காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்

விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகைச்சுவையில் கடைசிவரை ஆபாசத்திற்கு இடம் கொடுக்காமல் தூய்மையைக் கடைபிடித்தார் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். அவரது வழியை அப்படியே பின்பற்றியதால்தான் குலதெய்வம் ராஜகோபாலை ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டம் தேடி வந்தது. 1961-ல் மதுரை ரசிகர்கள் அவருக்கு இந்தப்பட்டத்தை வழங்கினார்கள்.

மதுரையிலிருந்து ஒருமுறை சேலத்தில் நாடகம் நடிக்கச் சென்றிருந்தபோது முதல்முறையாக கலைவாணரைச் சந்திக்கிறார்.

ராஜகோபாலின் நடிப்புத் திறனும் நகைச்சுவை உணர்வும் கலைவாணருக்குப் பிடித்துப்போக “எனது கம்பெனியில் நடிக்க விரும்பினால் வாங்க மைனர்!” என்று கலைவானார் அழைப்பு விடுகிறார். இதைவிடச் சிறந்த வாய்ப்பு அமையுமா என்ன? கலைவாணரின் நாடகக் குழுவில் சிறப்பு மற்றும் சிரிப்பு நடிகராக மாறினார் ராஜகோபால். பிறகு கலைவாணர் திரைப்படங்களுக்கு இடம்பெயர்ந்தபோது, ஒரே படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அப்போதெல்லாம் கலைவாணர் தான் நடித்த படங்களிலேயே அவருக்குப் பரிந்துரை செய்தார்.

கலைவாணரும் எம்.கே.டியும் நண்பர்களாக இருந்ததால் எம்.கே.டி. நடித்த ‘புதுவாழ்வு’ என்ற படத்தில் ராஜகோபாலுக்கு முதல் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அந்தப்படத்தை முந்திக்கொண்டு, ராஜகோபால் இரண்டாவதாக நடித்த ‘நல்ல காலம்’(1954) முதலில் வெளியாகிவிடுகிறது. அதன் பிறகு வரிசையாகப் படங்கள் கிடைக்க ராஜகோபால் தோன்றும் காட்சிகளில் எல்லாம் அவரது ‘டைமிங்சென்ஸை’ ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவர் கிசு கிசு குரலில் பேசுவதை வெகுவாக ரசித்தனர். இதனால் இரண்டே ஆண்டுகளில் விறுவிறுவென்று வளர்ந்த ராஜகோபாலின் பெயருக்கு முன்னால் ‘குலதெய்வம்’ என்ற படத்தின் பெயர் சேர்ந்து கொண்டது 1956-ம் வருடம்.

ஏ.வி.எம். கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘குலதெய்வம்’ படத்தில் மொத்தம் நான்கு கதாநாயகர்கள். அதில் கடைக்குட்டி இவர்தான். அந்தப் படத்தில் நகைச்சுவை குணச்சித்திரம் இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து நடித்த ராஜகோபால் அதன் பிறகு நகைச்சுவை குணச்சித்திர வேடங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார். பல படங்களில் மனைவியிடம் இவர் மாட்டிக்கொண்டு விழிப்பது அன்றைய 60களின் சம்சாரிகள் வாழ்வில் இருந்த தினப்பாட்டின் ஆதங்கமாக இருந்ததால் ராஜகோபால் வரும் காட்சிகளுக்கு அப்ளாஸ் விழுந்தது.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டே தனது சொந்த நாடகக் குழுவையும் தொடங்கி, பட்டி தொட்டியெங்கும் பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்தி வந்தார்.நல்ல பக்திமானாக விளங்கிய இவர், கலைவாணரைப் போலச் சிறந்த ‘வில்லுப்பாட்டு’ கலைஞராகவும் பெயர்பெற்றார். ‘ஐயப்பன் சரித்திரம்’, ‘முருகன் பெருமை’, ‘ஐயனார் கதை’, ‘நல்லத்தங்காள்’, ‘ஆறு அண்ணன்மார் அருக்காணி தங்கை’, ஆகிய வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளைத் தனது குழுவினருடன் தமிழகமெங்கும் இசைத்தார். தனது ஆசானுக்கு நன்றி பாராட்டும் விதமாக ‘கலைவாணர் வாழ்க்கை வரலாற்றையும்’ வில்லுப்பாட்டாக இசைத்தார்.

யார் கண் பட்டதோ, ஊர் ஊராகச் சென்று கலை வளர்த்து ஈட்டிய செல்வத்தை சொந்தப் படம் தயாரிக்க முதலீடு செய்து பெரும் இழைப்பை சந்தித்தார். சுமார் 15 ஆண்டுகாலம் திரைப்படத் துறையிலிருந்து விலகியிருந்தவரை கே. பாக்கியராஜ் தனது படங்களில் மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தார்.

பாக்கியராஜின் இயக்கத்தில் அவரது அப்பாவாகவும் இன்னும் பல குணச்சித்திரங்களிலும் நடித்த குலதெய்வம் ராஜகோபால் தன்னை கலைவாணரின் கடைசி சீடன் எனத் துணிச்சலாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அது மறுக்க முடியாத உண்மை.

குலதெய்வம் ராஜகோபால் அவர்களின் 93 வது பிறந்தநாள் இன்று.

  • 429
  • More
சினிமா செய்திகள்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன்
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.சுற்றம் காத்த
நடிகர் ரகுவரனின் நிஜ கேரக்டர் இதான் - நடிகை ரோகிணி
எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு