-
- 2 friends

குலதெய்வ சாபம் எதனால் ஏற்படுகிறது? அதை போக்ககூடிய வழி என்ன?
சில பேருக்கு கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். ஆராய்ந்து பார்த்தால், உங்கள் குடும்ப தெய்வம் கோபத்தில் இருக்கிறது. வீட்டிற்குள் குலதெய்வம் வசிக்கவில்லை, குலதெய்வம் நிலை வாசலில் நிற்கிறது என்று சொல்லுவார்கள். இதை பொதுப்படையாக குலதெய்வ சாபம் என்று சொல்லுவோம். ஒரு குடும்பத்திற்கு குலதெய்வ சாபம் எப்படி வருகிறது, எந்த தவறுகளை செய்தால் குலதெய்வ கோபத்திற்கு ஆளாவோம், குலதெய்வத்தின் கோபத்தை எப்படி குறைப்பது என்பதை தெரிந்துக் கொள்வோம்.
ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்களுடைய குல தெய்வத்தை நினைக்காமல், குலதெய்வ கோவிலுக்கு செல்லாமல், குலதெய்வ வழிபாடு செய்யாமல் இருந்தால், குலதெய்வ கோபத்திற்கு ஆளாக கூடிய சூழ்நிலை ஏற்படும். தாய் தந்தையை மதிக்காமல் இருப்பது, அவர்களை வயதான காலத்தில் கைவிடுவது, முன்னோர்கள் இறந்த பின்பு அவர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை முறையாக செய்யாமல் விடுவது, போன்ற தவறுகளை நீங்கள் செய்தாலும் உங்கள் குடும்பத்திற்கு குலதெய்வ சாபம் ஏற்படும். பசுவை வதைப்பதாலும் குலதெய்வ சாபம் ஏற்படும்.
நீங்கள் செய்த தவறு என்ன என்று உணர்ந்து விட்டீர்கள். செய்த தவறை எண்ணி குலதெய்வத்திடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். மீண்டும் இப்படி ஒரு தவறை செய்ய மாட்டேன் என்ற உறுதி மொழியையும் குலதெய்வத்திடம் கொடுத்து விடுங்கள். குலதெய்வத்தை நினைத்து உங்களுடைய வீட்டில் சின்னதாக ஒரு பூஜையை செய்ய வேண்டும்.
பூஜைஅறையை அலங்காரம் செய்து குலதெய்வ படத்தின் முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து, ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு தாம்பூல தட்டில், ஒரு மஞ்சள் துணியின் மேல் ஒரு கைப்பிடி அளவு சில்லறை காசுகளை முடிச்சு போட்டுக்கோங்க. பிறகு உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை 27 முறை உச்சரிக்க வேண்டும். அடுத்து குலதெய்வ சாபம் நீங்குவதற்கு சித்தர்களால் அருளப்பட்ட மந்திரத்தை108 முறை மனமுருகி சொல்லுங்கள். குலதெய்வத்தை வீட்டிற்குள் வர வைக்கும்.
குலதெய்வத்தின் கோபத்தை தணிக்கும் மந்திரம்
ஓம் என் குலதெய்வமே வர வரஓம் வம் வம் உம் உம், என் படியேறி வா வா என் குல தெய்வமே
இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு கற்பூர ஆரத்தி காண்பித்து, பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். வீட்டில் எடுத்து வைத்திருக்கும் சில்லறை காசு முடிச்சை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது அதை கொண்டு போய் குலதெய்வ கோவிலில் உண்டியலில் செலுத்தி விடுங்கள். நம்பிக்கையோடு செய்தால் குலதெய்வத்தின் கோபம் குறைந்து, குலதெய்வ சாபம் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·