அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி, நாசர், சேத்தன், வடிவுக்கரசி என்று பலர் நடித்துள்ளனர்.
கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் கமல் ஹாசனின் 234 ஆவது படமாகும்.
வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள முதல் சிங்கிள் ஜிங்குச்சா என்ற பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாக இருக்கிறது. இந்த பாடல் கல்யாண நிகழ்ச்சியின் போது கேங்ஸ்டர்களுடன் இணைந்து பாடப்படும் பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பாடலுக்கு சிம்பு மற்றும் கமல் ஹாசன் உடன் இணைந்து குண்டர்கள் டான்ஸ் ஆடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப் பாடலுக்கு கமல் ஹாசன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். இப்பாடல் எத்தனை மணிக்கு வெளியாகும் என்கிற தகவல் இன்று மாலையோ அல்லது நாளை காலை அறிவிக்கப்படும் என தெரிகிறது.
- 990