Notice: unserialize(): Error at offset 48 of 1168 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 655 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 953 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 711 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 896 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54

Notice: unserialize(): Error at offset 48 of 1014 bytes in /home/tamilpoo/public_html/tamilpoonga.com/inc/classes/BxDolVoteReactions.php on line 54
பேருந்தில் பயணிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய ஒரு சில விஷயங்கள்..
 ·   ·  2219 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

பேருந்தில் பயணிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய ஒரு சில விஷயங்கள்..

• கட்டாயமாக (headset/earphones)ஐ காதில் மாட்டிக் கொள்ளவும் ஏனென்றால் அப்போதுதான் திருடர்களின் கண்கள் நம் கைபேசி மேல் படாது நீங்கள் பாடல்களை கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி பேருந்தில் பயணிக்கும் போது ஹெட் செட்டை மாட்டிக்கோங்க குறிப்பா வயர்ட் ஹெட் செட்..

• பேருந்தில் இருக்கை கிடைக்கவில்லை என்றால் உங்கள் பையை முன்பக்கமாக மாட்டிக்கொள்ளுங்கள்..

• பேருந்தில் பயணிக்கும் போது கையில் சில்லரை வைத்திருப்பது நல்லது இல்லையென்றால் பயணசீட்டின் பின்பு எழுதிக் கொடுத்து விட்டு சென்று விடுவார்கள் அதை நீங்கள் மறக்காமல் பேருந்திலிருந்து இறங்கும் போது கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்..

• நடத்துநரிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாதிர்கள் சில நேரம் அது ஒரு தேவையில்லாத பிரச்சினையாக மாறிவிடும்..

• கடைசி இருக்கையில் உட்கார்ந்து பயணிப்பதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள்...

• பேருந்தில் கதவு ஓரத்தில் நின்றுகொண்டு பயணிப்பது ஒரு அருமையான அனுபவம் ஆகும் ஆனால் எல்லா நேரமும் நமக்கு நல்ல நேரம் என்று சொல்ல முடியாதல்லவா ஆகையால் இதையும் தவிர்த்து விடுங்கள்....

• சட்டபையில் இருந்து பணம் எடுக்கும்போது கவனமாக உங்களது பணத்தை அல்லது பர்சை எடுக்கவும்..

• முடிந்தவரை நெரிசலான பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்கவும்...

• தெரியாதவர்களிடம் பேச்சுவார்த்தை கொடுப்பதை முடிந்தவரை தவிர்க்கவும்..

• அமர்வதற்கு முன் அது பெண்களின் இருக்கையா அல்லது முதியோர்கள் இருக்கையா என்று பார்த்துவிட்டு அமரவும் வீணாக அபராதத்திற்க்கு ஆளாகாதீர்கள்...

நீண்ட துர பேருந்தில் பயணப் பையுடன் தனியே பயணம் செல்பவராயின் ஒரு சிறிய கைப்பையில் உங்கள் முக்கியமான ஆவணங்கள், வீட்டுச் சாவி, பணம் இவற்றை தனியே வைத்து இதனை பயணப் பையில் பாதுகாப்பாக வைத்து எடுத்துச் செல்லுங்கள்.

பயணப்பை உங்கள் காலடியில் உங்கள் பார்வையில் இருக்கட்டும்.

வழியில் உணவு விடுதிகளில் பேருந்து நின்று நீங்கள் அங்கு செல்வதாயின் உங்களின் முக்கியமான சிறு கைப்பையை உங்களுடன் எடுத்துக்கொண்டு இறங்கவும். பேருந்தில் பயணப்பை மட்டுமே இருக்கட்டும்.

ஒருவேளை ஆடைகள் உள்ள பயணப்பை தொலைய நேர்ந்தாலும் உங்கள் முக்கியமான பொருள்கள் கைப்பையுடன் உங்களிடம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்.....

  • 10
  • More
Comments (0)
Login or Join to comment.