·   ·  1076 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

மருத்துவ காப்புறுதியில்லாது கனடாவுக்கு வருபவர்களுக்கு…………!

அனுபவ படிப்புகளின் சில குறிப்புகளிலிருந்து ஏதாவது ஒன்றினையாவது சொல்ல வேண்டும் போல் உள்ளது.

சொல்கின்றேன்! ஆர்வமிருந்தால் தொடர்ந்து படியுங்கள்!

சற்று வயதான அந்த தமிழ் மூதாட்டி! மகளின் ஸ்பொன்ஸர் மூலமாக எங்கள் தாயக மண்ணிலிருந்து கனடாவுக்கு வருகை தந்திருந்தார்.

அடுத்த கிழமை துரதிர்ஷ்டவசமாக நோய்வாய்பட்டு கோமா நிலைமைக்கு சென்று வைத்தியசாலையில் சில நாட்கள் இருந்த பின்னர் மரணத்தினை தழுவியிருந்தார்.

(குடும்ப ஸ்பொன்ஸரில் கனடாவுக்கு வருகை தருபவர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு மாகாண அரசின் இலவச மருத்துவ காப்புறுதி திட்டத்திலிருந்து பெறும் சலுகைகள் எவையும் இருக்க மாட்டாது என்பது கனடாவில் வசிக்கும் பலரும் அறிந்த விடயமாகும்.)

எதுவிதமான தனியார் மருத்துவ காப்புறுதி திட்டங்களும் பெற்று வைத்திருக்கவுமில்லை.

இறுதியில் என்ன நடந்தது?

ஸ்பொன்ஸர் செய்த மகளுக்கு சுமார் $50,000 டொலர் வரை சிகிச்சை கட்டணம் செலுத்துமாறு வைத்தியசாலை கணக்கு அனுப்பியிருந்தது.

அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தினை செலுத்தாமல் விட்டால் அடுத்து என்ன நடக்கும்?

è தங்கள் வருமானத்திலிருந்’து மாதா மாதம் சட்டரீதியாக ஒரு குறிப்பிட்ட தொகையினை அறவிடலாம். (GARNISHEE ORDER)

è தங்கள் சொத்துகள், வங்கி சேமிப்புகளை சட்டரீதியாக பிடித்து வைத்திருத்தல் (Lien On Property & Bank Accounts)

è குறிப்பிட்ட கொடுப்பனவுகள், கடன்களை செலுத்தாதவர் என்பது பதிவாகிவிடும். (Registerd in Credit Bureau Records)

இந்த விடயங்கள் கனடா வாழ்வில் யாவருக்கும் தெரிந்த விடயம்!

நாம் எவையும் சொல்ல தேவையில்லை.

பொதுவாக கனடாவில் மருத்துவ காப்புறுதி திட்டங்கள் என எவையுமில்லாது வைத்தியசாலையின் அவசர நோயாளர் பிரிவுக்கு சென்றால் $304 டொலர் கட்டணம் செலுத்த வேண்டும்.

வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை செய்ய வேண்டிவந்தால், ஒரு நாளுக்கு $300 - $350 டொலர் வரை செலுத்தவேண்டும். இவை தவிர

• சத்திர சிகிச்சை செலவுகள் (DAY SURGERY)

* கதிர்வீச்சு படம் பிடித்தல் (X-RAY COST)

• உள் உறுப்புகளின் காந்த அதிர்வு அலை வரைவு பரிசோதனை (MRI TEST)

• மிக நுண்ணியமான உள் உறுப்புகளின் பரிசோதனை (CT SCAN & ULTRA SOUND TESTS)

* இரத்த, சிறுநீரக பரிசோதனைகள். (BLOOD & URINE TEST)

• மருத்துவ, பராமரிப்பு செலவுகள் (MEDICAL, NURSING, ATTENDING CARE COST)

இப்படி ஏராளமான செலவுகள் உள்ளடக்கப்பட்டே மொத்தமாக சுமார் $ 50,000 டொலர் வரை கட்டணம் செலுத்தியே ஆகவேண்டும் என அறிக்கை அனுப்பபட்டிருந்தது.

எதற்கும் தனியாக, இந்த மூன்று மாத காலத்திற்கும் அவசர மருத்துவ காப்புறுதி திட்டம் ஒன்றில் சேர்ந்திருந்தால் சந்தேகமேயில்லாமல் அது இப்படியான நிலைமையில் கைகொடுத்து பாதுகாத்திருக்கும்.

சரி! கனடாவில் இப்படியான நிலைமைகளை எதிர்கொண்டவர்களுக்கு ஏதாவது மாற்று வழி தீர்வு உண்டா? அதுவே இங்கு எழும் அடுத்த கேள்வி!

மாகாண அரசின் மருத்துவ சேவைகளின் மறுபரிசீலனை மேல்முறையீட்டு சபை என்ற நிறுவனத்திற்கு மனு செய்து பார்க்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட செலவுகள் என்ற பிரச்சனைக்குள் சிக்குபட்டவர்களின் விடயங்களில் எந்தவொரு தீர்மானத்தினையும் எடுப்பதற்கு அரச அதிகாரமுள்ள சபையாகும்.

தங்கள் பக்கத்தில் வலிமையான நியாயமிருந்தால் தங்களுக்கு பாதகமாகவுள்ள தங்கள் செலவுகள் நிராகரிக்கவும் படலாம், இல்லையேல் பகுதி பகுதியாக தங்களின் நிதி நிலவரங்களுக்கு ஏற்ப பண செலவினை திருப்பி செலுத்தும் வசதிகள் செய்து தரலாம்.

சுயாதீன நிதி வழங்கும் சபை (Independent Adjudicative Board) என இயங்கும் அவ் நிறுவனத்தின் விபரங்கள்

“மருத்துவ சேவைகளின் மறு பரிசீலனை மேல்முறையீட்டு சபை”

HEALTH SERVICES APPEAL & REVIEW BOARD

151, Bloor St.west 9th floor

Toronto,Ontario M55 I54

Phone: 416-327-8512

www,HSARB.ON.CA

“இந்த மேல் முறையீட்டு சபை” பற்றி தெரிந்து வைத்திருங்கள். சில நேரங்களில் தேவைப்படலாம். 

- SIVA-PANCHALINGAM, Canada

416-990-4908 (Cell)

[email protected]

  • 316
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்