- · 5 friends
-
I
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங்களை அழகாக மாற்ற ஒரு அழகு குறிப்பை பார்க்கலாம்.
ஐந்து நிமிடத்தில் முகத்தை பொலிவு பெற செய்ய நமக்கு தேவையான பொருள் இரண்டு. முதலாவது காய்ச்சாத பசும்பால், இரண்டாவது பொருள் தேன். மனுக்கா தேன் என்று சொல்லுவார்கள். இது ஆர்கானிக் வகையைச் சேர்ந்த தேன். இதை வாங்கி வைத்துக் கொண்டால் ரிசல்ட் சூப்பராக கிடைக்கும்.
இந்த தேன் கிடைக்காதவர்கள் சாதாரண தேனை பயன்படுத்தலாம். ஆனால் ரிசல்ட் பாதி அளவே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பசும்பால் கிடைத்தாதவர்கள் பாக்கெட் பாலை பயன்படுத்துங்கள். காய்ச்சாத பாலை பயன்படுத்துங்கள். முதலில் முகத்தை சுத்தமாக கழுவி துடைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு சின்ன கிண்ணத்தில் காய்ச்சாத பாலை எடுத்துக்கொண்டு, ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து உங்கள் முகம் முழுவதையும் துடைத்து எடுத்து விட வேண்டும். ஐந்து நிமிடம் முகத்தில் ஒட்டி இருக்கும் பாலை அப்படியே விட்டுவிடுங்கள். மீண்டும் ஒரு காட்டன் துணியில் இந்த மனுகா தேன் ஊற்றி நனைத்து அந்த தேனால் நனைந்த துணியை உங்களுடைய முகத்தில் மாஸ்க் போட வேண்டும். இப்போது இந்த மாஸ்க் ஷீட் கடைகளில் கிடைக்கிறது.
கண் பகுதி மூக்கு, வாய் பகுதி ஓட்டையாக இருக்கும் அந்த ஷீட் வாங்கி அதில் தேனை ஊற்றி நினைத்து அப்படியே உங்களுடைய முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போட்டு ஐந்திலிருந்து ஏழு நிமிடம் கழித்து முகத்தில் இருந்து அந்த ஷீட்டை எடுத்து விடுங்கள். பிறகு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள். உங்களுக்கு கடையிலிருந்து இந்த மாஸ்க் ஷீட் வாங்க முடியவில்லை என்றால் வீட்டில் பழைய வெள்ளை காட்டன் வேட்டி இருக்கும் அல்லவா அதைக் கூட நீங்கள் இப்படி வெட்டி பேஸ் மாஸ்க் ஷீட்டாக பயன்படுத்தலாம்.
பிறகு பாருங்கள் உங்கள் முகம் எப்படி ஜொலிக்கிறது என்று. எப்போதுமே எந்த அழகு குறிப்பை பின்பற்றிய பின்பும் சோப்பு போட்டு முகத்தை கழுவக்கூடாது. நீங்கள் செய்த அழகு குறிப்பின் பலன் உங்களுக்கு முழுமையாக கிடைக்காமல் போய்விடும். டல்லா இருந்த உங்க ஸ்கின் அப்படியே டால் அடிக்க தொடங்கி விடும். உடனடியாக மேக்கப் போட்டுக்கிட்டு வெளியே கிளம்பலாம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·