- · 5 friends
-
I
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான டன் கணக்கில் ஏசியை உபயோகம் செய்கின்றனர்.
ஏசியின் பயன்பாடு என்பது நகர்ப்புறங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை வந்துவிட்டன. இவற்றின் வாங்கி பயன்படுத்தும் பலரும், அதன் பராமரிப்பு தொடர்பான விஷயங்களை தெரிந்துகொள்வது இல்லை.
இதனால் அடுத்தடுத்த பல விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இரவில் ஏசியை குளிர்ந்த நிலையில் வைத்துவிட்டு உறங்கும் பலர், தங்களின் குடும்ப உறவினர்களோடு மூச்சுத்திணறி அல்லது மின்சார தாக்குதல் போன்றவற்றுக்கு உள்ளாகி பலியாகின்றனர்.
இவை போன்ற பிரச்சனைக்கு மக்களின் அறியாமை என்பது முக்கிய காரணியாக அமைந்துள்ளது. ஏசியை நாம் பயன்படுத்தும்போது, அதனை பராமரிப்பது எப்படி? என்பது குறித்து தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது.
ஏசியை பொறுத்தமட்டில் முதலில் நாம் நமது வீட்டில் பயன்படுத்தப்படும் மின்விசிறியை ஒப்பிட்டு பேசலாம். மின்விசிறி முதலில் இயங்கும்போது சாதரணமாக குளிர்ந்த காற்றை தரும். அதுவே வேகம் அதிகம் வைத்து தொடர்ந்து இயக்க, அதன் பாகங்கள் சூடாகி வெப்பமான காற்று வரும்.
அதனை தொடர்ந்து நாட்கள் கணக்கில் இயக்கும்போது, இயற்கையாக அதன் கம்பி இடைவெளிகளில் அழுக்குள் படியும். அதனை நாம் சுத்தம் செய்வோம். அதனைப்போலவே, ஏசியின் தொடர் இயக்கமும் அதன் செயல்திறன் மற்றும் பிற விஷயங்களை பாதிக்கும். அவ்வப்போது பராமரிப்பு செய்தால் எவ்வித பிரச்சனையும் இருக்காது.
ஏசியை பொறுத்தமட்டில் பலரும் குளிருக்காக 16, 17 டிகிரிகளில் அறைவெப்ப நிலையை தொடர்ந்து பலமணிநேரம் உபயோகம் செய்வதுண்டு. இவை மிக பிரச்சனையை ஏற்படுத்தும் விஷயம். மின்சார கட்டணமும் உயரும்.
ஏசியை 16, 20, 24 என எந்த வெப்பநிலையில் வைத்தாலும் அதன் பயன் ஒன்றாகத்தான் இருக்கும். எதிலும் பொறுமை அவசியம். அதேபோல, நமது அறையின் அளவு முக்கியம். ஏசியில் வெளிப்புறத்தில் பொருத்தப்படும் இயந்திரம் தொடர்ந்து இயங்கினால் பிரச்சனை தான். 24 டிகிரி என்பது நல்லது, சாலச்சிறந்தது.
6 டிகிரியில் வைத்து தொடர்ந்து ஏசியை இயங்காவிட்டால், ஏசியின் வெளிப்புற இயந்திரம் தொடர்ந்து இயங்கும். இதனால் அது சூடாகி மின்வயர் பாதிக்கப்பட்டு தீப்பிடிக்கும் விபத்து நடக்கலாம். கரும்புகை சூழ்ந்து மூச்சுத்திணறி பலி ஏற்படலாம்.
100 சதுர அடி அளவுள்ள இடத்திற்கு 1 டன் ஏசி என்பது சிறந்தது. 200 சதுர அடி கொண்ட அறைக்கு 1 டன் ஏசி சிறந்ததாக இருக்காது. ஏனெனில் குளிர்ச்சியாக தொடர்ந்து ஏசி இயக்கப்படும் பட்சத்தில், அதன் செயல்பாடுகள் நாளடைவில் பிரச்சனையை தரும்.
ஆகையால் 100 சதுர அடி கொண்ட இடத்திற்கு 1 டன் ஏசியும், 200 சதுர அடி கொண்ட அறைக்கு 2 டன் ஏசியும் பயன்படுத்த வேண்டும். அறையின் அளவைப்பொறுத்து ஏசியின் டன் அளவையும் நாம் கணக்கிட்டு வாங்க வேண்டும்.
ஏசியில் நார்மல், இன்வென்ட்டர் என இரண்டு ரகம் உள்ளது. இதில் நார்மல் ஏசி உடனடியாக குளிரை வழங்கும். அதனால் மின்சாரம் விரைந்து செலவாகும். பராமரிப்பை பொறுத்தமட்டில் எளிதில், நடுத்தர வர்க்கத்திற்கு ஏற்றாற்போல குறைந்த தொகையில் முடியும்.
ஆனால், இன்வென்ட்டர் ஏசியை பொறுத்தமட்டில் பராமரிப்பு செலவு என்பது அதிகம். அதன் விற்பனை நிறுவனத்திடம் மட்டுமே அதற்கான பாகங்கள் இருக்கும். ஏசியின் வெளிப்புற இயந்திரம் நல்ல காற்றுள்ள பகுதியில் வைப்பது நல்லது.
15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் ஏசியை சுத்தம் செய்ய வேண்டும். குறைந்தது மாதத்திற்கு நான்கு நாட்களை கணக்கிட்டு இயக்க வேண்டும். குளிர்காலங்களில் ஏசியை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பது தவறானது. மாதக்கணக்கில் ஏசியை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு, அதனை மீண்டும் உபயோகம் செய்வது நல்லதல்ல.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·