- · 5 friends
-
I

உழைப்பாளர்நாள் நல்வாழ்த்துகள்.
நாம் செய்யும் செயல்கள் பணிகள் நமது அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.
நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், கிடைக்கக்கூடிய பலன் என்ன, அது உழைப்பிற்குப் போதுமானது தானா என்பதை எப்போதும் தெளிவாக அறிந்திருங்கள்.
நாம் செயல்புரிகிற விதம் சிறந்தது தானா, மற்றவர்கள் எப்படிச் செய்கிறார்கள், நம்மை விட அவர்கள் செயல்புரிகிற விதம் சிறந்ததாக உள்ளதா என்பதை விருப்பு வெறுப்பில்லாமல் பார்க்க வேண்டும்.
அப்படி நம்மை விடச் சிறப்பாக இருந்தால் அதைப் பின்பற்றத் தயங்கக்கூடாது. நம்முடைய வழிமுறை என்பதற்காக தரம் குறைந்த ஒன்றைக் கண்ணைமூடிப் பின்பற்றும் முட்டாள்தனத்தைச் செய்யக்கூடாது.
நாம் செய்யும் செயலில் முழுஈடுபாடும், முழுக் கவனமும் இருக்க வேண்டும். செய்யச் செய்ய செயலில் நாளுக்கு நாள் மெருகு கூடா விட்டால், தரம் உயரா விட்டால், செயலைத் திறம்பட செய்து முடிக்கும் நேரம் ஓரளவேனும் குறையா விட்டால் நமக்குள்ள ஈடுபாட்டிலோ, கவனத்திலோ குறை உள்ளது என்பது பொருள்.
நம் செய்யும் தொழில் தொடர்பாகப் புதிது புதிதாக வரும் மாற்றங்களை நுட்பங்களைக் கண்டிப்பாக கவனித்து வர வேண்டும். ஒருவர் ஒருநாளில் பத்தொன்பது மணிநேரம் உழைப்பதால் மட்டுமே உயர்வு வந்துவிடாது.
மூன்று மணிநேர உழைப்பால்கூட முன்னூறு ஆண்டுகால உயர்வைக்கொண்டு வந்துவிடமுடியும்.
சரியாகச் செய்தும், முயன்றும் போதிய பலன் தராத தொழிலை விட்டுவிடத் தெரிய வேண்டும்.'செண்டிமெண்டல்' காரணங்களுக்காக அதைத் தொடர்ந்து செய்வது முட்டாள்தனம். இப்படி அனைத்து அம்சங்களையும் ஆய்வில் கொண்டு உழைக்கும் உழைப்பே உயர்வைத் தரும்.
உழைப்பாளர்நாள் நல்வாழ்த்துகள்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·