Ads

Corona Video song

0 0 0 0 0 0
  • 569
Info
Title:
Corona Video song
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Duration:
01:28
Category:
Created:
Updated:
 ·   · 152 videos
  •  · 14 friends
  •  · 14 followers
Comments (0)
Corona Video song
Empty
typing a message...
Connecting
Connection failed
Ads
Latest Videos
Advertisement
Ads
Featured Videos (Gallery View)
Ads
Good Morning....
  • 17
  • 15
Added a news 
கிளிநொச்சி ஐந்தடி வான் பகுதியில் முக்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.குறித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஐந்தடி வான் பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது மோதி அதன் தொடராக இரணைமடுவிலிருந்து நீர் வெளியேறிப் பாயும் வாய்க்காலுக்குள் பாய்ந்துள்ளது.சம்பவத்தில் எவருக்கும் பாரிய ஆபத்துக்கள் ஏற்படவில்லை என்று தெரியவருகிறது.விபத்தினால் முச்சக்கரவண்டி நீரில் மூழ்கிய நிலையில் அதனை செலுத்தி வந்த சாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
  • 78
Added a news 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது.இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் காரியாலயத்திற்கு சென்று, நாளைய தினம் தீலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை காரியாலயத்தில் செய்ய திட்டமிட்டிருப்பதாக கிடைத்துள்ள தகவலையடுத்தே பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
  • 69
Added a news 
விவசாயி ஒருவர் சந்தையில் விழுந்து மரணமடைந்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கரிகளை விற்பனைக்கு கொண்டு சென்ற சமையம் இன்று 25.09.2021சந்தைப்பகுதியில் விழுத்து உயிரிழந்துள்ளார்.கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு படுதியில் வசித்துவரும் பலனியான்டி மகேந்திரம் என்ற 66 வயதுடைய நபரே இவ்வாறு தருமபுரம் சந்தைப்பகுதியில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரினச டலம் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு  செல்லப்பட்டு பின்னர் பிரேதபரிசோதனைக்காக கிளிநொச்சி  வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது.
  • 78
Added a news 
மத்திய அரசு திருநங்கைகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. நாட்டிலுள்ள திருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் இட ஒதுக்கீடு பெற ஏதுவாக அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே சமூக நீதித்துறை இற்கான வரைவு அறிக்கையை மத்திய அமைச்சரவைக்கு இன்று அனுப்பியுள்ளது. 
  • 89
Added a news 
திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்திக்கும் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த திவ்யாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு வர்ஷினி என்கிற பெண் குழந்தை இருக்கிறது.கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவனை பிரிந்த திவ்யா தாயார் வீட்டில் சென்று வசித்து வந்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் மாமியார் வீட்டிற்கு சென்ற சத்தியமூர்த்தி கோவிலுக்கு போகலாம் என்று மனைவியை அழைத்து இருக்கிறார்.  கோவிலுக்கு தானே கூப்பிடுகிறார் என்று திவ்யாவும் அவருடன் சென்றிருக்கிறார். அப்போது திவ்யாவுக்கு பால் வாங்கி கொடுத்திருக்கிறார் . அந்த பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததை அறியாத திவ்யா அதை குடித்து விட்டார்.பால் குடித்ததும் மயங்கிய திவ்யாவை திருப்பத்தூர் எலவம்பட்டி பகுதியில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகே தூக்கி சென்றிருக்கிறார். அங்கே அவர் மேல் பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளார். மயக்கத்தில் இருந்தாலும் பெட்ரோல் ஊற்றி உடல் எரிந்தபோது அலறிக் கொண்டே அங்கும் இங்கும் ஓடியிருக்கிறார் திவ்யா.  அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்  தீயை அணைத்து ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திவ்யா அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் . மனைவி தீ பற்றி எரிந்ததும் தப்பி ஓடிய சத்தியமூர்த்தி, தனக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன. அதனால் இனி எங்களால் வாழ முடியாது. அதனால் மனைவியை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். என்னை தேடாதீர்கள். என் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கொடுங்கள் உறவினர்களுக்கு வீடியோ அனுப்பி விட்டு தலைமறைவாகி  விட்டார்.அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • 91
