- · 5 friends
-
I
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத்திசாலித்தனத்தை அதிகரிக்க இந்த 5 குணங்களை வளர்
நீங்கள் புத்திசாலியா இல்லையா என்று நீங்களே தெரிந்து கொள்ள முடியும். அதற்கு அறிவியல் ரீதியாக சில அறிகுறிகள் இருக்கின்றன. அந்த அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் புத்திசாலி என்று தெரிந்து கொள்ளலாம்.
பலருக்கும் மறதி பிரச்சனை இருக்கும். திடீரென யாராவது கேள்வி கேட்டால் யோசித்து பதில் சொல்வோம். பழைய விஷயங்களை நினைத்து பார்க்கும் பொழுது அதற்கு அதிக நேரம் எடுத்துக் கண்டுபிடிப்போம். ஆனால் சிலரோ மிக அநாயசமாக எந்த கேள்வியை எந்த நேரத்தில் கேட்டாலும் அதற்கான பதில்களை அதிக நேரம் யோசிக்காமல் டக் டக் என்று சொல்லிவிடுவார்கள். பழைய விஷயங்களை நினைத்து பார்க்கும்போது அதீத நினைவாற்றல் இருக்கும். அப்படி இருந்தால் அவர்கள் அதிபுத்திசாலிகளாம்.
நாம் பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் சிலரை பார்த்து கற்பூர புத்தி என்று சொல்லி இருப்பார்கள். அதாவது மிக வேகமாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் என்று அர்த்தம். அதுபோல எந்த விஷயம் கற்றுக் கொண்டாலும் மிக வேகமாக புரிதல் திறனும், கற்றுக் கொள்ளும் ஆற்றலும் கொண்டவர்கள் புத்திசாலிகளாக கருதப்படுகிறார்கள்.
சிலர் தான் பார்த்ததை படித்ததை, கேட்டதை மட்டுமே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் புத்திசாலிகள் தங்களுக்கு என்று ஒரு தனித்த சிந்தனை முறையை வைத்திருப்பார்கள். தங்களுக்கென தனி சிந்தனை, புதுப்புது ஐடியாக்கள், ஒரு பிரச்சனையை தீர்க்கின்ற விதம், தன்னைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி சிந்திப்பது, இயற்கையை உற்று நோக்கி அதன் செயல்போக்கில் நடந்து கொள்வது என்று தனித்து தெரிவார்கள்.
தனக்கு எதிரே நடக்கும் விஷயத்தின் மீது எப்போதும் ஆர்வம் கொண்டிருப்பார்கள் . அதேபோல புதிதாக ஒரு விஷயத்தை செய்து பார்க்க விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். மிக உறுதியாக தான் நம்பும் விஷயங்களை செய்து பார்ப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேசமயம் தன்னைச் சுற்றியுள்ள விஷயங்களைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி தனித்தன்மையுடன் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டிருப்பார்கள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·