Feed Item
Added article 

பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்த கார்த்திக் சுப்புராஜுக்கு முதன்முதலில் கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம். கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் ரஜினிக்கு ஃபேன் பாய் சம்பவமாக அமைந்தது.

பேட்ட படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், அடுத்ததாக சூர்யா உடன் கூட்டணி அமைத்தார். கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தை தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் வருகிற மே 1ந் தேதி திரைக்கு வர உள்ளது.

சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் உடன் தான் அவர் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான் பேட்ட படம் மாஸ் ஹிட் அடித்த நிலையில், தற்போது 6 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினிகாந்தும், கார்த்திக் சுப்புராஜும் இணைய உள்ள தகவல் கோலிவுட்டில் செம வைரலாக பரவி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் கைவசம், தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் உள்ளன. இதில் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. இப்படங்களை முடித்த பின்னர் கார்த்திக் சுப்புராஜ் உடன் ரஜினி கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 991