Added a news 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.  தொடர்ந்து கடந்த மே மாதம் 28ந்தேதி ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்தபடி சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு பேரறிவாளன் சிகிச்சை எடுத்து வந்தார்.  கடந்த ஜூன் மாதம் 28ந்தேதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோல் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு நான்கு முறை பரோல் நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் பேரறிவாளனுக்கு பரோல் முடிய உள்ளது. தற்போது ஐந்தாவது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.  பேரறிவாளளின் உடல்நலன் கருதி சிறை விடுப்பை அக்டோபர் 26-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
  • 92
Added a news 
மத்தியபிரதேச மாநிலம் நீமட்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் 30 வயது நிரம்பிய பெண் போலீஸ் ஏட்டு பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், அவர் பணியாற்றி வரும் பகுதியில் வசித்து வரும் ஒரு ஆண் நபருக்கும் இடையே பேஸ்புக் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பேசிவந்துள்ளனர்.  அந்த ஆண் தனது சகோதரனுக்கு பிறந்தநாள் என்று கூறி பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வருமாறு பெண் போலீஸ் ஏட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று இம்மாத தொடக்கத்தில் அந்த பெண் போலீஸ் ஏட்டு சமூகவலைதளம் மூலம் பழகிய தனது ஆண் நண்பனின் சகோதரன் பிறந்தநாள் விழாவிற்கு சென்றுள்ளார்.  பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் அந்த ஆண் நபர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து பெண் போலீஸ் ஏட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டத்தை அந்த ஆண் வீடியோவாக எடுத்துள்ளான். இந்த செயலுக்கு அந்த ஆண் நபரின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.  இந்த சம்பவம் பற்றி வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிட்டுவேன் என்று பெண் போலீசை அந்த ஆணின் தாய் மிரட்டியுள்ளார். அந்த வீடியோவை வைத்து பெண் போலீஸ் ஏட்டிடம் இருந்து பணம் பறிக்க அந்த ஆணின் தாய் முயற்சித்துள்ளார். இதனை தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் போலீஸ் ஏட்டு கடந்த 13-ம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்த புகாரை தொடர்ந்து பெண் போலீஸ் ஏட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் மற்றும் அந்த ஆணின் தாயார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான பெண் போலீஸ் ஏட்டின் ஆண் நண்பன் மற்றும் அவரது தாயார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
  • 80
Added a news 
நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா.பொதுச்சபை 76 வது  கூட்டத்தில்  உரை நிகழ்த்திய இந்திய முதன்மைச் செயலர் சினேகா தூபே இந்தியாவின் உரிமை என்ற அடிப்படையில் காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் கருத்துகளுக்கு பதில் அளித்தார்.சினேகா தூபே கூறியதாவது, பாகிஸ்தானின்  பிரதமர் உலக அரங்கில் பொய்யான விஷயங்களைத் தூண்டி, இந்த மோசமான மன்றத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என முயற்சிக்கிறார். ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் எப்போதும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும்.பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் உடனடியாக வெளியேறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியா மீது தாக்குதல் நடத்தும் செயலில் பாகிஸ்தான் நீண்ட காலமாகவே ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதும் நிதியுதவி அளிப்பதும் பாகிஸ்தானின் அரசுக் கொள்கையாக இருப்பதை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் தங்கள் அண்டை நாடுகளுக்கு மட்டும் தீங்கு விளைவிக்கும் என்ற நம்பிக்கையில் பயங்கரவாதிகளை அவர்களின் கொல்லைப்புறத்தில் வளர்க்கிறது. இந்தியா மட்டுமல்ல உண்மையில் அவர்களின் கொள்கைகளால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் நாட்டில் மதவெறி வன்முறையால்  பயங்கரவாத செயல்களை மறைக்க முயற்சிக்கின்றனர் என கூறினார்.
