-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 18.4.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வாழ்க்கைத்துணை வழியில் அனுசரித்து செல்லவும். கடன் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்கவும். மாமன்வழி உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தந்தையிடம் எதிர்பார்த்த சில காரியம் சாதகமாக முடியும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
பேச்சுக்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் உண்டாகும். உயர்கல்வியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். சமூகம் சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் ரீதியான சில அறிமுகத்தால் லாபம் மேம்படும். மனை வியாபாரத்தில் புதுமையான சூழல் உண்டாகும். மனதிற்கு இதமான செய்திகள் கிடைக்கும். நவீன கருவிகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கலைப் பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
எதிர்பாராத பொருட்சேர்க்கைக்கு வாய்ப்புகள் அமையும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லவும். வழக்கு செயல்களில் சிந்தித்து செயல்படவும். பொன், பொருட்கள் மீதான ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செயல்படவும். பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபாடு உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கன்னி
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். கல்வியில் சாதகமான சூழல் அமையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உறவுகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். விதண்டாவாத பேச்சுகளை குறைப்பது மன அமைதியை தரும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் தெளிவு பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
துலாம்
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். ஓய்வு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
விருச்சிகம்
நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. துணைவர் வழியில் அனுசரித்து செல்லவும். தேவை அறிந்து வாக்குறுதிகளை அளிப்பது நல்லது. பயணத்தால் பலன் கிடைக்கும். வருமானம் திருப்தியை தரும். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். உத்தியோகத்தில் உயர்வு பற்றிய செய்திகள் கிடைக்கும். தனம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
தனுசு
மற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். நிதானமான செயல்கள் நன்மையை தரும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்படவும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகளில் அலைச்சல் ஏற்படும். அலுவல் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மகரம்
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவுபெறும். ஆன்மிக செயல்களில் புரிதல்கள் மேம்படும். எதிர்பாராத பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அலைபேசி வழியாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும். பிறமொழி மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பாசம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
ரசனை தன்மையில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளால் மனம் மகிழ்ச்சியடையும். புதிய தொழில் தொடங்குவது சார்ந்து எண்ணங்கள் மேம்படும். செல்வ சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியம் கைகூடும். சிரமம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
மீனம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சில பயணங்கள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். சுகம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·