- · 5 friends
-
I

புது டிரெண்ட்
உலகெங்கும் விமானப் பயணம் என்பது மிகவும் விலையுயர்ந்த பயண வழிகளில் ஒன்றாக உள்ளது, அதை மிகவும் குறைந்த விலைக்கு தருவதற்கு புதிய ஐடியா ஒன்றை இத்தாலிய நிறுவனமான அவியோஇன்டீரியர்ஸால் வழங்கி உள்ளது.
அது வேறொன்றுமில்லை விமானத்தில் நின்று கொண்டே பயணிப்பதுதான் அந்த யோசனை!
அதற்காக புதிய விமான இருக்கை மாதிரி ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்!
விமான நிறுவனங்கள் தங்கள் செலவுகளை குறைக்கவும் மலிவான டிக்கெட்டுகளை வழங்கவும் இது உதவும் என்று கருதப்படுகிறது.
என்ன ஒன்று இதில் நீங்கள் நின்று கொண்டே பறக்க வேண்டியிருக்கும். ஆம், 2026 முதல், ஐரோப்பாவின் சில குறைந்த விலை விமான நிறுவனங்கள் தங்கள் பொருளாதார (economic class) இருக்கைகளின் சில பகுதிகளை நின்று கொண்டே பயணிக்க தகுந்தவாறு மாற்ற இருக்கிறார்கள் என்று யூரோ வீக்லி நியூஸ் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்கைரைடர் 2.0 என்று அழைக்கப்படும் இந்த இருக்கைகளின் வடிவமைப்பு பயணிகளை இலகுவாக பயணம் செய்யவும் பாதுகாப்பாக உணரவும் வித்யாசமான ஒரு சீட் பெல்ட்டையும் உள்ளடக்கியது.
பயணிகள் சுமார் 45 டிகிரி கோணத்தில் இதில் ஓய்வெடுக்க முடியும் மேலும் தங்கள் கால்கள் மற்றும் மைய தசைகளைப் பயன்படுத்தி தங்களைத் தாங்கிக் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது!
ஸ்கைரைடர் இருக்கைகள் விமான விதிமுறைகளுக்கு இணங்குவதாகவும், அனைத்து பாதுகாப்பு சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் ஏவியோஇன்டீரியர்ஸ் கூறுகிறது.
எனவே, பயணிகள் மிக மிக குறைந்த செலவில் விமானத்தில் பறக்கலாம் மேலும் அவசரநிலைகள் அல்லது விமானத்தில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று கூறுகிறார்கள்.