  • 91
Added a news 
வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை வரவேற்ற ஜோ பைடன், பின்னர் இந்தியாவுடனான தனது தொடர்புக்கான சாத்தியம் குறித்து பேசினார். இதற்காக பழைய நிகழ்வு ஒன்றை நினைவு கூர்ந்து நகைச்சுவையாக பேசினார்.  கடந்த 1972-ம் ஆண்டு எனது 29-வது வயதில் முதல் முறையாக செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மும்பையில் இருந்து பைடன் என்ற பெயரில் ஒருவர் எனக்கு வாழ்த்து அனுப்பி இருந்தார். ஆனால் அதை நான் அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் இந்தியாவில் ஐந்து பைடன்கள் வசித்து வருவதாக மறுநாள் காலையில் செய்தியாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்.  கிழக்கிந்திய தேயிலை கம்பெனியிலும் ஜார்ஜ் பைடன் என்ற பெயரில் கேப்டன் ஒருவர் இருந்திருக்கிறார். அவர் ஒரு அயர்லாந்துகாரர் என்பதை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை. எப்படியிருந்தாலும், எனது இந்திய தொடர்பு குறித்து இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இந்த சந்திப்பின் நோக்கம் அனைத்தும் எனது இந்திய தொடர்பை கண்டுபிடிப்பதற்கு உதவுவதற்காகவே இருக்கும் என பைடன் கூறியதும் மோடி உள்பட அங்கே இருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். பிரதமர் மோடி மறுமொழியாக, ‘இந்தியாவில் உங்களின் குடும்ப பெயர் இருப்பது குறித்து நீங்கள் ஏற்கனவே என்னிடம் விரிவாக கூறியிருக்கிறீர்கள். எனவே இது குறித்த ஆவணங்களை திரட்டுவதற்காக நான் நிகழ்த்திய வேட்டையின் பலனாக சில ஆவணங்கள் உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன். இவை உங்களுக்கு உதவலாம்’ என்று கூறினார். இதை கேட்டதும் அங்கே சிரிப்பலை மேலும் அதிகரித்தது.
  • 80
Added a news 
பெண்களை பெரிதும் கவர்ந்து பிரபலமாகி வரும் கொரோனா ஜிமிக்கி கம்மலை வாங்க அனைவரும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது.  தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பலரை பயப்பட வைத்தாலும் இதனை வைத்து வியாபாரம் பார்த்த பலரும் உள்ளனர்.  கொரோனா வைரஸ் வடிவிலான தோசை, புரோட்டா என பல்வேறு பொருட்கள் மார்க்கெட்டுக்கு வந்ததால் மக்கள் கவனம் அதன் மேல் திரும்பியது. தற்போது கொரோனா வைரஸ் வடிவில் தங்க கம்மல் விற்பனைக்கு வந்துள்ளது. இது பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மதுரையில் உள்ள நகைக்கடையில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
  • 90
Added article 
சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் நாக சைதன்யா விவாகத்து விவகாரம் குறித்து பேசியுள்ளார். சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  எந்த நேரமும் சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், இது குறித்து வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் தம்பதியினர் இருந்து வந்ததனர். இதனிடையே நாக சைதன்யா விவாகத்து விவகாரம் குறித்து பேசியுள்ளார். நான் சிறுவயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்ந்தவன். இந்த பழக்கம் என்னுடைய தாய், தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது.  படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச கூடாது என்பதை கடைபிடித்து வருகிறேன். சமந்தாவுடன் விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது, எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இந்த புரிதல் எனக்குள் வந்துவிட்டது. இதனால் நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன் என்று தெரிவித்து விவாகரத்து வெறும் வதந்தி என முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 
  • 92
Added article 
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்ட கேயார் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சவுத் இந்தியன் பிலிம் சாம்பர் ஆப் காமர்ஸ் ஆகியவற்றின் முன்னாள் தலைவராக பணி புரிந்தவர் கேயார். இவர் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தரராகவும் இருந்து இருக்கிறார். கேயாரின் மனைவி திருமதி இந்திரா கேயார் சிறுநீரக கோளாறு காரணமாக சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் இந்திரா காலமானார். அவரது வயது 67. இவர்களுக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். இந்திரா அவர்களின் இறுதி சடங்கு   மாலை நான்கு மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
