'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய அப்டேட்
சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாநாடு' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.
'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியான போது அதில் இடம்பெற்றிருந்து சிம்புவின் லுக் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
இந்த படத்தில் முத்து என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் சிம்புவின் ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடிப்பதாகவும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில் சித்தி இத்னானி பாவை என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தி இத்னானி ஒருசில தெலுங்கு மற்றும் குஜராத்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva