-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 17.4.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
அத்தியாவசியமான செலவுகள் அதிகரிக்கும். சிறு சிறு விமர்சன பேச்சுக்கள் வரக்கூடும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கான வாய்ப்பு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
ரிஷபம்
சகோதரரின் வகையில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடலில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
நெருக்கமானவர்களை சந்திக்க நேரிடும். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிறமொழி மக்களின் அறிமுகம் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கடகம்
பூர்வீக சொத்துகளின் மூலம் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பயணம் மூலம் வரவுகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம்
உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். தொழில், வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பாசம் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி
கன்னி
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். மேலதிகாரிகள் உங்களின் கருத்துகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். கடினமான பணிகளையும் எளிமையாக முடிப்பீர்கள். ஆவணம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
பேச்சு வன்மையால் காரியம் அனுகூலம் ஏற்படும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தடைப்பட்ட சில வரவுகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் பற்றிய ஆலோசனை கிடைக்கும். திடீர் பயணங்களால் மாற்றம் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விருச்சிகம்
தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் மேம்படும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடி வரும். தந்தை வழியில் புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சிகள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சினம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகரம்
உடல் ஆரோக்கியம் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் மறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு கிடைக்கும்.
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். சபை சார்ந்த பணிகளில் ஆதாயம் கிடைக்கும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
கும்பம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். வியாபாரம் இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். ஆக்கபூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத அதிர்ஷ்டகாரமான வாய்ப்புகள் உண்டாகும். தடங்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·