  • 80
Added article 
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்ட கேயார் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சவுத் இந்தியன் பிலிம் சாம்பர் ஆப் காமர்ஸ் ஆகியவற்றின் முன்னாள் தலைவராக பணி புரிந்தவர் கேயார். இவர் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தரராகவும் இருந்து இருக்கிறார். கேயாரின் மனைவி திருமதி இந்திரா கேயார் சிறுநீரக கோளாறு காரணமாக சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் இந்திரா காலமானார். அவரது வயது 67. இவர்களுக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். இந்திரா அவர்களின் இறுதி சடங்கு   மாலை நான்கு மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
  • 92
Added a news 
1946 ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர்தான் எஸ். பி. பாலசுப்ரமணியம். இவருடன் இவரது சகோதரர், சகோதரிகள் ஏழு பேர். எஸ்பிபி தந்தை சாம்பமூர்த்தி நாடகங்களிலும் நடித்துள்ளார்.இன்ஜினியராக வேண்டும் என்று அவரும்,அவர் தந்தையும் விரும்பினார். ஆந்திராவில், இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும்போது அவருக்கு டைப்பாய்டு வந்ததால் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். மீண்டும் இவர் இன்ஸ்டியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ், அசோசியேட் மெம்பராக சேர்ந்து படிக்கத் தொடங்கினார். படிக்கும்போதே நிறைய பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார். கல்லூரியில் பாடிய எஸ்பிபிக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்தது. அவர் தமிழில் பாடிய முதல் படம் வெளியாகவில்லை. ஏவிஎம் ஸ்டுடியோவில் தெலுங்கு பாடல் ரெக்கார்டிங் போது எம்ஜிஆர் அவரது குரலை கேட்டு அவரது படத்தில் பாட வாய்ப்பு தந்தார்.எஸ்பிபி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி சாவித்திரி, மகன் சரண், மகள் பல்லவி. எஸ்பிபி சரண் சினிமாவில் பின்னணி பாடகராக உள்ளார். எஸ்பிபி 54 ஆண்டுகளில், சுமார் 40,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்எஸ்பிபி பாடல்கள், அவரது குரல், குழந்தை உள்ளம், சிரித்த முகம் என்றுமே நம்மால் மறக்க முடியாது. இம்மண்ணுலகம் உள்ளவரை அவர் பாடல்களும் என்றும் வாழும். என் தேகம் மறைந்தாலும், இசையாக மலர்வேன்எஸ்பிபி 6 முறை பிலிம்பேர் விருதும் 8 முறை நந்தி விருதும் வென்றுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷண் பெற்றுள்ளார். முறையாக இசையை கற்றுக் கொள்ளாமலே இவ்வளவு சாதனை படைத்துள்ளார்.கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இன்று அவரின் முதலாம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ரசிகர்கள் பலரும் அவரின் பாடல்களைப் பற்றி நினைவு கூர்ந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
  • 91
Added article 
சரளா குமாரி எனும் இயற்பெயருடைய கோவை சரளா ராணுவ அதிகாரியின் கடைசி மகளாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். சிறு வயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் அதிகம். இவர் நடிகர் எம்ஜிஆரின் தீவிர ரசிகை ஆவார்.எம்.ஜி.ஆர். அவர்களின் மேடைப் பேச்சைக் கண்டு கை தட்டி ஆரவாரம் செய்த இவரை அழைத்த எம்.ஜி.ஆர். படிக்கும் வயதில் மேடைக்கு வரக்கூடாது நன்கு படித்த பின்னர் என்னை வந்து பார் என்று அறிவுரை கூறியுள்ளார்.அவர் குடும்பத்திற்கு கல்வி செலவுக்காக பண உதவியும் செய்துள்ளார். அதன் மூலம் படித்த கோவை சரளா பத்தாவது முடித்த பின்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் 1979 ஆம் ஆண்டு கே.ஆர். விஜயா அவர்கள் நடிப்பில் வெளியான வெள்ளி ரதம் திரைப்படத்தில் நடித்தார்.12-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திய இவர் தனது குடும்பத்துடன் சென்னைக்கு வந்து அவர்களது குடும்ப நண்பரான இயக்குனர் பாக்யராஜ் அவரின் இயக்கத்தில் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடித்தார். வேறு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மீண்டும் பாக்யராஜ் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த சின்ன வீடு திரைப்படத்தில் 18 வயதான கோவை சரளா அம்மா வேடத்தில் நடித்தார். பின்னர் கவுண்டமணி, செந்தில் இவர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். சதி லீலாவதி திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நடிப்பு மற்றும் நடனத்தில் திறமையான அவர் வில்லு திரைப்படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.தனது சகோதரிகளுக்கும் சகோதரனுக்கும் திருமணம் செய்து வைத்த இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது உடன்பிறந்தவர்களின் குழந்தைகளை வளர்த்து வரும் இவர் திருமணத்தில் நாட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 
