Support Ads
 ·   ·  1076 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கனடாவில் பத்து தகவல்கள்!

(1) பின்வரும் நாடுகளில் வாகனம் செலுத்தும் சாரதி அனுமதி பத்திரங்கள் (DRIVER’S LICENSE) வைத்திருப்பவர்கள் கனடாவில், நாம் வசிக்கும் ஒன்ராரியோ மாகாணத்தில் எதுவிதமான எழுத்து பரிட்சைகள் (Written Test) வீதி பரிட்சைகள் (Road Test) என எவற்றுக்கும் தோற்றாது ஒன்ராரியோ மாகாண லைசென்ஸாக இலகுவாக மாற்றிக் கொள்ளலாம்.

அவையாவன பின்வருமாறு:-

*     AUSTRALIA

*     AUSTRIA

*     BELGIUM

*     FRANCE

*     UNITED KINGDOM

*     THE ISLE OF MAN

*     JAPAN

*     SOUTH KOREA

*     NEW ZEALAND

*     NORTHERN IRELAND

*     REPUBLIC OF IRELAND

*     SWITZERLAND

*     TAIWAN

*     ANY U.S. STATES

*     ANY CANADIAN PROVINCE OR TERRISORY

(2) தொடர்ந்து கனடாவில் தொழில் செய்துக் கொண்டிருப்பவர் ஒருவரின் குடும்பத்தில் எவராவது ஒருவர் ஏதாவது கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தால் 26 கிழமைகளுக்கு சம்பளத்தின் ஒரு பகுதியினை பெற்றுக் கொண்டு நோய்வாய்பட்டவரை பராமரிப்பதற்காக தொடர்ந்து லீவு எடுக்கலாம். (Compassionate care Benefits under the Canadian employment insurance program)

(3) மருந்துகள் வாங்குவதற்கு அரச காப்புறுதி திட்டம் தனியார் காப்புறுதி திட்டங்கள் என கனடாவில் பலதும் வைத்திருப்பார்கள்.

சில நோயாளிகளுக்கு, சில குறிப்பிட்ட மருந்துகள் இவ் காப்புறுதி திட்டங்களுக்குள் உட்படாத காரணத்திற்காக சொந்த பணம் செலுத்தியே வாங்க வேண்டி வரலாம்.

தொடர்ந்து இவ் செலவுகளை மாகாண அரசுக்கு ஆதாரங்களுடன் விண்ணபித்து மீள பெற முயற்சிக்கலாம்.

(Exceptional Access Drug Program – Ontario Ministry of Health)

(4) ஏற்கனவே குறைந்தது 13 கிழமைகள் தொடர்ந்து ஒரு இடத்தில் தொழில் புரிந்து வந்தவர் குடும்ப வன்முறைகள் உட்பட ஏதாவது வன்முறைகள் தாக்குதல்களில் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அவ் பாதிப்புகள் தொடர்பான மருத்துவ சிகிச்சைகள், சட்ட நடவடிக்கைகளை முன் எடுப்பதற்காக பத்து நாட்கள் சம்பளத்துடன் லீவு வழங்கப்படல் வேண்டும் என்பது கனடிய மத்திய அரசு சட்டமூலமாக கொண்டு வந்துள்ளது.

(DEMESTIC OR SEXUAL VIOLENCE LEAVE ACCORDING TO THE CANADIAN EMPLOYMENT STANDARDS ACT)

(5) அமெரிக்கா – கனடா எல்லையில் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் கனடிய பாஸ்போர்ட்டினை எடுத்து செல்வதற்கு பதிலாக விசேட லைசென்ஸ் அட்டை உள்ளது. அதனை பெற்று வைத்திருந்தால் அதனை பாஸ்போர்ட்டுக்கு பதிலாக அங்கீகரித்துள்ளனர்.

ஆனால் விமானம் மூலம் பிரயாணிப்பதற்கு பாஸ்போர்ட் என்றும் தேவையானதாகும்.

