·   ·  1618 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 29.5.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். அரசு சார்ந்த சில புரிதல்கள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

 

ரிஷபம்

ஆடம்பரம் சார்ந்த பொருட்சேர்க்கை உண்டாகும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குடும்பத்தின் எதிர்காலம் குறித்ததான சிந்தனைகள் மேம்படும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்கால முதலீடுகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஜெயம் கிடைக்கும் நாள். 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மிதுனம்

எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பணிபுரிகின்ற இடத்தில் பொறுப்புக்கள் மேம்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆன்மிகம் சார்ந்த பணிகளில் புரிதல் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள். 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கடகம்

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சுகம் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

சிம்மம்

புத்தி கூர்மையால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மறுமணம் குறித்த சிந்தனைகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். நெருக்கமான சிலரின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். ஜெயம் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

கன்னி

பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். உடன் இருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபாரம் தொடர்பான இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைக்கான வாய்ப்புகள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

 

துலாம்

மனதளவில் இருந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் புதிய பாதைகள் புலப்படும். நெருக்கமானவர்களின் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். இரக்கம் வேண்டிய நாள். 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

 

விருச்சிகம்

உறவுகளிடத்தில் அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். பொழுதுபோக்கு செயல்களால் சோர்வு உண்டாகும். பயணம் சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். கனிவு வேண்டிய நாள். 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

தனுசு

புதுமையான சிந்தனைகளின் மூலம் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வெற்றி நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்

 

மகரம்

சமூகம் சார்ந்த பணிகளில் மாற்றமான சில அனுபவங்கள் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த கால தாமதங்கள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மறதி குறையும் நாள். 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கும்பம்

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய பிரச்சனைகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள். 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மீனம்

வாகனம் தொடர்பான பழுதுகளை சரி செய்வீர்கள். மனை சார்ந்த விவகாரங்களில் பொறுமை வேண்டும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உறவுகள் வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பாசம் வெளிப்படும் நாள். 

 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

  • 10
  • More
Comments (0)
Login or Join to comment.