  • 92
Added a news 
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.18 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,18,64,969 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,84,55,822 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 லட்சத்து 50 ஆயிரத்து 495 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,86,58,652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 95,384 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-அமெரிக்கா  -  பாதிப்பு-  4,36,69,605, உயிரிழப்பு -  7,05,280, குணமடைந்தோர் - 3,31,14,075இந்தியா   -      பாதிப்பு - 3,36,23,072, உயிரிழப்பு -  4,46,690, குணமடைந்தோர் - 3,28,68,772பிரேசில்   -      பாதிப்பு - 2,13,27,616, உயிரிழப்பு -  5,93,698, குணமடைந்தோர் - 2,03,26,408இங்கிலாந்து - பாதிப்பு -  76,01,487,  உயிரிழப்பு -  1,35,983, குணமடைந்தோர் -   61,31,137ரஷ்யா           -   பாதிப்பு -  73,76,374, உயிரிழப்பு -  2,02,273, குணமடைந்தோர் -   65,74,608தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-துருக்கி      - 69,87,494பிரான்ஸ்  -  69,83,601ஈரான்        - 55,08,885அர்ஜெண்டினா- 52,48,847கொலம்பியா -  49,48,513ஸ்பெயின்    - 49,46,601இத்தாலி     - 46,53,696இந்தோனேசியா- 42,04,116ஜெர்மனி     - 41,94,549மெக்சிகோ    - 36,08,976
  • 140
Added a news 
இலங்கையில் மேலும் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இன்று இதுவரை 1,332 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 511,372 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 452,262 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12,530 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
  • 147
Added a news 
எமது இருப்பை ஒட்டுமொத்தமாக துடைத்து அழித்து விடக் கூடிய பாரிய நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் நமது இனத்தை காக்க வேண்டிய கடமை எமது தோள்களில் இருக்கிறது. அகத்திலும் புலத்திலும் இருக்கும் நம் இனத்தை ஒன்றுபடுத்தி ஒரு தேசிய இனமாக கட்டியமைக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இன்று இருக்கிறோம். எமது நீண்டகால குறுகிய கால இலக்குகளை ஒன்றோடு ஒன்று முரண்படுத்தி குழப்பிக் கொள்ளாமல், வரையறுத்து பயணிக்க காலம் பணித்துள்ளது என ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.இதனடிப்படையில் தமிழ்த் தேசிய பரப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் தலைமைகளும் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவது எமது இலக்குகளை கட்டம் கட்டமாகவும் நேர்த்தியாகவும் சென்றடைய வழிவகுக்கும். இதற்கு உதாரணமாக திகழும், பல நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியமானது, தமிழர் நலன் சார்பான ஒருமித்த செயல்பாட்டை முன்னெடுக்கும் தருணத்தில் தமிழர் தரப்பாகிய நாம் ஒருமித்து செயலாற்றுவது காலத்தின் கட்டாயம் எனவும் அவர் தெரிரவித்துள்ளார்.எதிர்வரும் 27 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை சம்பந்தமான களநிலை ஆராய்வு மற்றும் கலந்துரையாடலுக்கு இலங்கை வர இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தோடு முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் தமிழர் தரப்போடும் கலந்துரையாடுவதற்கு ஆயத்தமாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நம் தாயகப் பரப்பில் எமது இனம் முகம் கொடுத்து நிற்கும் இலங்கை அரசின் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையாக காணி அபகரிப்பு, குடியேற்றம் மற்றும் இராணுவ மயமாக்கல் ஆகிய விடயங்களையும் ஒருமித்து ஐரோப்பிய பிரநிதிகளின் கவனத்திற்கு கொண்டுவர இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்த எமது முயற்சிக்கு ஒன்றிணையுமாறு அனைத்து தமிழ் தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கிறோம் எனவும் ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
  • 135
Good Morning...
