால் இன்று ஏனோ.... இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு... அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”*

பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!

.

இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே.... அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..?

நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன்...

.

“ அது வந்து.... அதாவது.... சிவனின் திருவிளையாடல்களில் அதுவும் ஒன்று.... அதற்கு மேல்.... .... முழுசா தெரியலியே..!”

.

சரி...பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தேன்.. கண்ணதாசன்...! சும்மா எழுத மாட்டார் கண்ணதாசன்..! 

அவர் ஒரு வரி எழுதினால் .. அதற்குள்ளே ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்..!

.

கூகிளில் , அங்கும் இங்கும் தேடி ஓடி... சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையைப் பிடித்தேன்.... அது இதுதான்...!

.

அந்தக் காலத்தில் காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன். அவன் பெயர் அரதன குப்தன் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்.

காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை.

எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....

உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .... 

வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..

அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்.. சற்றுத் தள்ளி ஒரு கிணறு...

கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு .... அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!

காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...

காரணம்...? அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்... 

நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....!

தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் .... நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட... உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...

 

சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி , இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”

 

மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்.. இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ... அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...!

 

இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.....

 

கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!

 

வழக்கு சபைக்கு வந்தது... திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்... “மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி... முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?” 

கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.... கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!

கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”

ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் : "நாங்கள் சாட்சி.."

குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க.... ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!

“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்... 

ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...! 

பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!

இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்... வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்....!

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?

ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!

இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!

 கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!

கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!

[ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]

கதையைப் படித்து முடித்த நான் , கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்து போனேன் ...!

“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?” ....கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் , 

இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..! இந்தக் கதையை முழுவதும் படிக்காமல் , கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒரு வரியை எழுதி இருக்க முடியாது..!

சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் .... அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..?

அவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை....நூல்களை..புராணங்களை...இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..?

  • 713
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்