- · 5 friends
-
I

மேஜர் டாக்டர்.கிருஷ்ணவேணி
தமிழ்நாட்டில் - கரூர் மாவட்டம், சமுத்துவபுரத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி 7ஆம் வகுப்பு படிக்கும்போதே தாய் தந்தை இருவரையும் பறிகொடுக்கிறார்.
ஆதரவற்ற நிலையில் பலரின் உதவியால் தட்டி தடுமாறி 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைகிறார்.
அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய இரு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற அவருக்கு ஆசிரியர் ஒருவரின் உதவியால் மேல்நிலைப்பள்ளி படிப்பையும் படித்து முடிக்கிறார்.
2011 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில், மருத்துவத்திற்கான அவரின் கட் ஆப் மதிப்பெண் 196.75. நூலிழையில் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழக்கிறார்.
மருத்துவ கனவு தகர்ந்த நிலையில் வேறு படிப்பிற்கு ஆயத்தமான சூழலில்தான் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை பற்றி நண்பர்கள் கூற, சென்னைக்கு தனியாக பேருந்து ஏறுகிறார் கிருஷ்ணவேணி. வெளியுலகத்தை பற்றியே தெரியாத அவரின் அந்த முதல் பயணம்தான் தன் வாழ்க்கையையே மாற்றக்கூடிய பயணம் என்பது அப்போது அவருக்கு தெரியாது.
திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க ஆகும் செலவை ஏற்கிறது அகரம் அறக்கட்டளை.
தமிழ் வழியில் படித்த அவர் சந்தித்த சிக்கல்களும், ஆதாரவில்லாத அவருக்கு ஏற்பட்ட பாதிப்பும் ஏராளம்.
கடினமான உழைப்பால் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார். 2017 ல் ராணுவத்தில் பணி கிடைக்கிறது. பின் படிப்படியாக உயர்ந்து தற்போது மேஜர் அந்தஸ்தில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.
ஒரு மனிதன் கல்வியை மட்டும் நம்பி மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும் என்பதற்கு இன்று பெரும் நம்பிக்கையாக திகழ்கிறார் டாக்டர் கிருஷ்ணவேணி.
சிறு வயதில் பலர் நான் மருத்துவராகி பிற்காலத்தில் ஏழை எளியோருக்கு உதவுவேன் என வாக்குறுதி கொடுப்பார்கள்
ஆனால் கால சூழலில் அவர்களால் பெரிய அளவில் செயல்படுத்த முடியாமல் போகும். ஆனால் மெய்யாகவும் அந்த வார்த்தைகளை தற்போது நிருபித்தும் உள்ளார் கிருஷ்ணவேணி.
ஆம், மலைவாழ் கிராமங்களுக்கும் மருத்துவம் கிடைக்காத ஊர்களுக்கும் தனது நண்பர்களுடன் சென்று மருத்துவ விழிப்புணர்வு பணியையும் மேற்கொண்டு வருகிறார்.
கல்வி என்ற ஒன்றை கற்றுவிட்டால் காலத்தை வென்றுவிடலாம் என்பதற்கு தற்கால நாயகி கிருஷ்ணவேணியும் ஓர் உதாரணம் என்று சொல்லலாம்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·