  • 131
Added a news 
டெல்லியில் தவறாக ஹேர்கட் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கும் படி நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லியில் உள்ள பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டலான ஐடிசி மவுரியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாடலிங் துறையை சேர்ந்த 42 வயது பெண் முடி வெட்டுவதற்காக சென்றுள்ளார். அவர் அங்கு பணிபுரியும் ஊழியரிடம் நான்கு இன்ச் மட்டுமே முடி வெட்ட சொல்லியுள்ளார். ஆனால் தவறுதலாக  மொத்தமாக வெட்டியுள்ளார். அதோடு தலையில் அமோனியாவை கொண்டு சிகிச்சை செய்ததிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தேசிய நுகர்வோர் ஆணையத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இதன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐடிசி நிர்வாகம் அந்த பெண்ணுக்கு இரண்டு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
  • 200
Added a news 
20 ஆண்டுகள் அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்த அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்கள் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் செமஸ்டர் தேர்வில் விண்ணப்பித்து தங்களது அரியரை பூர்த்தி செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளதுதங்களது அரியரை முடிக்க விரும்பும் மாணவர்கள் www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்துடன் கூடுதலாக ரூபாய் 5000 செலுத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
  • 202
Added a news 
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு புறப்பட்டார்.அவர் அங்குள்ள ஆண்ட்ரூ விமானப்படை தளத்தில் தரை இறங்கினார். அவரை அமெரிக்க அரசின் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு துணைச்செயலாளர், இந்திய தூதர் தரண்ஜித் சிங் உள்பட அதிகார வர்க்கத்தினர் வரவேற்றனர். மோடி அங்கு சென்று இறங்கியபோது மழைச்சாரல் வீசிக்கொண்டிருந்தது. அதற்கு மத்தியிலும் மூவர்ணக்கொடியை ஏந்திக்கொண்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.  பிரதமர் மோடியுடன் கை குலுக்க அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கைகளை நீட்டினர். மோடி அவர்கள் அருகில் சென்று கை குலுக்கியதுடன், படமும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிரதமர் மோடி அமெரிக்காவில் தனது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளை தொடங்கினார்.  அமெரிக்காவை சேர்ந்த ஐந்து உயர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.அடோப் நிறுவன தலைவர் சாந்தனு நாராயன், ஜெனரல் ஆட்டோமிக்ஸ் நிறுவன தலைவர் விவேக் லால், குவால்கம் தலைவர் கிறிஸ்டியானோ அமோன், பர்ஸ்ட் சோலார் தலைவர் மார்க் விட்மர், பிளாக்ஸ்டோன்  தலைவர் சூவர்ஸ்மான் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் மோடி இந்திய நேரப்படி அதிகாலை 12.45 மணிக்கு சந்தித்துப்பேசினார். அப்போது பேசிய மோடி, சிறப்பான வரவேற்பளித்ததற்கு கமலாஹாரிசுக்கு நன்றி தெரிவித்தார். கொரோனா இரண்டாவது அலையின் துவக்கத்தில் இந்தியாவுக்கு உதவியதற்காக அமெரிக்காவுக்கு நன்றி என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.  அமெரிக்க அதிபர் பைடன்-கமலா ஹாரிசின் தலைமையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகள் புதிய உயரங்களை தொடும் என்றும் மோடி குறிப்பிட்டார். மேலும் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் இந்தியா வரவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.பிரதமர் மோடியைத் தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் மிகமுக்கிய பங்காளராக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டார்.  கொரோனா பெருந்தொற்றின் துவக்கத்தில் பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியதில் இந்தியா மிகமுக்கிய பங்காற்றியதாக கமலா ஹாரிஸ் நினைவு கூர்ந்தார். இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள கமலா ஹாரிஸ், இந்தியாவில் தினசரி 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவது வியப்பளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளும் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி மற்றும் கண்டுபிடிப்பில் எவ்வாறு பங்களிப்பை அதிகரிப்பது என்பது தொடர்பாகவும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு அமெரிக்க ஜனாதிபதி பைடனை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச உள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குவாட் உச்சிமாநாடு இந்திய நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.
  • 202
Added a news 
பேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரியாக பதவி வகித்து வருபவர் மைக் ஷெக்ரோப்பர். இவர் வருகிற 2022 ம் ஆண்டில் தன்னுடைய பதவியில் இருந்து விலகி பேஸ்புக்கின் முதல் மூத்த உறுப்பினராக பகுதி நேர பதவிக்கு மாறப்போவதாக முடிவெடுத்துள்ளதாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பேஸ்புக்கை அதிகமாக நேசிக்கும் எனக்கு இது ஒரு கடினமான முடிவுதான். இருந்தாலும், இந்த முடிவு என்னுடைய குடும்பத்துக்கும் என்னுடைய  சேவை முயற்சிகளுக்கும் அதிக நேரத்தை ஒதுக்க எனக்கு உதவியாக இருக்கும் என கூறி உள்ளார். மேலும் அவர் பேஸ்புக் விர்ச்சுவல் ரியாலிட்டி லேப்ஸ்ன் துணைத்தலைவர் ஆண்ட்ரூ போஸ்வொர்த்  அடுத்த தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பேற்பார். போஸ்வொர்த்  தலைமையிலான திறமையான தொழில்நுட்ப குழுவின் மேல் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். பேஸ்புக்கின் உற்சாகமான எதிர்காலத்திற்கு ஒரு மூத்த உறுப்பினராக ஆதரிக்க முடிந்ததில் பெருமைப்படுகிறேன் என கூறி உள்ளார்.
