Support Ads
 ·   ·  137 posts
  • 2 members
  • 2 friends

பழனி முருகன் இரகசியம்

ஒரு சொட்டு வியர்வை துளியை குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்:

உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!!  

இரவில் வியர்க்கும் பழனி முருகன் சிலை

கார்த்திகை மாதம். ஐயப்ப பக்தர்கள் மாலை போடத் துவங்கி விடுவார்கள். ஐயப்பனைத் தரிசித்து விட்டு, அப்படியே, பிற ஆன்மீகத் தலங்களையும் தரிசிப்பது அவர்கள் வழக்கம். அப்படி, கூட்டம் கூட்டமாய் பழனிக்கும் வருவார்கள். இந்த சமயத்தில், பழனியில் உள்ள முருகன் சிலையின் அபூர்வ மகிமையைப் பற்றி, அவர்கள் தெரிந்து கொள்வதற்காக, தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இதோ….!

பழனி முருகன் இரகசியம்

அறிமுகம் ஏதும் தேவையில்லாத உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி. திரு-ஆவினன்-குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப் பட்டது.

போகர் சித்தர், தனது சீடர் புலிப்பாணி உட்பட மற்ற சீடர்களின் உதவியுடன் கன்னிவாடியில் உள்ள மெய் கண்ட சித்தர் குகையில் இந்த நவபாஷண சிலை செய்யப்பட்டுள்ளது.

லிங்கம், குதிரைப் பல், கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என ஒன்பது வகையான மிக ஆபூர்வமான மூலிகைகளைக் கொண்டு கடினப் பிரயாசையுடன் இந்த சிலையை உருவாக்கிய போகர், இந்த சிலையை வைக்க செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகத் தேடிய போது, அதற்கு பொருத்தமான இடம் இந்த பழனி மலை என்பதை தேர்வு செய்து, இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.

நவபாஷணம் என்ற இந்த தண்டாயுதபாணி சிலையின் பிரதான அம்சம், இரவில் இந்த சிலைக்கு வியர்க்கும். அது தான் இந்த நவபாஷண சிலையின் சிறப்பம்சம்!

அந்த வியர்வை பெருக்கெடுக்கும். அந்த ஒவ்வொரு வியர்வைத் துளியிலும், அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை இருக்கிறது. அதனால் தான், இங்கு தினந்தோறும் ராக்கால பூஜையின் போது, இந்த சிலை முழுவதிலும் சந்தனம் பூசப்படும்.மேலும், சிலைக்கு அடியில் ஒரு பாத்திரமும் வைக்கப் படும்.

மறுநாள் அதிகாலை சந்தனம் கலையப்படும் போது, அந்த சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

கீழே வைக்கப்பட்ட பாத்திரத்திலும் வழிந்து வரும் வியர்வை நீரானது கேசகரிக்கப்படும். இதனைக் கௌபீனத் தீர்த்தம் என்று சொல்கிறார்கள்.  

இது உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம். இந்த சந்தனமும், கௌபீன தீர்த்தமும், அரு மருந்தாகக் கருதப்படுகிறது. அதனால், இதைப் பிரசாதமாகப் பெறுவதற்காக, இந்த விபரம் தெரிந்தவர்கள் நூற்றுக் கணக்கில், காலை 4 மணிக்கு கோவிலில் குவிந்து விடுவார்கள். கி.மு. 500- லிருந்தே இம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.

சங்க கால இலக்கியங்களில் பழனியைப் பற்றியும், பழனியை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்த ஊரின் பழமையான பெயர் பொதினி. இப் பகுதியை ஆவியர்குடியைச் சேர்ந்த வேள் ஆவிக்கோப்பெரும்பேகன் என்ற மன்னர் ஆட்சி செய்துள்ளார்.

இப்பகுதியில் ஆவியர்குடி என்னும் தனி இனக் குழுவினர் மிகுதியாக இருந்துள்ளனர். எனவே அவர்களின் தலைவன் ஆவியர் கோமான் எனப் பெயர் பெற்றுள்ளான்.

அதனால் ஆவி நாடு என்றும், பின்னாளில் வைகாவூர் நாடு என்ற பெயரிலும் இப்பகுதி அழைக்கப் பட்டிருக்கிறது. இன்றும் இந்த ஊரின் நடுவே உள்ள குளம், வையாபுரிக் குளம் என்றே அழைக்கப்படுகிறது.

தற்போது, மலை மீது காணப்படும் கோயில்; பிற்காலப் பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் உள்ளது. கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கோயிலின் திருப்பணிகள் துவக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோயில் கருவறையின் வடபுறச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கருவறைச் சுவர்களில் உள்ள நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சார்ந்தது (கி.பி. 1520). இந்தக் கல்வெட்டில் தான் ஸ்ரீபழனிமலை வேலாயுதசாமி எனப் பெயர் இடம் பெற்றுள்ளது.

மற்ற கல்வெட்டுகள் இங்குள்ள மூலவரை இளைய நயினார் (சிவபெருமானின் இளைய மகன்) என்றே சுட்டிக் காட்டுகின்றன.விஜயநகர மன்னர் மல்லிகார்ஜூனர் காலத்தில் (கி.பி. 1446), அவரது பிரதிநிதியாக அன்னமராய உடையார் என்பவர் இந்தப் பகுதிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார். அந்தக் காலத்தில் மூன்று சந்தி கால பூஜைக்கும் திருவமுது, நந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் சாத்துவதற்கான செலவுகளுக்காக ரவிமங்கலம் என்ற ஊர் நன்கொடையாக வழங்கப் பட்டிருக்கிறது.

இந்த ரவிமங்கலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலப் பாடல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது, அந்தக் கல்வெட்டு பழனி அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.

இந்த பழனி மலைக் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஊருக்கு வட மேற்கே உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலும் மிகப் பழமையானது. பிரசித்தி பெற்றது. தமிழ் நாட்டிலேயே ரோப் கார், மற்றும் வின்ச் எனப்படும் மலை இழுவை ரயிலும் பக்தர்களின் வசதிக்காக இங்கு மட்டும் தான் அமைக்கப் பட்டிருக்கிறது.

அறிவியல், விஞ்ஞானம் ஒரு புறம் வளர்ச்சி அடைந்தாலும், அதையும் தாண்டி ஆன்மீகமும் வளர்ந்து கொண்டிருப்பதற்கு, இங்கு வரும் பக்தர்களின் கூட்டமே சாட்சி!

  • 274
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்