(ENHANCED DRIVER’S LICENSE)

(6) பொலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைக்கும் பிரிவுகளுக்கு அழைக்கும் கனடாவின் அவசர தொலைபேசி 911 என்ற இலக்கத்திற்கு அழைக்கும் போது, ஆங்கில மொழி தெரியவில்லை என்ற வருத்தம் தேவையில்லை.

“ரமிழ்” என்ற சொல்லை குறிப்பிடுங்கள், அந்த மொழியில் தொடர்பு கிடைக்கும். சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளில் சேவை வசதி கிடைக்கும்.

(7) கனடாவில் வாகனம் செலுத்தும் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் ஏனைய நாடுகளுக்கு விஜயம் செய்யும் போது அங்கு வாகனம் செலுத்தும் “சர்வதேச சாரதி அனுமதி பத்திரம்” (INTERNATIONAL LICENSE) விரைவாக பெற வேண்டுமா? அழையுங்கள் C.A.A. (CANADIAN AUTOMOBILE ASSOCIATION)

(8) கனடாவில் தங்களின் வீடுகளுக்கு முன்னால் வீதியோரமாக பாரிய நிழல் தரும் மரங்கள் ஏதாவது நாட்ட விரும்பினால் அந்தந்த நகரசபையின் வனவளதுறை பிரிவுக்கு அழைத்தால் அந்தந்த மண்வளம் சூழல் சுற்றாடல்களை பரிசீலனை செய்து உகந்த மரங்களை இலவசமாகவே நாட்டிவிடுவார்கள்.

(CITY URBAN FORESTY SERVICE.)

(9) சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக கனடாவின் வங்கிகள், நிதி நிறுவனங்களில் எதுவிதமான தொடர்புகளுமில்லாது கைவிடப்பட்ட வங்கி கணக்குகள், முதலீட்டு திட்டங்களில் உள்ள பணம் கனடாவின் தலைமை வங்கிக்கு மாற்றப்பட்டு விடும்.

விலாசம் மாறியவர்கள், வயோதிபம் காரணமாக மறதியில் இருப்பவர்கள், மரணமாகியவர்கள் என பலரும் இதில் அடங்குவார்கள். இவ் பத்து வருடங்களுக்குள் வங்கி மூன்று தடவைகள் எச்சரிக்கை கடிதம் அனுப்பி அதனையும் உதாசீனம் செய்தால், இறுதியில் தலைமை வங்கியின் கோரப்படாத கணக்கிற்கு மாற்றிவிடுவார்கள்.

கனடிய தலைமை வங்கி இவ்வாறு தவற விட்டவர்கள், அல்லது மரணமாகியிருந்தால் அவர்களின் சட்டரீதியான வாரிசுகள், தங்களுடன் தொடர்பு கொண்டு சரியான ஆதாரங்களை காட்டி அதனை பெற்றுக் கொள்ளுமாறு பகிரங்கமாக கேட்டு கொண்டே வருகின்றனர்.

(Unclaimed Bank Balance - Bank of Canada)

(10) வீதிகளின் குழிகளினால் செலுத்தும் வாகனங்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால், எந்த இடத்தில் ஏற்பட்டதோ அந்த இடம் உள்ள நகரசபைக்கு ஆதாரங்களை காட்டி நட்டஈடு கோரலாம்.

விபத்து நடந்த இடம், வரைபடங்களுடன் தெளிவுரை, ஏதாவது சாட்சிகள், திருத்த செலவினை மேற்கொண்ட ஆதாரங்கள், ரிசீற்றுகள் என்பனவற்றோடு காலதாமதமில்லாது தங்கள் நட்டஈடு கோரிக்கையினை சமர்ப்பிக்கவேண்டும்.

(POT HOLE CLAIM IN CITY)

___ SIVA-PANCHALINGAM

(Experience in more than in ¼century in Canadian insurance field)

416-321-0999

416-990-4908 (Cell)

[email protected]

  • 335
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்