  • 207
Added a news 
இங்கிலாந்தின் வால்டாம்ஸ்டோவின் பெண் எம்.பி. ஸ்டெல்லா கிரீசி இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். மகப்பேறு காலத்தில் பெண் எம்.பிக்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இங்கிலாந்து  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தொழிலாளர் கட்சியின் எம்.பி. ஸ்டெல்லா கிரீசி தனது கைக்குழந்தையை மார்போடு அணைத்தபடி கோரிக்கையை முன்வைத்தார்.பெண்களுக்கு மகப்பேறு விடுமுறைக் காலத்தை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது அமைதியுடன் இருந்த அந்தப் பெண்ணுக்கும் அவர் கைக்குழந்தைக்கும் பிரதிநிதிகள் சபையின் அவைத் தலைவர் ஜேக்கப் ரீஸ் மோக் பாராட்டு தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டு கிரீஸி தாய்மை அடைந்த போது அவருக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்ட போதும் தொகுதிப் பணிகளை மட்டும் செய்ய அனுமதிக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் பேசவோ வாக்களிக்கவோ அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
  • 207
Added a news 
உத்தரபிரதேசத்தில் மனைவி குளிப்பதில்லை என விவாகரத்து கேட்டு கணவர் கதறிய சம்பவம் வைரலாகியுள்ளது. நாள்தோறும் நாடு முழுவதும் பல திருமணங்கள் கோலாகலமாக நடந்து வருவது போல சைலண்டாக பல விவாகரத்து சம்பவங்களும் நடந்து வருகின்றன. ஒவ்வொருவரும் விவகாரத்து கோரி குடும்ப நீதிமன்றங்களை நாட பல்வேறு காரணங்கள், சண்டைகள் இருந்து வருகின்றன. ஆனால் உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு விவாகரத்து வழக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன தம்பதியருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கணவன் இனி தன் மனைவியுடன் வாழ முடியாது என விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். பிரச்சினை என்ன என்று விசாரித்தபோது இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லையென்றும் தன் மனைவி குளிக்காமல் இருப்பதே பிரச்சினை என்று கூறியுள்ளார். இதனால் அவருக்கு தற்போது கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறதாம்.
  • 205
Added article 
கேடி திரைப்படத்தில் அறிமுகமானார் தமன்னா. கேடி படத்திற்கு முன்னர்  தெலுங்கு,ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். கேடி படத்தில் அறிமுகமானாலும் கல்லூரி படத்தின் மூலமாகத் தான் பிரபலமானார்.கல்லூரி படத்திற்கு பிறகு தமன்னாவுக்கு  தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தன. அயன், வீரம், தர்மதுரை, படிக்காதவன், வேங்கை, தேவி, ஸ்கெட்ச் படங்களில் நடித்துள்ளார். தமன்னா முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். கார்த்திக்குடன் பையா, சிறுத்தை படங்களில் நடித்தார்.இவர்கள் ஜோடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. பாகுபலி படத்தில் நடித்திருந்தாலும் அனுஷ்காவிற்கு தான் வலுவான கதாபாத்திரம் கிடைத்தது. தமன்னா தமிழில் கடைசியாக விஷாலுடன் சேர்ந்து ஆக்சன் படத்தில் நடித்தார்.தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் ஆர்வம் காட்டி வந்தார். டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் நவம்பர் ஸ்டோரி என்ற வெப் தொடரிலும் நடித்தார். ஜெமினி டிவியில் ‘மாஸ்டர் செப்’ தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.தமன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் மன அழுத்தத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். எதனால் மன அழுத்தம் ஏற்பட்டது என்பதை வெளிப்படையாக கூறவில்லை. தமன்னாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால்  தற்போது ஆர்கானிக் உணவுகளை சாப்பிட்டு வருகிறாராம். தமன்னா விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக உள்ளாராம். அடுத்த ஓராண்டுக்குள் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கலாம்.
  • 207