Feed Item
Added a post 

அது ஒரு சைக்காலஜி வகுப்பு :......

ஆசிரியர் வந்து.., இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு,

ஒரு பெண்ணை அழைத்து,

இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..." என்று பணித்தார்.

அந்த பெண்ணும் எழுதினார்:-

பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்...

அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.....

அடுத்து மீண்டும், ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார்.......

அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்...

இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்...

அது அவரின் பெற்றோர், கணவர், மற்றும் ஒரே மகன்........

இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்.....

இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்.....

வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்.....

மீண்டும் ஒரு பெயரை அழிக்க சொன்னார் அந்த ஆசிரியர்.....

அந்த பெண் அழுது கொண்டே... நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் அவரது மகனின் பெயரை அழித்து விட்டு கதறிவிட்டார்.....

ஆசிரியர்,,அவரை அவரது இருக்கைக்கு, போகச்சொல்லிவிட்டு....

"ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்... ?????

உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கினர்....?

உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை அளித்தான்...?

பின் ஏன் ..?" என்று கேட்டார்.. ???

முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப்போகும் பதிலுக்காக காத்திருந்தது......

அதற்கு அந்த பெண்....

இருக்கலாம்.. என் பெற்றோர் எனக்கு முன்னமே இறந்துவிட வாய்ப்புள்ளது.....!!!!

என் மகன் படிப்பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்து விட நேரலாம்......!!!

ஆனால் எப்போதும் என் கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக, அர்ப்பணிப்பவர், என் கணவர் மட்டுமே............ அதனால் தான்...." என்றார்.....!!!!!

அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டினர்......

இது தானே உண்மை .... உங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த தவறாதீர்கள்...... !!!

அதன் பொருட்டே இறைவன் உங்களை இணைத்திருக்கிறான் என்பதை உணருங்கள்...!!!!

இது மனைவிகளுக்கு மட்டும் இல்லை... கணவர்களுக்கும் தான்.

  • 969